Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துணியே துவைக்கட்டும் ராஜகுமாரன்.. மகேந்திரனை அப்படி பேசறாரே.. டைரக்டர் சங்கம் என்ன செய்யுது: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "ராமநாராயணன் 100 படங்களை எடுத்திருக்கிறார். அவரைவிட குறைவாக ஒன்றிரண்டு படங்களை மகேந்திரன் எடுத்திருக்கிறார்.. அவரது படங்களை நான் பார்த்ததில்லை, சமீபத்தில்தான் உதிரிப்பூக்கள் பார்த்தேன்.. என்ன கதை அது? மனைவியின் தங்கையை அடைய துடிப்பதை கதையாக எடுத்து வைத்திருக்கிறார். இதைப்போய் புகழ்ந்துட்டு இருக்கீங்க, உலகத்தரம் வாய்ந்த படமென்று சொல்கிறீர்களே" என்று ராஜகுமாரன் விமர்சித்திருந்தார். இந்நிலையில், பத்திரிகையாளர் செய்யாறு பாலு ராஜகுமாரனை கடுமையாக தாக்கி வீடியோவில் பேசியிருக்கிறார்

Cheyyaru Balu என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, "மகேந்திரனை பற்றி ராஜகுமாரன் பேசியதுமே, ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் கொந்தளித்து விட்டனர். தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த இயக்குனர்களில் மகேந்திரனும் ஒருவர்.. தங்கப்பதக்கம் படத்தின் வசனகர்த்தா மகேந்திரன்தான்..

Uthiri Pookkal Mahendran Rajakumaran

மாஸ்டர் பீஸ்

முள்ளும் மலரும் படம்தான் இன்று சினிமாவுடைய மாஸ்டர் பீஸ்.. அப்படியெல்லாம் படம் எடுக்க முடியுமா? என்று தெரியவில்லை.. ஜானி படத்தை அவ்வளவு நுணுக்கமாக எடுத்திருப்பார் மகேந்திரன்.. கே. பாலசந்தரிடம் ரஜினி ஒரு நேர்காணலில், தனக்குப் பிடித்த டைரக்டர் மகேந்திரன் என்றார்..

ரஜினிகாந்த் ஒரு பேட்டியில் சொன்னார், சிகரெட் பிடிப்பது, காலை மடித்து உட்காருவது, உட்பட எல்லாமே மகேந்திரனுடையதுதான்,அவரை பார்த்துதான் காப்பி அடித்தேன்" என்று கூறியிருந்தார்.. அப்படிப்பட்ட மகேந்திரனின் படங்கள்தான் இன்றும் இளம் இயக்குனர்களுக்கு பாடமாக இருக்கின்றன. பாரதிராஜாவுக்கு மட்டும் இன்று உடல்நிலை நன்றாக இருந்தால், இந்நேரம் ராஜகுமாரனை ஒரு அப்பு அப்பியிருப்பார்..

பப்ளிசிட்டிக்கு பேசுகிறாரா

எண்ணெய், சோப்பு, பருப்புப் பொடி விற்கிறேன், ஒரு லட்சம் ரூபாய் கூட முழுதாகச் சம்பாதித்தது இல்லை என்று ராஜகுமாரன் சொல்கிறார்.. ஆனால், அது அவரது தனிப்பட்ட விஷயம்.. ராஜகுமாரனின் தகுதி, நடிகை தேவயானியின் வீட்டுக்காரர் என்பது மட்டும்தான்.. நீ வருவாய் என என்ற ஒரு படம்தான் பேசக்கூடிய படமாக இருந்தது.,. அப்படியிருக்கும்போது மகேந்திரனை விமர்சிக்க ராஜகுமாரனுக்கு என்ன தகுதி உள்ளது?

தேவயானி ஒருமுறை, சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் தன் வீட்டுக்காரரைத் திட்டமிட்டு அவமானப்படுத்திவிட்டார், அசிங்கப்படுத்திவிட்டார் சந்தானம் என்றெல்லாம் பேட்டி கொடுத்திருந்தார்.

சந்தானம் சொன்ன உண்மை

உடனே சந்தானம், ராஜகுமாரன் அந்த கேரக்டருக்கு ஒப்புக்கொண்டுதான் நடித்தார், ஸ்கிரிப்ட்டையும் டயலாக்கையும் கொடுத்த பிறகுதான் நடித்தார்.. அந்தப் படத்தில் நடித்ததற்காக ராஜகுமாரனுக்கு 4 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது என்றும் கூறியிருந்தார்..

தேவயாணி திருமணமான புதிதில் துணை இயக்குனர் அவரது வீட்டுக்கு சென்றபோது, மனைவி துணி உட்பட அனைத்தையும் எடுத்து போட்டு ராஜகுமாரன் துவைத்து கொண்டிருந்தாராம். இதை ஒரு வீடியோவில் நானும் குறிப்பிட்டு பேசியிருந்தேன். அப்போது இயக்குனர் பேரரசு என்னிடம், "என்ன இருந்தாலும் ராஜகுமாரன் ஒரு டைரக்டர், அப்படி பேசியிருக்ககூடாது என்று அன்பாக சொன்னார்.

தேவயானி திருமணம்

அதேபோல தேவயானியின் அம்மா 20-25 அடியாட்களை உருட்டுக் கட்டையோடு கூட்டி வந்து திருமணத்தை நிறுத்த முயன்றபோது, விக்ரமனும் சிங்கமுத்துவும் தான் ராஜகுமாரனை காப்பாற்றி, விக்ரமன் அவர்கள் வீட்டிலேயே அவர்களை வைத்து, பஞ்சாயத்துப் பேசியிருக்கிறார்கள்..

அதுமட்டுமல்ல, ராஜகுமாரன் தன் உதவியாளர், நம்பி கொடுங்கள் என்று கியாரண்டி கொடுத்து திருமணத்தை முடித்து வைத்தவர் விக்கிரமன்தான்..

மகேந்திரன் - ராஜகுமாரன்

விக்ரமனிடம் உதவியாளராக இருந்தவர், கிராமத்தில் இருந்து கஷ்டப்பட்டு வந்தவர், ஒரு இயக்குனராக இருந்துகொண்டு, உலக நாயகன் கமல் ஹாசன் மீதும், இயக்குனர் மகேந்திரன் மீதும் வன்மத்தையும், வாய்க்கு வந்ததையும் பேசுவது தவறு ...

நடிகர் கமல் மீதும், இயக்குனர் மகேந்திரன் மீதும் வாய்க்கு வந்ததையும் பேசுவதையும் யாராலும் பொறுத்திருக்க முடியாது.. கமல்ஹாசனை எப்படி மட்டம் தட்டி பேசலாம்? எந்த புது இயக்குனரும், மகேந்திரன் படத்தை பார்த்ததே இல்லை என்று சொல்லவே மாட்டார்கள்.. அப்படியிருக்கும்போது ராஜகுமாரன் அப்படி பேசலாமா?

துணி துவைக்கலாம்

கடுகு படத்தில் தேவயானி, ராஜகுமாரன் நடித்திருந்தனர்.. அந்த படத்தின் ஃபேமிலி ஷோவுக்கு குடும்பங்களைக் கூட்டி வந்தபோது, அதில் இடம்பெற்ற ஒரு வல்கரான காட்சி இருந்தது.. வில்லன் ஒரு பெண்ணை டேபிள் மீது படுக்க வைத்து, தவறாகப் பயன்படுத்தும் காட்சி மோசமாக எடுக்கப்பட்டிருந்தது.. இதைப்பார்த்து அத்தனை குடும்பங்களும் முகம் சுளித்தன.. ஃபேமிலி ஷோ என்று சொல்லி, இப்படி காட்சி வைத்திருந்தார் ராஜகுமாரன்,.

அப்படிப்பட்ட ராஜகுமாரன், மகேந்திரன் படங்களை மோசமாக விமர்சிக்க என்ன ரைட்ஸ் உள்ளது? இயக்குனர் சங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ராஜகுமாரன் வீட்டில் துணி துவைக்கதான் லாயக்கு" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+