Kombu Seevi 3rd day box office: சண்முக பாண்டியனின் கொம்பு சீவி.. அதிகரித்த 3வது நாள் வசூல்! அதுவும் இவ்வளவாம்!
சென்னை: பொன்ராம் இயக்கத்தில் உருவான கொம்புசீவி படம் வெளியானதுமே சினிமா வட்டாரத்துல கலவையான ரியாக்ஷன்தான். "வருத்தப்படாத வாலிபர் சங்கம்", "ரஜினி முருகன்" மாதிரி படங்கள்ல பொன்ராம் காட்டின கிராமத்து எளிமையும் காமெடியும் இங்கயும் இருக்கும் அப்படின்னு எதிர்பார்த்தாங்க. அதோட, விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் ஹீரோவா நடிச்சிருக்கார் என்பதும் படத்துக்கு கூடுதல் கவனம் கிடைக்க காரணம் ஆனது.
கதை ரீதியா பார்த்தா, வைகை அணை கட்டப்பட்டதால பாதிக்கப்பட்ட சில கிராமங்களோட வாழ்க்கை, அவர்களோட நிலம், அடையாளம், உரிமை எல்லாம் தான் படத்தோட மையம். இந்த கனமான விஷயத்தை முழுக்க சீரியஸா சொல்லாம, கிராமத்து காமெடி, கலாட்டா, குடும்ப உணர்ச்சி இதையெல்லாம் கலந்து பொன்ராம் சொல்ல முயற்சி பண்ணியிருக்கார்.

ஆனா அந்த கலவை எல்லா இடத்திலும் சமநிலையா அமையல. சில காட்சிகள் ரசிக்க வச்சாலும், சில இடங்கள்ல காமெடி அதிகமா போய் சலிப்பு ஏற்படுத்துச்சுன்னு ரசிகர்கள் சொல்றாங்க. திரைக்கதையில இன்னும் கொஞ்சம் இறுக்கம் இருந்திருந்தா படத்தோட தாக்கம் கூடிருக்கும் அப்படின்னு விமர்சனமும் இருக்கு.
படத்துல சரத்குமார் முக்கிய வேடத்துல வர்றார். சமீப காலத்துல அவர் நடித்த ஒரு படம் நல்ல வரவேற்பு பெற்றதால, இங்கயும் பெரிய அளவுல பேசப்படுவார் அப்படின்னு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனா இந்த படத்துல அவரோட கேரக்டர் கதைக்கு தேவையான அளவுக்கே பயணிக்குது. அதே நேரம், அனுபவமுள்ள நடிகர் என்கிற வகையில அவர் இருப்பு கதைக்கு ஒரு ஸ்டேபிலிட்டி கொடுக்குது.
சண்முக பாண்டியனைப் பொறுத்தவரைக்கும், இந்த படம் அவருக்கு ஒரு "டிசெண்ட் ஷோகேஸ்". நடிப்புல பெரிய தவறுகள் இல்ல. ஆக்ஷன் சீன்கள்லவும், மாஸ் காட்சிகள்லவும் தியேட்டர்ல விசில், கை தட்டல் இருந்தது. தேமுதிக ஆதரவாளர்களும், விஜயகாந்த் ரசிகர்களும் படம் பார்க்க வந்தது அவருக்கான கூட்டத்தை உறுதி பண்ணியது. இதன் மூலம் அவருக்குன்னு ஒரு அடிப்படை ரசிகர் வட்டம் உருவாக ஆரம்பிச்சிருக்கு என்பதையும் மறுக்க முடியாது.
வசூல் நிலவரம் பார்த்தா, படம் மெதுவான ஆரம்பம் தான் எடுத்திருக்கு. ரிலீஸ் ஆன முதல் இரண்டு நாட்கள்ல பெரிய ஓட்டம் இல்லை. தினமும் சுமார் 30 லட்சம் ரூபாய் அளவுக்கு தான் வசூல் நடந்ததாக சொல்லப்படுது. ஆனா மூன்றாவது நாள்ல கொஞ்சம் முன்னேற்றம் தெரிஞ்சிருக்கு. அந்த நாள்ல மட்டும் சுமார் 36 லட்சம் ரூபாய் வரை வசூல் ஆகியிருக்கிறது. மூன்று நாட்களை சேர்த்து பார்த்தா, படம் இதுவரை சுமார் 66 லட்சம் ரூபாய் கலெக்ஷன் செய்திருக்கிறது. மூன்றாவது நாள்ல வசூல் கொஞ்சம் உயர்ந்தது தயாரிப்பாளருக்கு ஓரளவு நிம்மதி கொடுத்திருக்கிறது.
மொத்தத்தில் பார்த்தா, கொம்புசீவி ஒரு பெரிய பிளாக்பஸ்டர் இல்ல. அதே நேரம் முழுக்க தோல்வி படம்னு சொல்லக்கூடிய நிலையும் இல்லை. சராசரி ரசிகர்களுக்கான கிராமிய எண்டர்டெய்னராக இது பயணிக்குது. பொன்ராமின் பழைய வெற்றிகளை நினைச்சு போனா ஏமாற்றம் இருக்கலாம். ஆனா சண்முக பாண்டியனுக்கு இது அனுபவம் சேர்க்குற ஒரு படி. அடுத்தடுத்து அவர் தேர்வு செய்யும் கதைகள் தான் அவரோட சினிமா பயணத்தை தீர்மானிக்கப் போகுது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications