Mankatha 4th day box office: குடியரசு தின விடுமுறையில் மாஸ் காட்டிய மங்காத்தா.. 4 நாள் வசூல் இத்தனை கோடி!
சென்னை: (Mankatha 4th day box office) தமிழ் சினிமாவில் சில படங்கள் காலத்தை தாண்டி ரசிகர்களின் நினைவுகளில் வாழும். அந்த பட்டியலில் மங்காத்தா முக்கியமான இடத்தைப் பிடித்த படம். 2011ஆம் ஆண்டு அஜித் - வெங்கட் பிரபு கூட்டணியில் வெளியான இந்த படம், ஏகேவின் 50வது படமாக வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸை உலுக்கியது.
அஜித்தின் வில்லத்தனமான கதாபாத்திரம், மாஸான திரைக்கதை மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் பிஜிஎம் என அனைத்தும் சேர்ந்ததால் மங்காத்தா மெகா ஹிட்டானது. இந்த நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 23ஆம் தேதி மங்காத்தா மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

சாதாரணமாக ரீ ரிலீஸ் படங்கள் நாஸ்டால்ஜியாவுக்காக மட்டுமே பார்க்கப்படும். ஆனால் மங்காத்தா அந்த எல்லையையும் உடைத்து, புதிய படங்களைப் போலவே வசூலில் வலுவான சாதனை படைத்துள்ளது.
தொடக்கம் முதல் அதிரடி வசூல்
(Mankatha re-release box office) ரீ ரிலீஸான முதல் நாளே ரசிகர்கள் திரையரங்குகளை நிரப்பினர். குறிப்பாக மல்டிப்ளெக்ஸ்கள் மற்றும் முக்கிய நகரங்களில் மங்காத்தா ஸ்பெஷல் ஷோக்கள் ஹவுஸ்ஃபுல் ஆனதாக கூறப்படுகிறது. முதல் நாளில் சுமார் 3.75 கோடி ரூபாய் வசூலித்த படம், இரண்டாம் நாளில் 2.35 கோடி ரூபாய், மூன்றாம் நாளில் 3 கோடி ரூபாய் என மூன்று நாட்களில் மட்டும் 10.25 கோடி ரூபாய் வசூலை எட்டியது.
இதனைத் தொடர்ந்து குடியரசு தின விடுமுறை படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்தது. நான்காவது நாளான ஜனவரி 26ஆம் தேதி மட்டும் சுமார் 1.15 கோடி ரூபாய் வசூலித்து, நான்கு நாட்களில் மொத்தமாக 11.40 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மங்காத்தா படம் ஸ்பெஷல்
மங்காத்தாவின் மிகப்பெரிய பலம் அஜித்தின் கதாபாத்திரம் தான். ஹீரோவாக உச்சத்தில் இருந்த காலத்திலேயே, முழுக்க முழுக்க நெகட்டிவ் ஷேட்ஸ் கொண்ட ரோலில் நடிக்க துணிந்தது அஜித்துக்கு மட்டுமே சாத்தியமான ஒரு ரிஸ்க். பல கெட்ட வார்த்தைகள், இரக்கமற்ற நடத்தை, சுயநலமான முடிவுகள் - இவை அனைத்தையும் கொண்ட ஒரு கேரக்டரை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகம் இருந்தபோதும், அந்த கதாபாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
மேலும் வெங்கட் பிரபுவின் ஸ்டைலான மேக்கிங், ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் கொண்ட திரைக்கதை, யுவன் ஷங்கர் ராஜாவின் மாஸான பின்னணி இசை ஆகியவை சேர்ந்து மங்காத்தாவை மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் படமாக மாற்றியுள்ளன. அதனால்தான் புதிய தலைமுறை ரசிகர்களும் ரீ ரிலீஸில் இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

ரீ ரிலீஸ் மங்காத்தா வெற்றி
சமீப காலமாக பழைய ஹிட் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுவது அதிகரித்துள்ளது. ஆனால் அவை பெரும்பாலும் முதல் இரண்டு நாட்களுக்குள் முடிந்துவிடும். மங்காத்தா மட்டும் விதிவிலக்கு. நான்கு நாட்களாகியும் வசூலில் நிலைத்திருப்பது, இந்த படம் இன்னும் ரசிகர்களிடம் எந்த அளவுக்கு வேலை செய்கிறது என்பதற்கான சான்றாக பார்க்கப்படுகிறது.
இந்த ரீ ரிலீஸ் வெற்றி, எதிர்காலத்தில் இன்னும் பல அஜித் படங்கள் மீண்டும் திரையரங்குகளுக்கு வருவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளதாகவும், பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
15 ஆண்டுகள் கடந்த பிறகும் வசூல், கொண்டாட்டம், விசில் சத்தம் - அனைத்தையும் ஒன்றாகக் கொண்டுவரும் மங்காத்தா, இன்னும் அஜித் ரசிகர்களுக்கு ஒரு பெரும் திருவிழா தான்.












Click it and Unblock the Notifications