Vaa Vaathiyaar Review: வா வாத்தியார் எப்படியிருக்கு? மெய்யழகனுக்கு பிறகு கார்த்திக்கு கம்பேக் படமா?
சென்னை: நடிகர் கார்த்தி நடித்த "வா வாத்தியார்" திரைப்படம் எப்படி இருக்கிறது தெரியுமா? அதில் எந்த காட்சி நன்றாக இருக்கிறது. எவை சரியில்லை என்பது குறித்து அலசுவோம். பொங்கல் பண்டிகையையொட்டி இன்றைய தினம் இந்த படம் வெளியாகியுள்ளது.
"சூது கவ்வும்" என்ற படத்தை இயக்கிய நளன் குமாரசாமிதான் இந்த படத்தை இயக்கியிருந்தார். இதில் கார்த்தியுடன் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்தராஜ், கருணாகரன், ரமேஷ் திலக், தேனப்பன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஸ்டூடியோ கிரீன் எனும் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். எடிட்டர் வெற்றி கிருஷ்ணன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஆவர்.
வா வாத்தியார் படம் பெரும் போராட்டத்திற்கு பிறகு பொங்கலுக்கு வெளியானது. எம்ஜிஆர் ரசிகரான ராஜ்கிரண் தனது பேரன் ராமுவுடன் வசிக்கிறார். அந்த பேரனுக்கு எம்ஜிஆருடன் தொடர்பு இருப்பதாக அந்த தாத்தா நினைக்கிறார். இந்த படத்தில் அந்த தாத்தா காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
கார்த்தி எந்த கவலையும் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்கிறார். காவல் துறையில் பணியாற்றும் அவனது தாத்தா ஒரு ஆபத்தில் சிக்கிக் கொள்ள அப்போது பேரன் ராமுவிடம் நடக்கும் ஒரு மாற்றம்தான் படத்தின் கதை! படம் குறித்து நெட்டிசன் கூறுகையில் இந்த படம் 80, 90 களில் வெளியான படங்களை போல் இருக்கிறது.
எம்ஜிஆர் ரசிகரால் வளர்க்கப்படும் கார்த்தி , எம்ஜிஆர் போல் தோற்றத்தில் இருக்கிறார். அவரது ஸ்டைலையே பின்பற்றி நடிக்கிறார். மீசை கூட அந்த காலத்து இளைஞர் போல் இருக்கிறது. கார்த்தியிடம் எந்த ரோல் கொடுத்தாலும் அதை எளிதாக நடித்து விடுகிறார். இந்த படத்தில் கார்த்தி போட்டிருக்கும் ஆடைகள் எல்லாம் அருமை என்கிறார் ஒரு நெட்டிசன்.
படத்தில் எமோஷன்கள் அவ்வளவாக இல்லாவிட்டாலும் ஒட்டுமொத்தமாக பொங்கலுக்கு வந்த நல்ல பொழுதுபோக்கு கதையம்சம் கொண்ட படமாக இது உள்ளது. சில சீன்கள் ஜவ்வு போல் இழுக்கின்றன. கீர்த்தி ஷெட்டியின் நடிப்பு அருமையாக இருக்கிறது. பல ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்த இந்த படம் இன்று திரைக்கு வந்துள்ளது என்கிறார் இன்னொரு நெட்டிசன்.
இந்த படம் 2 மணி நேரம் 9 நிமிடங்கள் திரையிடப்படுகிறது. மெய்யழகன் படத்திற்கு பிறகு கார்த்திக்கு இந்த படம் நல்ல கதையம்சம் கொண்டதாக அமைந்துள்ளது என மற்றொரு நெட்டிசன் பாராட்டியுள்ளார். பொங்கலுக்கு ஜனநாயகன் படம் ரிலீஸாகாத நிலையில் வா வாத்தியார் படம் அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் படமாக அமைந்துள்ளது.
வா வாத்தியார் கடந்த டிசம்பர் மாதமே வெளியாக வேண்டிய படம், ஆனால் கோர்ட் கேஸில் இருந்ததால் இந்த படம் வெளியாக தாமதமானது. அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் ரூ 10.35 கோடி கடனை வட்டியுடன் சேர்த்து 21.78 கோடி ரூபாயாக செலுத்த ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று இந்த படத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு விசாரிக்கப்பட்டு பிறகு வா வாத்தியார் படம் வெளியாக தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து 3.75 கோடி ரூபாய் செலுத்த பட தயாரிப்பு நிறுவனம் தயாராக இருந்ததால் இந்த படத்திற்கான தடை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications