Youth OTT: வசூலில் சக்கை போடு.. மெகா ஹிட் அடித்த கென் கருணாசின் 'யூத்' ஓடிடியில் ரிலீஸ்! எதில் பார்க்கலாம்?
சென்னை: நடிகர் கருணாஸ் மகன் கென் இயக்கி நடித்துள்ள யூத் படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த மார்ச் மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூலில் சக்கைப் போடு போட்ட இந்த திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. காதல், நகைச்சுவையுடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம் எப்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்த ரசிகர்கள் இன்று முதல் படத்தினை பார்க்கலாம்.
நடிகர் கருணாசின் மகன் கென். கென் அப்பா கருணாசுடன் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் ஆகி சில படங்களில் நடித்துள்ளார். தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளி வந்து மெகா ஹிட் அடித்த அசுரன் படத்தில் கென் நடிப்பு பலராலும் பாராட்டைப் பெற்றது.

பின்னர் விடுதலை 2 படத்திலும் நடித்து இருந்தார். அடுத்தடுத்து படங்களில் நடித்த கென் திடீரென இயக்குனர் அவதாரமும் எடுத்தார். நகைச்சுவை கலந்த காதல் படமாக யூத் என்ற படத்தினை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதேபோன்று தேவதர்ஷினி, அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் உள்ளிட்டோரும் நடித்து இருந்தனர்.
பள்ளிப் பருவ காதலை மையமாக கொண்டு இந்த படத்தை இயக்கி நடித்துள்ளார் கென். கடந்த மார்ச் 19 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியானது. ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. வசூலிலும் சக்கை போடு போட்டது. படத்தில் உள்ள பாடல்களும் இணையத்தில் ஹிட் அடித்த நிலையில் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில் தான் யூத் படம் எப்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என பலரும் எதிர்பார்த்து இருந்தனர். முதலில் ஏப்ரல் முதல் வாரத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முதல் யூத் படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் யூத் படத்தினை பார்க்க முடியும்.
யூத் படத்தின் கதையை பொறுத்தவரை பள்ளியில் படிக்கும் கென் தன் காதலியை தேடி அலைகிறார். பள்ளி முடிந்து கல்லூரி சென்ற பிறகும் தன் காதலியை தேடி அலைகின்றார். அப்போது மீனாட்சிக்கும் - கென்-க்கும் காதல் மலர்கிறது. விடுமுறையால் ஊருக்கு மீனாட்சி சென்றுவிட, அந்த நேரத்தில் மற்றொரு பெண் கென்னிடம் காதலை சொல்ல அதனையும் கென் ஏற்றுக் கொள்கிறார்.
இந்த விஷயம் ஊருக்கு சென்றிருந்த மீனாட்சிக்கு தெரியவர அவர் கென் உடனான காதலை பிரேக் அப் செய்கிறார். இதற்கு பிறகு கென் வாழ்வில் நடப்பது தான் மீதி கதை.. வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டங்களில் அவர் கடந்துசெல்லும்போது, அன்பின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்கிறார். இந்த படத்தை தற்போது நெட்பிளிக்சில் காணலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications