Nayanthara and Trisha: ஒன்று சேர்ந்த நயன்தாரா, திரிஷா.. பிரேமை பாருங்க..! குவியுது கமெண்ட்ஸ்
சென்னை: சோசியல் மீடியாவில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயம் என்னவென்றால், நடிகைகள் நயன்தாரா மற்றும் திரிஷா இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்தான். நயன்தாரா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அந்த புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றுள்ளன.
புகைப்படங்களில் நயன்தாரா - திரிஷா இருவரும் மிகவும் நெருக்கமாக, இயல்பான புன்னகையுடன் காணப்படுவது தான் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது. "குயின் ஆஃப் ஹார்ட்ஸ் & எவர்கிரீன் பியூட்டி ஒரே ஃப்ரேம்ல" என ரசிகர்கள் கருத்துகளை குவித்து வருகின்றனர். பல ரசிகர் பக்கங்களில் இந்த புகைப்படங்கள் தொடர்ந்து பகிரப்பட்டு, ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் கமெண்ட்ஸ்களை பெற்றுவருகின்றன.

இந்த வைரலுக்கு ஒரு முக்கிய காரணம், முன்பு நயன்தாரா அளித்த பேட்டிகளில், "திரிஷா எனக்கு நெருங்கிய தோழி எல்லாம் கிடையாது" என்று அவர் கூறியிருந்தது. அந்த பழைய பேச்சுகளை நினைவுபடுத்திக் கொண்ட ரசிகர்கள், "அப்படிச் சொன்ன நயன்தாராவே இப்போது இவ்வளவு நெருக்கமாக புகைப்படம் வெளியிட்டிருக்கிறார்" என்று ஆச்சரியத்துடன் விவாதித்து வருகின்றனர். இதனால் தான் இந்த புகைப்படங்களுக்கு கூடுதல் கவனம் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ரசிகர்கள் தரப்பில், "போட்டி எல்லாம் வெளியில்தான்... உள்ளுக்குள்ள மரியாதை இருக்கு" , "இரண்டு தலைமுறைகளின் டாப் ஹீரோயின்கள் ஒரே ஃப்ரேம்ல - இதுதான் மாஸ்", "சினிமாவைத் தாண்டிய நட்புக்கு இது ஒரு நல்ல உதாரணம்" போன்ற கருத்துகள் அதிகமாக பதிவாகி வருகின்றன.

ஒருபக்கம் நயன்தாரா - திரிஷா இருவரும் தனித்தனி ரசிகர் கூட்டங்களை கொண்ட முன்னணி நடிகைகளாக இருந்தாலும், இந்த ஒரே புகைப்படம் மூலம் 'எதிரிகள்' என்ற இமேஜை முற்றிலுமாக உடைத்து, பரஸ்பர மரியாதையும் நல்ல உறவையும் வெளிப்படுத்தியுள்ளனர் என்று ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.
அதுபோல சிலர், ஒரு காமெடி வருமே நயன்தாரா இல்லனா திரிஷா என்று அதேபோல நயன்தாராவும் திரிஷாவும் ஒரே ஃபேமிலி இருக்காங்க... யாரு பெஸ்ட்ன்னு சொல்லுங்க பாப்போம் என்றும் கமெண்ட் கொடுத்து இருக்கின்றனர்.

மொத்தத்தில், நயன்தாரா வெளியிட்ட இந்த ஒரு போஸ்ட், பழைய கருத்துகள், புதிய நெருக்கம், ரசிகர்களின் உணர்ச்சி என அனைத்தையும் ஒன்றாகக் கலக்கி, சோசியல் மீடியாவில் ஒரு சுவாரஸ்யமான பேசுபொருளாக மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications