LIK 1st day Box Office: லவ் இன்சூரன்ஸ் கம்பெனியின் முதல் நாள் வசூல் இத்தனை கோடி? ஆரம்பமே அசத்தல்
சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம், நீண்ட நாட்களாக பல தடைகளை கடந்து இறுதியாக திரையரங்குகளில் வெளியானது. வெளியாவதற்குமே முன்பே நல்ல ஹைப் இருந்த நிலையில், முதல் நாளே படம் எப்படி ஓடியது என்பதுதான் தற்போது ஹாட் டாபிக்காக மாறி இருக்கிறது.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி நடிகர்கள்
இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடித்திருக்கிறார். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, சீமான், கெளரி கிஷான், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருப்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதோடு அனிருத் இசை, ரவி வர்மன் ஒளிப்பதிவு ஆகியவை கூட படத்துக்கு மேலும் வலு சேர்த்தது. காதல், ஃபேண்டஸி, எதிர்கால கான்செப்ட் ஆகியவை கலந்த கதை என்பதால் யூத் ஆடியன்ஸிடம் படம் அதிக கவனம் பெற்றது.
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட கதை
கதை 2040ம் ஆண்டை மையமாக வைத்து நகர்கிறது. காதலை கூட ஒரு ஆப் தீர்மானிக்கும் உலகம் என்ற ஐடியா ரசிகர்களுக்கு புதுசாக இருந்தது. ஒரு பக்கம் இந்த கான்செப்ட் சுவாரஸ்யம் கொடுத்தாலும், அதை முழுமையாக பயன்படுத்தியிருக்கலாமே என்ற விமர்சனமும் எழுந்து கொண்டே இருக்கிறது. முதல் பாதி லைட்டாக, ஜாலியாக சென்றாலும், இரண்டாம் பாதியில் கொஞ்சம் நீள்கிறது என்ற கருத்தும் இருக்கிறது. ஆனாலும் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பு, எஸ்.ஜே.சூர்யாவின் கேரக்டர், சில காமெடி சீன்கள் ரசிகர்களை ஈர்த்திருக்கிறது.
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி வசூல்
இப்படி கலவையான விமர்சனங்கள் வந்தாலும், வசூலில் படம் நல்ல ஸ்டார்ட் எடுத்திருக்கிறது. முதல் நாளில் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான காட்சிகளில் திரையிடப்பட்ட இந்த படம் சுமார் ரூ.7.93 கோடி வரை வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு கூடுதலாக வெளிநாடுகளில் சுமார் ரூ.2 கோடி வரையில் கலெக்ஷன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மொத்தத்தில் முதல் நாள் உலகளவில் சுமார் ரூ.9.93 கோடி வசூலை படம் பெற்றுள்ளது.
பிரதீப் ரங்கநாதனின் முந்தைய படங்கள் எல்லாம் பெரிய ஹிட் ஆனதால், இந்த படத்துக்கும் அதே அளவிலான ஓப்பனிங் வரும் என எதிர்பார்த்திருந்தனர். அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும், ஆரம்ப வசூல் மோசமாக இல்லை என்றே கூறப்படுகிறது. குறிப்பாக இப்போது விடுமுறை நாட்கள் வருவதால், அடுத்த இரண்டு நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
மற்றொரு பக்கம், விக்னேஷ் சிவனுக்கு இந்த படம் முக்கியமான கம்பேக் ஆக பார்க்கப்படுகிறது. சில வருடங்களாக சரியான ஹிட் இல்லாமல் இருந்த நிலையில், இந்த படம் அவருக்கு மீண்டும் ஒரு நிலையை உருவாக்குமா என்பதையும் அனைவரும் கவனித்து வருகிறார்கள்.
மொத்தத்தில், "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" படம் விமர்சனத்தில் கலவையான ரிசல்ட் பெற்றாலும், வசூலில் நல்ல தொடக்கத்தை எடுத்துள்ளது. அடுத்த சில நாட்களில் படம் எப்படி பிடித்துக் கொள்கிறது என்பதுதான் இதன் வெற்றி தோல்வியை முடிவு செய்யப் போகிறது.












Click it and Unblock the Notifications