Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘கோச்சடையான்’ தயாரிப்பாளருக்கு ரூ.2.52 கோடி அபராதம்! செலுத்தாவிட்டால் 6 மாதம் சிறை – உயர்நீதிமன்றம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் நடித்த 'கோச்சடையான்' படம் கடந்த 2014 ஆம் வெளியானது. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகருக்கு இப்போது பெரிய சட்ட சிக்கல் ஒன்று வந்து சேர்ந்திருக்கிறது. விளம்பர நிறுவனம் ஒன்றிடமிருந்து வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காமல், கொடுத்த காசோலை 'பவுன்ஸ்' ஆன வழக்கில், தயாரிப்பாளர் ரூ.2.52 கோடி அபராதம் கட்ட வேண்டும். இல்லையென்றால் 6 மாதம் சாதாரண சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் நீதிபதி சுந்தர் மோகன் தீர்ப்பு வழங்கினார். முரளி மனோகரும், அவருடைய தயாரிப்பு நிறுவனமான மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனமும், ஏற்கனவே 2021-ம் ஆண்டு மாநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர். அதை 2023-ல் நகர சிவில் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து தயாரிப்பாளர் தரப்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

Kochadaiiyaan Rajinikanth Tamil Cinema

இந்த மனுவை பகுதியளவில் ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், "சிறை தண்டனை அவசியமில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட விளம்பர நிறுவனத்திற்கு உரிய தொகை கிடைக்க வேண்டும்" என்ற அடிப்படையில், 6 மாத சிறை தண்டனையை அபராதமாக மாற்றி உத்தரவிட்டுள்ளது. அதாவது, நான்கு வாரங்களுக்குள் ரூ.2.52 கோடியை செலுத்த வேண்டும். அதை செலுத்தத் தவறினால், பழைய தீர்ப்புப்படி 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

குறிப்பாக, 'கோச்சடையான்' படம் உருவான போது, அந்தப் படத்தின் 'போட்டோரியலிஸ்டிக் மோஷன் கேப்சர்' தொழில்நுட்பத்துக்காக விளம்பர நிறுவனம் ஒன்று நிதி உதவி செய்ததாக கூறப்படுகிறது. அந்தத் தொகையை திருப்பிக் கொடுக்க தயாரிப்பாளர் தரப்பு கொடுத்த காசோலை திரும்பி வந்ததால்தான் இந்த வழக்கு தொடங்கியது. பல ஆண்டுகளாக நீதிமன்றங்களில் சுற்றிக் கொண்டிருந்த இந்த விவகாரத்தில், இப்போது உயர்நீதிமன்றம் இறுதியான கட்டுப்பாடு விதித்திருக்கிறது.

இதனால், தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்களின் தயாரிப்பில் ஏற்படும் நிதி சிக்கல்கள் மீண்டும் விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது. 'கோச்சடையான்' மாதிரி தொழில்நுட்ப ரீதியாக பிரமாண்டமாக முயற்சி செய்த படங்களுக்குப் பின்னால், இப்படியான சட்டப் பிரச்சினைகளும் இருக்கிறது என்பது இந்த வழக்கின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+