Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

LIK Day 2 Box Office: மெல்ல உயர்ந்த ‘எல்ஐகே’ 2வது நாள் வசூல்.. அதுவும் இத்தனை கோடி? பிரதீப்க்கு அடுத்த ஹிட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கிய லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியது. இளம் தலைமுறையிடம் தொடர்ந்து வரவேற்பைப் பெற்ற பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்திருப்பதும், எஸ்.ஜே.சூர்யா, சீமான், க்ரித்தி ஷெட்டி ஆகியோர் இணைந்திருப்பதும் படத்திற்கு கூடுதல் கவனம் பெற்றுத் தந்தது. இதனால் இந்த படத்தின் இரண்டாவது நாள் வசூல் (LIK Day 2 Box Office) நிலவரம் அதிகரித்து இருக்கிறது.

LIK Day 2 Box Office Box Office Pradeep Ranganathan Vignesh Shivan

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட வசூல் நிலவரம்

படம் வெளியான முதல் நாளில் சுமார் 7 கோடி ரூபாய் வசூல் செய்ததாகத் தகவல்கள் வெளியாகின. இது ஒரு பெரிய ஓபனிங் என்று சொல்ல முடியாவிட்டாலும், முற்றிலும் குறைவான தொடக்கமும் இல்லை. இரண்டாவது நாளில் வசூல் சற்று உயர்ந்து சுமார் 7.5 கோடி ரூபாயை எட்டியது. இதனால் இரண்டு நாட்களில் மொத்த வசூல் சுமார் 15 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை, படம் மெதுவாக ஓட்டத்தை பிடிக்க முயற்சிக்கிறது என்பதைக் காட்டுகிறது.

LIK Day 2 Box Office Box Office Pradeep Ranganathan Vignesh Shivan

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட கதை

படத்தின் விமர்சனங்களைப் பார்க்கும்போது, கருத்துக்கள் கலந்தே வருகின்றன. கதையின் மையக் கருத்து புதுமையாக இருந்தாலும், அதை திரைக்கதையாக கொண்டு சென்ற விதத்தில் பல இடங்களில் தளர்ச்சி இருந்ததாக ரசிகர்கள் கூறுகின்றனர். சில காட்சிகள் தேவையில்லாமல் நீளமாகவும், சில இடங்களில் காமெடி எதிர்பார்த்த அளவிற்கு வேலை செய்யவில்லை என்றும் விமர்சனங்கள் வந்துள்ளன.

அனிருத் இசை

இதற்கிடையில், அனிருத் ரவிச்சந்தர் இசை படத்திற்கு முக்கியமான பலமாக அமைந்துள்ளது. பாடல்கள் மற்றும் பின்னணி இசை பல காட்சிகளை தாங்கி நிறுத்தியிருக்கிறது. அதேபோல் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பு மற்றும் ஸ்க்ரீன் பிரசன்ஸ் இளம் ரசிகர்களை ஈர்த்துள்ளது. எனினும் சிலர் அவரது நடிப்பு தனுஷ் பாணியை நினைவுபடுத்துகிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரதீப் ரங்கநாதன் இப்போது கோலிவுட் சென்சேஷனாக வளம் வந்து கொண்டிருக்கிறார். அவர் தொட்டதெல்லாம் ஹிட் என்று சொல்ற மாதிரி, அவர் நடித்த மூன்று படங்களுமே 100 கோடிக்கு மேலான வசூல் செய்திருக்கிறது. இதனால் இந்த படம் எந்த அளவிற்கு வசூல் பெரும் என்ற எதிர்பார்ப்பும் அனைவருக்கும் இருக்கிறது.

LIK Day 2 Box Office Box Office Pradeep Ranganathan Vignesh Shivan

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்

அதுபோல லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை பற்றி பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில், "நல்ல ஐடியா இருந்தாலும் அதை முழுமையாக பயன்படுத்தவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், சில காட்சிகள் காமெடி காட்சிகளை திணிக்க வைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் இந்த படம் விக்னேஷ் சிவன்க்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு வந்திருப்பதால், இது ஒரு கம்பேக் படமாக எதிர்பார்க்கப்பட்டது. தற்போதைய வசூல் மற்றும் விமர்சன நிலையைப் பார்த்தால், படம் இன்னும் தனது நிலையை உறுதி செய்யாத நிலையில் உள்ளது.

மொத்தத்தில், "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" படம் பெரிய ஹிட் என்ற நிலையை இன்னும் அடையவில்லை. அதே நேரத்தில், முற்றிலும் தோல்வி என்றும் சொல்ல முடியாத நிலையில் உள்ளது. வரும் நாட்களில் ரசிகர்களின் வாய்மொழி பாராட்டு மற்றும் வார இறுதி வசூல் தான் இந்தப் படத்தின் இறுதி நிலையை தீர்மானிக்கும் என்பது உறுதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+