Karuppu Pulsar Review: தினேஷ் நடித்த ‘கருப்பு பல்சர்’ கதை இது? ப்ளூ சட்டை மாறன் இப்படி சொல்லிட்டாரே
சென்னை: அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான நடிகர் தினேஷ், அதற்குப் பிறகு 'விசாரணை', 'குக்கூ', 'ஒருநாள் கூத்து', 'திருடன் போலீஸ்' உள்ளிட்ட படங்களில் தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்த்தார். தற்போது இயக்குநர் முரளி கிருஷ்ணா இயக்கத்தில் உருவான 'கருப்பு பல்சர்' படத்தில் நடித்துள்ளார். கலையரசன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட நடிகர்கள் இணைந்து நடித்துள்ள இந்த படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகியது. வெளியீட்டின் முதல் நாளிலிருந்தே படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், தனது யூடியூப் சேனலில் 'கருப்பு பல்சர்' படத்தைப் பற்றி வெளியிட்ட விமர்சனம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. படத்தின் கதையமைப்பு, திரைக்கதை, காமெடி மற்றும் பேய் அம்சங்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ப்ளூ சட்டை மாறன் ரிவ்யூ
ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில், "படத்தின் ஆரம்பத்திலேயே இது பேய் படம் என்பதுபோல் தொடங்குகிறார்கள். காமெடி என்ற பெயரில் ரசிகர்களின் உயிரை எடுக்கிறார்கள். அவர்கள் படுத்துவது போல அந்த பல்சரும் ஏன் அமானுஷ்யமான வேலைகளை செய்கிறது என்பதற்கு எந்த தர்க்கமும் இல்லை. கதைக்குள் வருவதற்கே இடைவேளை ஆகிவிடுகிறது. முதல் பாதியில் வாங்கிய அடியையே தாங்க முடியவில்லை. இரண்டாவது பாதியில் அவர்கள் சொல்ல வரும் கதையை ஏற்றுக்கொள்ள உடம்பே ஒத்துழைக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "இந்த மாதிரியான கதைகளை ஹாலிவுட்டில் ஏற்கனவே ஆயிரம் முறை எடுத்துவிட்டார்கள். இதை மொக்கையான காதல் படமா, மொக்கையான பேய் படமா, மொக்கை காமெடி படமா என்று சொல்லுவது என்றே தெரியவில்லை. எந்த ஜானர் என்று முடிவு செய்ய முடியாத அளவுக்கு, எல்லாவற்றையும் கலக்கி ஒரு மொக்கை படமாக உருவாக்கியிருக்கிறார்கள்" என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அட்டகத்தி தினேஷ் பேச்சு
தினேஷ் குறித்து பேசும் போது, 'அட்டகத்தி' படத்தில் அவரின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு 'விசாரணை' போன்ற தீவிரமான படங்களில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு சர்வதேச அளவிலும் கவனம் ஈர்த்தது. 'குக்கூ' படத்தில் அவரது உணர்ச்சி பூர்வமான நடிப்பு பாராட்டுகளை குவித்தது. இதன் பின்னணியில், 'லப்பர் பந்து' போன்ற வெற்றிப் படங்கள் மூலம் அவர் மீண்டும் ஒரு மாஸ் இமேஜை பெற்றார்.
இந்த சூழலில், 'கருப்பு பல்சர்' போன்ற படத்தில் தினேஷின் திறமை முழுமையாக பயன்படுத்தப்பட்டதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்துக்குப் பிறகு, "திறமை வாய்ந்த நடிகரை இப்படியான கதைகளில் வீணடிப்பது சரியா?" என்ற விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் வெளிப்படத் தொடங்கியுள்ளன.
கருப்பு பல்சர் விமர்சனம்
'கருப்பு பல்சர்' படம் பேய், காதல், நகைச்சுவை ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கலந்த முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு முன்பே தெரிவித்திருந்தது. ஆனால் திரையரங்குகளில் படம் பார்த்த சில ரசிகர்கள், காமெடி வேலை செய்யவில்லை என்றும், திரைக்கதை சிதறியுள்ளதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னொரு தரப்பினர், படத்தில் சில சுவாரஸ்யமான காட்சிகள் இருந்தாலும் முழுமையான திருப்தியை தரவில்லை எனக் கூறுகின்றனர்.
ப்ளூ சட்டை மாறனின் கடுமையான விமர்சனம் வைரலாகி வரும் நிலையில், 'கருப்பு பல்சர்' படம் எதிர்பார்ப்பை எவ்வளவு அளவிற்கு பூர்த்தி செய்துள்ளது என்ற விவாதம் மேலும் தீவிரமடைந்துள்ளது. வரும் நாட்களில் பார்வையாளர்களின் வாய் வழி விமர்சனங்கள் மற்றும் வசூல் நிலவரம் தான் இந்த படத்தின் இறுதி நிலையை தீர்மானிக்கும் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications