LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம்
சென்னை: கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் ஒரே நாளில் வெளியான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி ( LIK) மற்றும் TN 2026 என இரண்டு படங்களும் மூன்று நாட்கள் கடந்த நிலையில், வசூல் நிலவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் மற்றும் சில அரசியல் பிரபலங்கள் திரைத்துறை பிரபலங்களை ட்ரோல் செய்த தநா 2026 (TN 2026) படத்திற்கு ஆரம்பத்தில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும் இப்போது வசூல் நிலவரம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

LIK படத்தின் நிலை
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி நடித்த இந்த படம், ரிலீஸுக்கு முன்பே அதிகமாக பேசப்பட்டது. பல வருடங்களாக இந்த படம் இப்போது திரைக்கு வரும் அப்போது திரைக்கு வரும் என்று அதிகமான பில்டப் இருந்த நிலையில் இப்போ அதிகமாக கலாய்க்கப்பட்டு வருகிறது.
2040 பின்னணியில் உருவாக்கப்பட்ட கதை, தொழில்நுட்ப அம்சங்கள், இசை ஆகியவை காரணமாக நல்ல ஓப்பனிங் கிடைத்தது. ஆனால் படம் வெளியான பிறகு, திரைக்கதை அமைப்பு குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன. கான்செப்ட் புதுமையாக இருந்தாலும், அதை முழுமையாக பயன்படுத்தவில்லை என்ற கருத்து ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது.
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட மூன்று நாள் வசூல்
நாள் 1 - ₹7.05 கோடி
நாள் 2 - ₹7.95 கோடி
நாள் 3 - ₹7.70 கோடி
மொத்தமாக சுமார் ₹22.7 கோடி வசூல் செய்துள்ளது. உலகளவில் சுமார் ₹30 கோடி வரை சென்றிருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன. இந்த படத்தில் பட்ஜெட்டை ஒப்பிடும்போது, வசூல் இன்னும் அதிகமாக இருக்க வேண்டியது என்றே டிரேட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
TN 2026 மாறாத நிலை
உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நடராஜன், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்த 'TN 2026' படம் பெரிய அளவிலான எதிர்பார்ப்புடன் வெளியானது. இந்த படத்தின் டிரைலர் பெரிதாக பேசப்பட்ட நிலையில் படத்தில் என்னதான் கதை இருக்கிறது என்ற ஆர்வம் தான் மக்களுக்கு இருந்தது. படம் வெளியான முதல் மூன்று நாட்களில் வசூல் குறைந்த அளவிலேயே உள்ளது.
மூன்று நாள் வசூல்
நாள் 1 - ₹0.21 கோடி
நாள் 2 - ₹0.21 கோடி
நாள் 3 - ₹0.33 கோடி
மொத்தம் சுமார் ₹0.75 கோடி வசூல் செய்துள்ளது. இந்த எண்ணிக்கை, படம் திரையரங்குகளில் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை என்பதைக் காட்டுகிறது.
இரண்டு படங்களின் வேறுபாடு
ஒருபுறம் 'LIK' படம் நல்ல ஓப்பனிங் பெற்றாலும், அதனை தொடர்ந்து நிலைநிறுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மற்றொரு புறம் 'TN 2026' படம் ஆரம்பத்திலிருந்தே குறைந்த வசூலுடன் தான் நகர்கிறது.
இரண்டு படங்களும் வெவ்வேறு பாதையில் சென்றாலும், இரண்டிற்கும் பொதுவான விஷயம் எதிர்பார்த்த அளவிற்கு வலுவான வரவேற்பு இல்லை என்பதே.
ரசிகர்கள் கருத்து
சமீபத்தில் வெளியாகும் டெக்னாலஜி அடிப்படையிலான கதைகள், எல்லா தரப்பினரையும் திருப்திப்படுத்த முடியாமல் இருப்பதாக சிலர் கூறுகின்றனர். அதே நேரத்தில், எளிமையான கதைகள் கொண்ட படங்கள் தான் தொடர்ந்து ஓட்டம் பெறுகின்றன என்ற கருத்தும் உள்ளது.
'LIK' குறித்து சிலர் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களையும் பதிவு செய்து வருகின்றனர். அதே சமயம், 'TN 2026' பற்றிய பேச்சு கூட குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று நாட்கள் முடிவில் பார்க்கும்போது, 'LIK' படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தாலும் வசூல் பெரிதாக முன்னேற்றம் அடையாமல் இருக்கிறது. பிரதீப் ரங்கராஜன் நடித்த எல்லா படங்களும் 100 கோடி வசூல் செய்த நிலையில் இந்த படம் அந்த அளவிற்கு வெற்றி கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது
அதுபோல 'TN 2026' படம் துவக்கத்திலேயே சிரமமான நிலையை சந்தித்துள்ளது. இந்த படங்களின் வசூல் நிலவரம் இனிவரும் விடுமுறை நாட்களில் மாற்றம் ஏற்படுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications