Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மங்காத்தா ரீ-ரிலீஸ்: 6-வது நாளில் செம அடி வாங்கிய வசூல்.. அஜித் ரசிகர்கள் ஷாக்!!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோலிவுட்டில் இப்போது 'ரீ-ரிலீஸ்' சீசன் தான் டாப் டிரெண்டிங். விஜய்யின் கில்லி, ரஜினியின் படையப்பா வரிசையில், கடந்த 23-ஆம் தேதி தல அஜித்தின் 'மங்காத்தா' மாஸாகத் திரையரங்குகளில் மீண்டும் களமிறங்கியது. ஆரம்பத்தில் அதிரடி காட்டிய வசூல் வேட்டை, இப்போது சத்தமே இல்லாமல் சரிவைச் சந்தித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Mankatha Ajith Kumar Box Office Re Release

கெத்து குறையாத விநாயக் மகாதேவன்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011-ல் வெளியான மங்காத்தா, அஜித்தின் கேரியரில் ஒரு மைல்கல். அதுவரை ஹீரோக்கள் செய்யத் தயங்கிய 'சால்ட் அண்ட் பெப்பர்' லுக் மற்றும் பக்கா நெகட்டிவ் ரோலில் அஜித் மிரட்டியிருப்பார். யுவன் சங்கர் ராஜாவின் தெறிக்கவிடும் இசை, வெங்கட் பிரபுவின் விறுவிறுப்பான மேக்கிங் என அனைத்தும் கூடி வந்ததால், இப்படம் இப்போதும் ரசிகர்களின் ஆல்-டைம் ஃபேவரைட். இந்த எதிர்பார்ப்புதான் ரீ-ரிலீஸின் முதல் சில நாட்களில் வசூலை எகிற வைத்தது.

திரௌபதி 2-வையே ஓரம் கட்டிய வேகம்!

மறுவெளியீட்டின் போது கூட, புதிய படங்களுக்கு இணையாக மங்காத்தாவுக்குத் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டன. சொல்லப்போனால், சமீபத்தில் வெளியான 'திரௌபதி 2' திரைப்படத்தின் வசூலையே மங்காத்தா ரீ-ரிலீஸ் மிரள வைத்தது. முதல் நான்கு நாட்களில் வசூல் வேட்டை பட்டையைக் கிளப்பியது, விநியோகஸ்தர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

Mankatha Ajith Kumar Box Office Re Release

ஆறாவது நாளில் நேர்ந்த சரிவு - வசூல் நிலவரம் என்ன?

Sacnilk இணையதளத் தகவலின்படி, மங்காத்தா ரீ-ரிலீஸ் ஆன முதல் 4 நாட்களில் சுமார் 11.40 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்தது. ஆனால், 5-வது நாளில் இருந்து படத்தின் வீரியம் குறையத் தொடங்கியது. ஐந்தாவது நாளில் 40 லட்சமாகச் சரிந்த வசூல், 6-வது நாளான நேற்று வெறும் 12 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாகத் தெரிகிறது.

மொத்தமாக 6 நாட்கள் முடிவில் 11.52 கோடி ரூபாயை இப்படம் வசூலித்துள்ளது. வார இறுதி நாட்கள் முடிந்து வார நாட்கள் தொடங்கியதே இந்தத் திடீர் சரிவுக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

சோகத்தில் அஜித் ரசிகர்கள்!

ஆரம்பத்தில் 'கில்லி' ரீ-ரிலீஸ் வசூல் சாதனையை மங்காத்தா முறியடிக்கும் என ஏகே ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், 6-வது நாளிலேயே வசூல் லட்சக்கணக்கில் சரிந்துவிட்டதால், சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டில் உள்ளனர். இருப்பினும், ஒரு ரீ-ரிலீஸ் படம் 11 கோடிக்கும் மேல் வசூலிப்பதே பெரிய விஷயம் எனத் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+