kombuseevi review: கொம்பு சீவி எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்! சண்முக பாண்டியனுக்கு ஒரு வெற்றி பார்சல்!
சென்னை: நடிகர் விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் மற்றும் நடிகர் சரத்குமார் இணைந்து நடித்த கொம்புசீவி திரைப்படம் இன்று தியேட்டரில் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு அதிகமான பாசிட்டிவ் கமெண்ட்ஸ்கள் வந்து வண்ணமாக இருக்கிறது. படம் பார்த்த ரசிகர்கள் தங்களுடைய விமர்சனத்தை தெரிவித்து இருக்கிறார்கள்.
விஜயகாந்தின் மூத்த மகன் அரசியலிலும், இரண்டாவது மகன் சினிமாவிலும் அடி எடுத்து வைத்திருக்கின்றனர். விஜயகாந்த் உயிரோடு இருக்கும்போது சண்முக பாண்டியன் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் தொடர்ந்து அவரால் சினிமாவில் நடிக்க முடியவில்லை. தன்னுடைய தந்தையை கவனித்துக் கொள்வதற்காக தான் நடிப்பை விட்டு விலகி இருந்ததாக பேட்டிகளில் பேசியிருக்கிறார்.

இப்படியான நிலையில் இந்த வருடத்தில் ஆரம்பத்தில் அவர் நடித்த படைத்தலைவன் படம் வெளியாகி இருந்தது. அதைத் தொடர்ந்து இப்போது கொம்பு சீவி திரைப்படம் வெளியாகி இருக்கிறது. கொம்பு சீவி படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கி இருக்கிறார். அதுபோல இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்திருக்கிறார்.
உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தில் சண்முக பாண்டியனின் வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் இந்த படத்தின் கதை அமைந்திருக்கிறது என்று படத்தைப் பார்த்தவர்கள் பாராட்டி இருக்கிறார்கள்.
இயக்குனர் பொன்ராம் சிவகார்த்திகேயன் வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டவர் என்பதால் அதேபோல இப்போது சண்முக பாண்டியனுக்கு ஒரு ஏனியாக இருப்பாரா? என்ற கேள்வி அனைவரிடமும் இருந்தது. இதனாலேயே தேமுதிக தொண்டர்கள் மட்டுமல்லாமல் அதிகமான ரசிகர்களும் இந்த படத்தை பார்ப்பதற்காக ஆர்வம் காட்டி முதல் நாள் காட்சிக்கு சென்றிருக்கிறார்கள்.
படத்தைப் பார்த்து ரசிகர்களும், ரசிகைகளும் படம் நன்றாக இருக்கிறது என்ற பாராட்டி இருக்கிறார்கள். சரத்குமாருடன் சேர்ந்து சண்முக பாண்டியனும் நன்றாகவே நடித்திருக்கிறார், இயக்குநர் பொன்ராம் உண்மை கதையை எடுத்து திரைக்கதையை சூப்பராக அமைத்திருக்கிறார், இது கொஞ்சம் வித்தியாசமாக அமைந்திருக்கிறது. படத்தில் அதிகமாக விஜயகாந்த் சிம்டம்ஸ் இருந்தாலும் சண்முக பாண்டியன் தனித்துவமாக தெரிகிறார் என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

அதுபோல் இன்னொரு ரசிகை பேசும் போது, இந்தப் படத்தை குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கலாம். படத்தில் காமெடி, சென்டிமென்ட் எல்லாம் கலந்து இருக்கிறது சண்டை எல்லாம் ரொம்ப இல்ல சண்முக பாண்டியன் பார்க்கையில் விஜயகாந்தை பார்ப்பது போலவே இருக்கிறது. இடைவேளை காட்சி நன்றாக இருந்தது, கிளைமேக்ஸ்க்கு முன்பு வரும் காமெடி மற்றும் கிளைமேக்ஸ் நன்றாக இருந்தது என்று பாராட்டி இருந்தார்.
அதுபோல இன்னொரு ரசிகர் படத்தில் எல்லா சீன்களும் நன்றாக இருந்தன. எனக்கு விஜயகாந்த் பிடிக்கும் அவரது மகனையும் பிடிக்கும், படம் ரொம்ப பிடித்திருக்கிறது என்று பாராட்டி இருந்தார். ஒரு ரசிகர் படம் சுவாரசியமாக போய்க்கொண்டிருக்கிறது... சரத்குமார் மற்றும் சண்முக பாண்டியன் இருவரும் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார்கள் என்றும் பாராட்டி இருக்கிறார்.
படத்தின் பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது குறிப்பாக வஸ்தாரா பாடல் நன்றாக வந்திருக்கிறது என்றும் ஒரு ரசிகை பாராட்டி இருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளியான படங்களில் இருந்து இந்த படம் மாறுபட்டு இருப்பதாகவும் ஒரு ரசிகர் பதிவு வெளியிட்டு இருக்கிறார். அதோடு இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் நடிகை தரணிகாவும் கேரக்டராக வாழ்ந்திருக்கிறார் என்றும் சிலர் பாராட்டி இருக்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications