KH–RK Promo: கமல், ரஜினி படத்தில் இத்தனை விஷயம் இருக்கா? ப்ளூ சட்டை மாறன் வேற இப்படி சொல்லி இருக்காரு!
சென்னை: தமிழ் சினிமா வரலாற்றில் மீண்டும் நடக்காத ஒரு தருணமாக ரசிகர்கள் கொண்டாடும் வகையில், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணையும் KH - RK படத்தின் ப்ரோமோ வெளியாகி இணையத்தை முழுவதும் கலக்கி வருகிறது. 45-47 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இரு புரட்சிகர நட்சத்திரங்கள் ஒரே திரையில் தோன்றப் போகிறார்கள் என்ற செய்தியே ரசிகர்களுக்கு ஒரு திரை திருவிழாவாக மாறியிருக்கிறது.

இந்திய அளவில் பேசப்படும் கூட்டணி
மல்டி ஸ்டார், பான் இந்தியா படங்கள் ட்ரெண்டாக இருக்கும் இந்த காலத்தில், தமிழ் சினிமாவின் இரண்டு அடையாளங்களே இணைந்து நடிப்பது இயல்பாகவே தேசிய அளவிலான கவனத்தை பெற்றுள்ளது.
ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் முடித்துவிட்டு, சிபி சக்ரவர்த்தி இயக்கும் அடுத்த படத்திற்குத் தயாராகி வருகிறார். அந்த படத்தை முடித்த பிறகே கமலுடன் இணையும் இந்த மாபெரும் திட்டத்தில் அவர் முழுமையாக களமிறங்கப் போகிறார்.
இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிக்க, இசையை அனிருத் ரவிச்சந்தர் அமைக்கிறார் என்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ப்ரோமோவில் மறைந்திருக்கும் சினிமா ரெஃபரன்ஸ்கள்
ப்ரோமோ ஆரம்ப காட்சியிலேயே உலக சினிமா கிளாசிக் படங்களின் போஸ்டர்கள் காட்டப்படுவது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. The Godfather - கேங்க்ஸ்டர் சினிமாவின் அடையாளம், Once Upon a Time in America - கல்ட் கிளாசிக். இதில் முதல் படம் கமலைவும், இரண்டாவது படம் ரஜினியையும் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்திருக்கலாம் என சினிமா ரசிகர்கள் டிகோட் செய்து வருகின்றனர்.
மேலும் இருவரும் 70-80களின் கெட்டப்பில் தோன்றுவது, படம் ஒரு பீரியட் ஸ்டைலிஷ் டிராமா ஆக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
"யார் ஹீரோ?" - கவனம் பெற்ற கடைசி காட்சி
ப்ரோமோவின் கடைசி ஷாட்டில் கமல் கேட்கும் "யார் ஹீரோ?" என்ற டயலாக் தான் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்படுகிறது. இதிலிருந்து இருவரும் நண்பர்கள் அல்ல முரண்பட்ட கேரக்டர்கள் இருவருக்கும் கிரே ஷேடு என்ற கணிப்புகள் கிளம்பியுள்ளன.
வன்முறை இல்லாத ஸ்டைலிஷ் படம்
முன்னதாக லோகேஷ் கனகராஜ் கூறிய கதையில் இருந்த அதிக வன்முறையை தவிர்க்க வேண்டும் என இரு நட்சத்திரங்களும் விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் வந்திருந்தன. அதனால் இந்த படம் ஸ்டைல், கதாபாத்திர மோதல், கிளாசிக் மேக்கிங் ஆகியவற்றை மையமாக கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
1000 கோடி வசூல் சாத்தியம்
மேலும் பான் இந்தியா ஸ்டார் நடிகர்கள் சேர்க்கப்பட்டால், இந்த படம் தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி வசூல் கிளப்பை தொட வாய்ப்புள்ளதாக டிரேட் வட்டாரங்கள் கணிக்கின்றன.
ப்ளூ சட்டை மாறன் பதிவு
இந்த ப்ரோமோ வெளியாகியதும், பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் போட்ட பதிவு அதிகமாக பேசப்பட்டது. அவர் குறிப்பிட்டது: "இனி எனக்கு 'உலக நாயகன்' பட்டம் வேண்டாம்... என் படங்களில் பயன்படுத்த மாட்டேன் என்றார் கமல். இன்று ரஜினியுடன் நடிக்கும் பட ப்ரோமோ வந்துள்ளது." என்றிருக்கிறார்.
இன்றைய கொண்டாட்டம்
1970-80களில் ஒரே காலத்தில் தொடங்கியவர்கள், வெவ்வேறு ஸ்டைல், தனித்தனியான ரசிகர் படை என இருந்த இந்த இரண்டு பேரும் இன்று மீண்டும் இணைவது சினிமா வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications