Kombu Seevi OTT: ஓடிடியில் வந்த கொம்பு சீவி திரைப்படம்.. எதில், எப்போது பார்க்கலாம்? வெளியான தகவல்
சென்னை: பொன்ராம் இயக்கத்தில், மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம், ஓடிடி தளத்தில் வெளியாகும் என்பதால் மீண்டும் கவனம் பெற தொடங்கியுள்ளது.
கடந்த டிசம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான 'கொம்பு சீவி' திரைப்படத்தில், நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிராமத்தின் பெரிய மனிதராக வெளியில் நல்லவர் போல தோன்றும் அவரது கதாபாத்திரம், உள்ளுக்குள் கஞ்சா கடத்தல், மீன் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், அந்த பணத்தை ஊர் மக்களின் நலனுக்காக பயன்படுத்தும் ஒரு இரட்டை முகம் கொண்ட மனிதராக சரத்குமார் இந்த படத்தில் வருகிறார்.

சண்முக பாண்டியன், சரத்குமாரை தந்தை போன்ற ஒருவராக மதித்து காப்பாற்றும் இளைஞராக நடித்துள்ளார். இவர்களுக்கிடையே உருவாகும் பாசம், நம்பிக்கை மற்றும் ஊருக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் மனநிலை தான் படத்தின் மையம். வெள்ளம், வறுமை, மக்கள் சந்திக்கும் அன்றாட பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெறும் ஐந்து கோடி ரூபாய் டீல், அதனால் ஏற்படும் சிக்கல்கள், போலீஸ் வலை மற்றும் அதிலிருந்து அவர்கள் தப்பிக்கிறார்களா இல்லையா என்பதே மீதிக் கதையாக அமைந்துள்ளது.
படத்தில் சண்முக பாண்டியன் முந்தைய படங்களை விட சற்று மெருகேறிய நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், வலுவற்ற திரைக்கதை காரணமாக ரசிகர்களிடையே படம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதன் பிரதிபலிப்பாக பாக்ஸ் ஆபீஸிலும் எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை.
முதல் இரண்டு நாட்களில் சுமார் 30 லட்சம் ரூபாய், மூன்றாவது நாளில் 36 லட்சம் ரூபாய், நான்காவது நாளில் 25 முதல் 30 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்த படம், அதன் பின்னர் வசூலில் சரிவை சந்தித்து வணிக ரீதியாக தோல்வி படமாக அமைந்தது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல்படி, 'கொம்பு சீவி' திரைப்படம் ஜனவரி 23ஆம் தேதி டெண்ட்கொட்டா (Tentkotta) ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. திரையரங்குகளில் மிஸ் செய்த ரசிகர்களும், குடும்ப பார்வையாளர்களும் ஓடிடியில் இந்த படத்தை பார்க்க ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓடிடி ரிலீஸுக்குப் பிறகு 'கொம்பு சீவி' திரைப்படம் புதிய பார்வையாளர்களை ஈர்த்து, மறுபடியும் பேசுபொருளாக மாறுமா என்பதே தற்போது சினிமா வட்டாரங்களில் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications