Mohan G: வெற்றிமாறன் சொன்னா ஏத்துக்கிறாங்க! நான் சொன்னா மட்டும் திட்றாங்க.. மோகன் ஜி ஆதங்கம்
சென்னை: தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக சாதி பற்றிய பேசுபொருள் அதிகமாகி வருகிறது. இதை அணுகும் இயக்குநர்களும் இரண்டு வகையா இருக்காங்க. ஒருபக்கம், சாதி மனிதர்களை எப்படி பாதிக்குது, அது ஏன் ஒழியணும், எல்லாரும் சமம் என்ற விஷயங்களை முன்வைத்து படம் எடுக்கும் இயக்குநர்கள். இன்னொரு பக்கம், சாதியை முன்னிலைப்படுத்தி, தங்களுக்கு பிடிச்ச கோணத்தில் அந்த விஷயத்தை சொல்ல முயற்சி செய்யும் இயக்குநர்கள்.
மாரி செல்வராஜ், பா.ரஞ்சித், வெற்றிமாறன் மாதிரி இயக்குநர்கள் தங்களுடைய படங்களில் சாதியால் பாதிக்கப்படும் மக்களின் வாழ்க்கையை காட்டி வருகிறார்கள். இவர்களின் படங்களில் சாதி பெருமை பேசப்படுவதில்லை. மாறாக, சாதி எப்படி மனித வாழ்க்கையை கட்டுப்படுத்துது, ஒடுக்குது என்பதையே பேசுவாங்க. அதனால தான் இந்த இயக்குநர்களின் படங்களுக்கு ஒரு குறிப்பிட்ட ரசிகர் வட்டம் மட்டுமல்ல, பொதுவான வரவேற்பும் கிடைக்குது.

மோகன் ஜி
இதற்கு நேர்மாறாக, இயக்குநர் மோகன் ஜி மீது நீண்ட நாட்களாகவே விமர்சனங்கள் இருந்து வருகிறது. அவர் எடுக்கும் படங்கள் குறிப்பிட்ட சமூகங்களை குறிவைத்து எடுக்கப்படுவதாகவும், சில சாதிகளை கெட்டவங்களாக சித்தரிக்குற மாதிரி இருப்பதாகவும் பலர் சொல்லி வருகிறார்கள். அதனால் அவருடைய படம் ரிலீஸ் ஆகும்போதெல்லாம், அது படம் பற்றிய பேச்சை விட சர்ச்சை பற்றிய பேச்சு தான் அதிகமாக இருக்கும்.
சமீபத்தில் மோகன் ஜி ஒரு பேட்டியில் பேசிய கருத்து இப்போ பெரிய பேசுபொருளாகி இருக்கு. அந்த பேட்டியில் அவர், "உண்மையிலேயே ஜாதி இருக்கா இல்லையான்னு கேட்டா இருக்கு. இதை வெற்றிமாறன் சார் கூட சொன்னாரு. ஜாதி இருக்கு. ஆனா அவருக்கு அது தேவையில்லைன்னு சொல்லிட்டாரு. அவர் ஜெயிச்சுட்டாரு, மேலே வந்துட்டாரு. அதனால அவருக்கு அந்த விஷயம் தேவையில்ல.
ஆனா அடித்தட்டில் இருக்கிற மக்கள் மேலே வர இட ஒதுக்கீடு தேவை. இதைத்தான் நானும் சொன்னேன். நான் சொன்னா திட்றாங்க. வெற்றிமாறன் சார் சொன்னா பாராட்டுறாங்க. இங்க யார் சொல்றாங்க அப்படிங்கறதுதான் முக்கியம்" என்று சொல்லியிருந்தார்.
இந்த பேச்சு வெளியானதும் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் எழுந்தது. வெற்றிமாறன் பேசுற விஷயமும், மோகன் ஜி பேசுற விஷயமும் ஒரே மாதிரி இல்லன்னு பலரும் சொல்கிறார்கள். வெற்றிமாறன் படங்களில் சாதி பிரச்சனையை எதிர்க்குற பார்வை இருக்கும். ஆனா மோகன் ஜி படங்களில் அது ஒருதலைப்பட்சமாக காட்டப்படுதுன்னு விமர்சனங்கள் எழுந்திருக்குது.
திரௌபதி 2
இந்த சர்ச்சைகளுக்கிடையிலேயே, மோகன் ஜி இயக்கத்தில் உருவான 'திரௌபதி 2' படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்த படத்தில் நடிகர் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் ரிஷி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மோகன் ஜி பேசிய கருத்தும், திரௌபதி 2 படமும் சேர்ந்து இப்போ தமிழ் சினிமாவில் சாதி குறித்த விவாதத்தை மீண்டும் முன்னிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. சினிமா சமூக பொறுப்போடு நடக்கணுமா, இல்ல எல்லாருக்கும் அவரவர் பார்வையை சொல்ல உரிமை இருக்கா என்ற கேள்விகள் மீண்டும் எழுந்திருக்குது. இந்த விவாதம் இன்னும் சில நாட்கள் தொடர்ந்து போகும் என்பதுதான் தற்போதைய நிலை.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications