Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொத்து, உறவு, உரிமைக்காக கதறும் ஜாய்! காஸ்ட்லி குக் மாதம்பட்டி ரங்கராஜ்! பாக்யராஜ் படம் போல இருக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜன் இதுவரை தன்னை ஒரு யோக்கியமான மனிதராகக் காட்டி வந்த நிலையில், ஜாய் அறிவித்த கர்ப்ப செய்தி அவரது சமூக அந்தஸ்தையும் நற்பெயரையும் பெருமளவில் பாதித்துள்ளது.. காரணம், இந்து முறைப்படி முதல் மனைவி இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்வது சட்டப்படி செல்லாது. ஒருவேளை அவர் மதம் மாறினாலோ அல்லது முதல் மனைவியை விவாகரத்து செய்தாலோ மட்டுமே இது சாத்தியம் என்று பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.

தமிழ் நிலம் என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், "இன்றைய காலகட்டத்தில் சினிமா பிரபலங்களிடையே திருமணம் என்பது ஒரு கொண்டாட்டமாகவும், எளிதாக கடந்து போகும் விஷயமாகவும் மாறிவிட்டது.. அடுத்தவரின் மனைவியை கவர்வது என்பதும் ஒரு டிரெண்டாக மாறிவிட்டது..

madhampatti rangaraj Joy crizildaa

மாதம்பட்டி ரங்கராஜன் ஒரு நடிகராக அறியப்பட்டாலும், அவர் அடிப்படையில் சிறந்த சமையல் கலைஞர்.. சொந்தமாக தயாரித்து நடித்த 'மெஹந்தி சர்க்கஸ்' படம் அவருக்கு ஓரளவுக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது.

அதிக வருமானம், சொத்துக்கள்

சினிமாவில் ஒரு படத்திற்கு 10 முதல் 20 லட்சம் சம்பளம் வாங்க ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். ஆனால், அவரது கேட்டரிங் தொழிலில் அவருக்கு தினமும் பெரிய வருமானத்தை தந்துவிடுகிறது.. ஸ்டாலின் முதல் மோடி வரை பல முக்கிய தலைவர்களின் வீட்டு விசேஷங்களுக்கு சமைக்கும் அளவுக்கு பிரபலமானவர்.. இதனால் செல்வாக்கும் கூடிவிட்டது.

ஜாய் என்ற பெண் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். ரங்கராஜனுக்கு மேக்கப் மற்றும் காஸ்டியூம் டிசைன் செய்யும் பணியின்போதுதான் இருவரும் சந்தித்துள்ளனர்.. இதுவே காதலாக மாறியிருக்கிறது. இந்த உறவு இத்தனை நாட்களாக ரகசியமாகவே இருந்து வந்துள்ளது.

இன்ஸ்டாகிராம் - ஆதாரங்கள்

ஆனால், ரங்கராஜனுக்கு ஏற்கனவே திருமணமாகி, மிகப்பெரிய சொத்துக்கள் இருப்பதால், எதிர்காலத்தில் அவர் தன்னை விட்டு விலகிவிடுவாரோ என்ற பயம் ஜாய்க்கு வந்துவிட்டது. எனவே இந்த உறவை தக்கவைக்கவும், தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ஜாய் இன்ஸ்டாகிராமில், அவர்கள் சேர்ந்திருக்கும் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்..

ஆண்கள் பொதுவாக தங்கள் சமூக அந்தஸ்தை பாதிக்காத வரை இத்தகைய உறவுகளை ரகசியமாக வைத்திருப்பார்கள். ஆனால், அந்தப் பெண் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த பிறகு, ரங்கராஜனால் இதை தவிர்க்கவோ அல்லது மறுக்கவோ முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது.

இது பாக்கியராஜ் படம் போல உள்ளது.. முதல் மனைவி "நான்தான் உண்மையான மனைவி, சொத்துக்கள் எல்லாம் என்னிடம் தான் இருக்கிறது" என அதிகாரம் காட்டுகிறார். உடனே ஜாய், ரங்கராஜனுடன் இருக்கும் போட்டோக்கள், மற்றும் கர்ப்பத்தை ஆதாரமாக வைத்து போராடுகிறார்.

காஸ்ட்லி கார்

ரங்கராஜன் இதுவரை தன்னை ஒரு யோக்கியமான மனிதராகக் காட்டி வந்த நிலையில், இந்த கர்ப்ப செய்தி அவரது சமூக அந்தஸ்தையும் நற்பெயரையும் பெருமளவில் பாதித்துள்ளது.. காரணம், இந்து முறைப்படி முதல் மனைவி இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்வது சட்டப்படி செல்லாது. ஒருவேளை அவர் மதம் மாறினாலோ அல்லது முதல் மனைவியை விவாகரத்து செய்தாலோ மட்டுமே இது சாத்தியம்..

அந்த காலத்தில் தர்மேந்திரா, ரவிச்சந்திரன், ஏ.வி.எம். ராஜன் போன்ற நடிகர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்காக மதம் மாறினார்கள்.. இப்போது அப்படியான நிலைமை இல்லை..

ரங்கராஜன் தனது பேட்டிகளில், "உலகில் எந்த காஸ்ட்லி கார் அறிமுகமானாலும் அது முதலில் என் வீட்டு வாசலில் தான் வந்து நிற்கும்" என்று தனது ஆடம்பரமான மனநிலையை வெளிப்படுத்துவார். இத்தகைய சொகுசு மற்றும் ஆடம்பர எண்ணம் தான், அழகான பெண்களை தேடிச் செல்லும் மனநிலையை அவருக்கு உருவாக்கியிருப்பதாக தெரிகிறது.

வித்தியாசமான அணுகுமுறை

தன்னுடைய முதல் கணவர், தன்னை ஒரு அப்பா போல கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டதாக ஜாய் ஏற்கனவே சொல்லி உள்ளார்.. ஆனால் ரங்கராஜனைச் சந்தித்தபோது அவர் ஒரு ஜென்டில்மேன் போலவும், வசதியானவராகவும் தெரிந்ததால் அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டிருக்கலாம்..

ரங்கராஜனின் முதல் மனைவி ஸ்ருதி ஒரு வழக்கறிஞர்.. சாதாரண பெண்ணாக இருந்தால் அமைதியாக போயிருப்பார், ஆனால் அவர் சட்ட அறிவு கொண்டவர் என்பதால் இந்த விஷயத்தை அவர் கையாளும் விதமே வித்தியாசமாக இருக்கிறது. அவர் இன்னமும் சமூக வலைதளங்களில் "மனைவி" என்றே குறிப்பிட்டு வருகிறார்.
.
இதனால் பிரச்சனை சொத்து பிரச்சனையாகவே உருவெடுக்கும்.. முதல் மனைவியின் பிள்ளைகள் ஒருபுறம், பிறக்கப்போகும் குழந்தை ஒருபுறம் என வாரிசு போட்டி உருவாக வாய்ப்புள்ளது..

எம்.ஆர். ராதா செய்த கடமை

எல்லா ஆண்களுக்கும் ஏதோ ஒரு பலவீனம் இருக்கலாம் என்றும், சிலர் அதை வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள், சிலர் மாட்டிக்கொள்கிறார்கள்..

நடிகர் எம்.ஆர். ராதா பல திருமணங்கள் செய்திருந்தாலும், எந்தப் பெண்ணும் அவர் தன்னை ஏமாற்றிவிட்டதாக சொன்னதில்லை.. அவர் யாரிடம் பழகினாலும் அவர்களுக்குத் தேவையான வீடு, பணம் போன்ற வசதிகளை செய்து கொடுத்து அவர்களை செட்டில் செய்துவிடுவார். அதனால் அவர்கள் அவரை தவறாகப் பேசியதில்லை..

கட்டாயத்தில் மாதம்பட்டி

பழைய காலத்தைப் போல இப்போது செய்ய முடியாது. தற்போது போட்டோக்கள், சோஷியல் மீடியாவில் இன்று ஆதாரங்கள் அதிகம் உள்ளன..அதனால்தான் ஜாய் சட்ட ரீதியாக போராடுகிறார். "விரும்பித்தான் பழகினோம்" என்று அந்தப் பெண் ஆதாரங்களுடன் பேசுவதால், ரங்கராஜன் இதற்குப் பதில் சொல்லியே ஆக வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார்.

இப்போது இந்த விஷயத்தை ஆமாம் என்றும் சொல்ல முடியாமல், இல்லை என்றும் சொல்ல முடியாமல் ரங்கராஜ் திணறி வருகிறார். முதல் மனைவியை சமாதானப்படுத்த வேண்டிய கட்டாயத்திலும் அவர் இருக்கிறார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+