LIK Box Office Day 4: நான்கு நாட்களில் "எல்ஐகே” வசூல் இத்தனை கோடியாம்! மெல்ல முன்னேறும் விக்னேஷ் சிவன் படம்
சென்னை: தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான எல்ஐகே படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில், இளம் தலைமுறையின் கவனத்தை ஈர்த்த பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்திருப்பது இந்த எதிர்பார்ப்புக்குக் காரணமாக இருந்தது. இந்த நிலையில் நான்கு நாட்கள் வசூல் நிலவரம் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விக்னேஷ் சிவன் இயக்கம்
விக்னேஷ் சிவனுக்கு இந்த படம் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. முன்னதாக அஜித்துடன் இணையும் வாய்ப்பு நழுவிச் சென்ற நிலையில், ஒரு வலுவான வெற்றியை வழங்கி தன்னை மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் அவர் இருந்தார். அதற்காக, சமீப காலத்தில் தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்துவரும் பிரதீப் ரங்கநாதனை தேர்வு செய்தது ஒரு முக்கிய முடிவாக பார்க்கப்பட்டது.
இந்த படத்தில் பிரதீப்புடன் எஸ்.ஜே.சூர்யா, சீமான், க்ரித்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையை அனிருத் அமைத்துள்ளார். இந்த கூட்டணி, படம் வெளியாகும் முன்பே ஒரு வலுவான ஹைப்பை உருவாக்கியது.
படப்பிடிப்பு முடிந்த பின்னரும் சில காரணங்களால் வெளியீடு தாமதமானது. இறுதியாக, பெரிய போட்டி படங்கள் எதுவும் இல்லாத சூழலில் படம் வெளியானது. இதனால், பாக்ஸ் ஆபிஸில் படம் எளிதாக முன்னிலை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் படம் வெளியானதும் ரசிகர்களின் கருத்துகள் கலவையாகவே இருந்தன. கதைக்கரு ஒரு அளவிற்கு வித்தியாசமாக இருந்தாலும், அதை திரைக்கதையாக வடிவமைத்த விதம் பலருக்கும் திருப்தி அளிக்கவில்லை என்ற கருத்து அதிகமாகக் கேட்கப்பட்டது. குறிப்பாக, திரைக்கதையில் வலிமை குறைவாக இருந்ததாகவும், இயக்கத்தில் ஒருங்கிணைப்பு சரியாக அமையவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
சிலர் படத்தின் ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் மற்றும் சிஜி வேலைகளை பாராட்டியிருந்தாலும், முழுமையான அனுபவமாக படம் அமையவில்லை என்றே பெரும்பாலான கருத்துக்கள் இருந்தன.
பிரதீப் ரங்கநாதன் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் சிறிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து வெற்றி பெற்றிருந்த அவரது பட வரிசையில் இது அதே அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதே அவர்களது கருத்தாக உள்ளது.
வசூல் நிலவரம்
வசூல் நிலவரத்திலும் இதன் தாக்கம் தென்பட்டுள்ளது. படம் வெளியான முதல் மூன்று நாட்களில் ஓரளவுக்கு நல்ல வசூல் இருந்தது. ஆனால் நான்காவது நாளிலிருந்து வசூல் குறையத் தொடங்கியது. குறிப்பாக நான்காவது நாளில் சுமார் 3.44 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்ததாக கூறப்படுகிறது. இதில் தமிழில் சுமார் 2.76 கோடி ரூபாய் மற்றும் தெலுங்கில் சுமார் 68 லட்சம் ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது. இதற்கு முந்தைய நாளில் சுமார் 8.69 கோடி ரூபாய் வசூல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த திடீர் சரிவு, படத்தின் நீண்டநாள் ஓட்டம் குறித்து சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
மொத்தத்தில், "எல்ஐகே" படம் ஒரு பெரிய தோல்வி எனக் கருதப்படவில்லை. அதே நேரத்தில், அது ஒரு முழுமையான வெற்றிப் படமாகவும் அமையவில்லை. நல்ல கதைகரு இருந்தபோதிலும், அதை முழுமையாக திரையில் கொண்டு வர முடியாததே இந்த படத்தின் குறையாக பார்க்கப்படுகிறது.
இனி வரும் நாட்களில் இந்த படம் வசூலில் நிலைநிறுத்திக்கொள்கிறதா அல்லது மேலும் சரிவை சந்திக்கிறதா என்பது தான் திரை வட்டாரங்களில் கவனிக்கப்படும் முக்கிய அம்சமாக உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications