வன்முறை, போதை என் படத்தால் தான் அதிகரிக்குதா? இனி அப்படி படமே எடுக்க மாட்டேன்! லோகேஷ் கனகராஜ் ஆதங்கம்
சென்னை: சினிமாவை பார்த்து தான் சமூகம் கெட்டுப்போகுதுன்னு குற்றம் சாட்டுற குரல்கள் அதிகரிச்சுக்கிட்டே இருக்குற இந்த நேரத்துல, அந்த குற்றச்சாட்டுகளின் மையத்துல நிக்க வைக்கப்பட்டிருக்கும் ஒரு பெயர்-லோகேஷ் கனகராஜ். ஒரு பக்கம் இந்திய அளவுல பேசப்படும் இயக்குநர். இன்னொரு பக்கம், 'வன்முறையை விதைக்குறவர்'ன்னு சொல்லி விமர்சிக்கப்படுறவர். இந்த இரண்டுக்கும் நடுவுல நின்று, இன்று அவர் கொடுத்த விளக்கம் தான் சினிமா வட்டாரங்களையே திரும்பிப் பார்க்க வச்சிருக்குது.
மாநகரம் மாதிரி ஒரு ரியலிஸ்டிக் படத்துல ஆரம்பிச்ச லோகேஷ், கொஞ்சம் கொஞ்சமா தன்னோட உலகத்தை உருவாக்கினார். கைதி, விக்ரம்ன்னு வந்தப்போ, ஆக்ஷன் சினிமாவுக்கே ஒரு புதிய மொழியை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தார். அதுல இருந்து LCUன்னு ஒரு யூனிவர்ஸ் உருவானது. ரசிகர்கள் மட்டுமில்ல... ஹீரோக்களும் "லோகேஷ் படம் வேணும்"ன்னு வரிசை கட்ட ஆரம்பிச்சாங்க.

அந்த வரிசையில தான், விஜய், கமல், ரஜினி மாதிரி டாப் ஹீரோக்களும் இணைந்தாங்க. ஆனா, அந்த கூட்டணிகளில் எல்லாமே வெற்றியா முடியல. விஜய்யுடன் லியோ, ரஜினியுடன் கூலி-இரண்டு படங்களுமே எதிர்பார்ப்புக்கு மாறாக தோல்வியை சந்திச்சது. அந்த தோல்விகள், லோகேஷ் மீது இருந்த விமர்சனங்களை இன்னும் கூர்மையாக்கின.
அதுக்கப்புறம் தான், 'லோகேஷ் படங்கள் என்றாலே வன்முறை'ன்னு ஒரு முத்திரை ஒட்ட ஆரம்பிச்சது. அதீத ஆக்ஷன், ரத்தம், போதை-இதெல்லாம் சேர்ந்து, "இந்த மாதிரி படங்கள் தான் இளைஞர்களை தவறான பாதைக்கு தள்ளுது"ன்னு சொல்லுற குரல்களும் வலுத்தது. சில சம்பவங்களுக்குப் பிறகு, அந்த விமர்சனம் நேரடியாக லோகேஷ் பெயருடனே இணைக்கப்பட்டது.
இத்தனை நாட்கள் இதைப்பற்றி வெளிப்படையாக பேசாம இருந்த லோகேஷ், இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த போது, அந்த அமைதியை உடைத்தார்.
"ஒரு படம் பார்த்தாலே ஒருத்தன் வன்முறையாளன் ஆகிடுவான் என்றால், அப்போ கல்வி, குடும்பம், சமூக சூழல் எல்லாம் எதுக்கு? எல்லாத்துக்கும் சினிமாவை மட்டும் காரணம் சொல்லி, என் படங்களால்தான் வன்முறை அதிகரிச்சதுன்னு சொல்றது நியாயமில்லை"ன்னு அவர் சொன்ன போது, அதுல ஆதங்கமும், சோர்வும் இருந்தது.
போதை பொருள் குற்றச்சாட்டுக்கு வந்தப்போது, "நான் எடுத்த எந்த படத்துலயும் போதை எடுத்தா சந்தோஷம்னு சொல்லல. அதுக்கு எதிராகத்தான் பேசிருக்கேன். பெரிய ஹீரோக்களை வைத்து 'Say No To Drugs'ன்னு சொல்றேன். இது சினிமாவுக்குள்ள மட்டும் இல்ல... வெளியிலும்"ன்னு சொன்னார்.
அதுபோல நான் போதைக்கு எதிராக பல பிரசாரங்களை செய்து கொண்டிருக்கிறேன். 15,000 மாணவர்களிடம் போதைப்பொருள் எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று உறுது மொழி எடுக்க வைத்திருக்கிறேன் என்று கூறினார். மேலும் கோவையில் இருக்கும் 60 கல்லூரிகளில் போதைக்கு எதிராக குறும்படங்களை மாணவர்களை எடுத்து வைத்து அதில் யார் முதலிடத்தில் வருகிறார்களோ அவர்களை எனது உதவி இயக்குனராக சேர்த்து இருக்கிறேன் என்றும் சொல்லி இருக்கிறார்.
அந்த பேச்சின் கடைசில அவர் சொன்ன வரிகள் தான், இந்த விவாதத்துக்கு ஒரு வேற லெவல் கொடுத்தது. "நான் இப்படி படங்கள் எடுக்காம விட்டா சமூகம் மாறும் என்றால்... அப்படி எடுப்பதையே விட்டுவிடத் தயார்" என்று ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார்.
-
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications