லிட்டில் வாட்டர்மெலன் ஸ்டார் ராஜகுமாரன்.. "கெட்ட பய சார் இந்த காளி".. மகேந்திரனை பற்றி என்ன தெரியும்
சென்னை: நடிகை தேவயானியின் கணவரும், இயக்குநருமான ராஜகுமாரன் சமீபத்தில் தந்திருந்த பேட்டிகளில் டைரக்டர் மகேந்திரனின் படங்களை பற்றி விமர்சித்திருந்தார். அதேபோல வெற்றிமாறன், மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோரின் படைப்புகளையும் நடிப்பையும் விமர்சித்திருந்தார். இந்நிலையில், ராஜகுமாரனின் கருத்து குறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தன்னுடைய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "மகேந்திரன் எடுத்த நான்கைந்து படங்களும் முத்திரை பதித்த படங்கள்.. ராஜகுமாரன் போன்ற ஒரு இயக்குநர், மகேந்திரன் போன்ற ஒரு ஜாம்பவானை விமர்சனம் செய்ய அருகதை அற்றவர்..

மகேந்திரனின் படங்கள் சினிமா டைரக்டராக வர விரும்பும் பலருக்கும் உந்துதலாக இருந்திருக்கின்றன.. அவரது படங்களை பார்த்துதான் இன்று பல பிரபல இயக்குனர்கள் கோடம்பாக்கத்தில் உருவாகியிருக்கிறார்கள்.
கெட்ட பையன் சார் இந்த காளி
முள்ளும் மலரும் படம் காலத்தால் அழியாத ஒரு படைப்பு. அண்ணன்-தங்கை பாசத்தை விளக்கும் இந்தப் படத்தில் ரஜினி ஒரு காட்சியில் "ரெண்டு கை ரெண்டு கால் இல்லனாலும் பொழைச்சுப்பான் சார், இந்தக் கெட்ட பையன் சார் இந்த காளி" போன்ற வசனங்கள் இன்றும் பேசப்படும் பஞ்ச் டயலாக்குகளாக உள்ளன.
"என் தங்கச்சி வள்ளி பட்டினியா இருப்பாள் என்றால், அது இந்த காளி செத்தப்பறம்தான்" என்று ரஜினி பேசும் வசனங்கள் காண்போரின் இதயத்தை உலுக்கின. இந்த வசனங்களை எல்லாம் 45 வருடங்கள் கழித்தும் நாம் பேசி கொண்டிருக்கிறோம்.
'நெஞ்சத்தைக் கிள்ளாதே' படம் அன்று சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.. இந்த படத்தை தழுவிதான் மணிரத்னத்தின் 'மௌன ராகம்', அதனை தழுவிதான் அட்லீயின் 'ராஜா ராணி' போன்ற படங்கள் எடுக்கப்பட்டன..
'உதிரிப்பூக்கள்' படத்தின் ஆழமான வசனங்களும், விஜயன் ஊர் மக்களிடம் பேசும் கிளைமாக்ஸ் வசனமும் யாராலும் எழுத முடியாதவை... "இந்த ஒரு நாள் ஊரிலிருக்கின்ற எல்லாரையும் கெட்டவனாக்கி விட்டேன்" என்று விஜயன் பேசியது மறக்க முடியாத வசனம்.
முள்ளும் மலரும்
வெறும் 9 படங்கள் மட்டுமே இயக்கிய மகேந்திரன், தமிழ் சினிமாவில் ஒரு முத்திரையைப் பதித்துவிட்டார்.. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் விருப்பமான டைரக்டர் மகேந்திரன்தான், விருப்பமான படம் 'முள்ளும் மலரும்' தான்.. இதனை தன்னுடைய பேட்டிகளிலேயே பதிவு செய்துள்ளார்..
ராஜகுமாரன் என்னதான் சாதிச்சிட்டாரு? தேவயானியின் கணவர் என்பதை தவிர வேறு எந்த சாதனையையும் சினிமாவில் செய்ததில்லை. 'நீ வருவாய் என', 'விண்ணுக்கும் மண்ணுக்கும்' போன்ற படங்கள் தேவயானியுடனான தன் காதலை வளர்க்க எடுக்கப்பட்ட காதல் காட்சிகளாகவே இருந்தன..
ஃபிலிம் பை ராஜகுமாரன்
அரவிந்த்சாமியை வைத்து சாசனம் என்ற படத்தை மகேந்திரன் எடுத்து கொண்டிருந்தபோது, மகேந்திரனின் உதவியாளர், 'Film By Mahendran" என்று ஏன் நீங்கள் டைட்டிலில் போட்டுக் கொள்வதில்லை? என்று கேட்டுள்ளார்..
அதற்கு மகேந்திரன், ஒரு சினிமா எடுப்பது என்பது கூட்டு முயற்சி.. பலரது உழைப்பு உள்ளது.. என் பெயரை மட்டும் போட்டுக் கொள்வது ஆணவமான விஷயமாக நினைக்கிறேன் என்றாராம்.. இப்படியான மகேந்திரனை பற்றி ராஜகுமாரனுக்கு என்ன
தெரியும்? ஆனால், ராஜகுமாரன் தனது படங்களில் 'ஃபிலிம் பை ராஜகுமாரன்' என்றே போட்டுக் கொள்கிறார்.
தேவயானி நல்ல நடிகையாக மட்டுமல்ல, அவருக்கென தனி மரியாதை உள்ளது.. ராஜகுமாரனின் தேவையற்ற விமர்சனங்கள், கவுரவமான இடத்தில் உள்ள தேவயானிக்கு கெட்ட பெயரை வாங்கி தருகின்றன. மகேந்திரனின் இன்னொரு வடிவம்தான் டைரக்டர் பாலா.. பல இயக்குநர்கள் மகேந்திரனால் ஈர்க்கப்பட்டவர்கள்.
குட்டி வாட்டர் மெலன் ஸ்டார்
படைப்பாளியாக முழு உரிமையும் கொண்ட ஒரு நாயனாக விளங்கக்கூடிய மகேந்திரனை விமர்சிக்க ராஜகுமாரனுக்கு எந்த தகுதியும் இல்லை.. இதனால் சினிமா உலகமே கொந்தளித்து கிடக்கிறது.. இயக்குநர் அமீர், மனநோயாளியாக மாறிவிட்டாரோ ராஜகுமாரன் என்று ட்வீட் செய்துள்ளார்..
குட்டி வாட்டர் மெலன் ஸ்டார்' போல் ஆகிவிட்டார் ராஜகுமாரன்.. பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆசைப்படறாரு போல.. அதனால்தான் இத்தகைய கோமாளித்தனமான பேட்டிகளை கொடுத்து கொண்டிருக்கிறார் போல" என்றெல்லாம் காட்டமாக கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications