OTT: ஓடிடி-லயும் 'காந்தாரா' தான் கெத்து! இந்த வாரம் அதிக வியூக்களை பெற்ற திரைப்படங்கள் & வெப் சீரிஸ் லிஸ்ட்
சென்னை: தியேட்டர்ல மட்டும்தான் 'காந்தாரா' ஆட்டம் போடும்னு பார்த்தா, இப்போ ஓடிடி தளத்துலயும் அதுதான்பா நம்பர் 1}நவம்பர் 3 முதல் 9 வரைக்கும் ஓடிடி தளங்கள்ல எந்தப் படமும், வெப் சீரிஸும் அதிகம் பார்க்கப்பட்டுச்சுன்னு ஓர்மேக்ஸ் மீடியா ஒரு சர்வே ரிப்போர்ட் கொடுத்திருக்காங்க. அதைப் பார்த்தா, இந்திய சினிமா மொழி எல்லைகளை கடந்து பான்-இந்தியன் ரீச் வாங்கிட்டாங்க என்கிறது புரியுது! வாங்க... யார் யாரு எவ்வளவு வியூஸ் அள்ளியிருக்காங்கன்னுப் பார்க்கலாம்!

ஓடிடி-லயும் ரிஷப் ஷெட்டி தான்
இந்த லிஸ்ட்ல முதலிடத்தைப் பிடிச்சது, ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கி நடிச்ச 'காந்தாரா' தான்! இந்த 7 நாட்களுக்குள்ள மட்டும் 41 லட்சம் பார்வையாளர்கள் இந்தப் படத்தைப் பார்த்திருக்காங்களாம். அமேசான் ப்ரைம்ல ஸ்ட்ரீம் ஆகுற காந்தாராவின் தென்னிந்திய மொழிப் பதிப்புகள் மட்டும்தான் அக்டோபர் 31 அன்னைக்குப் பார்வைக்கு வந்திருக்கு. ஹிந்திப் பதிப்பு இன்னும் வரலை. அப்படி இருந்தும், 41 லட்சம் வியூஸ் குவிச்சிருக்கான்னா, ரிஷப் ஷெட்டியோட மேஜிக் சும்மா சொல்லக்கூடாது!
வெற்றி பின்னணி
உலகளவுல 827.75 கோடி ரூபாய் வசூலிச்சு, பாலிவுட் சூப்பர் ஸ்டார்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கின இந்த 'காந்தாரா'வோட ப்ரீக்வல் தான், அக்டோபர் 2அன்னைக்குத் தியேட்டர்ல ரிலீஸ் ஆன 'காந்தாரா எ லெஜண்ட் - சாப்டர்1'. ஒரு நாட்டுப்புறக் கதையை, தெய்விக பின்னணியோட பயங்கர ஆக்ஷன்ல கொடுத்ததுதான் இந்த வெற்றியோட சூட்சுமம்!
கல்யாணி பிரியதர்ஷனின் லோகா
காந்தாராவுக்கு அடுத்தபடியா, இரண்டாவது இடத்துல இருக்குறது கல்யாணி பிரியதர்ஷன் நடிச்ச 'லோகா'. ஹிந்தி, மராத்தி, பெங்காலி உட்பட ஏழு மொழிகள்ல ஸ்ட்ரீமிங் ஆன இந்தப் படம், 40 லட்சம் பார்வையாளர்களோட, ஒரு சின்ன வித்தியாசத்துல காந்தாராவுக்குப் பின்னாடி இருக்கு. 'லோகா'வுக்குக் கிடைச்ச இந்த ரெஸ்பான்ஸும் பெரிய வெற்றிதான்!
மூணாவது இடம் மிராய்
தெலுங்கு ஹீரோ தேஜா சஜ்ஜா நடிச்ச 'மிராய்' படம், ஜியோ ஹாட்ஸ்டார்ல 31 லட்சம் பார்வையாளர்களோட மூணாவது இடத்தைப் பிடிச்சிருக்கு. நாலாவது இடத்துல, தனுஷ் எழுதி, இயக்கி, நடிச்ச 'இட்லி கடை' இருக்கு! நெட்ஃபிளிக்ஸ்ல வந்த இந்தப் படம் 24 லட்சம் பார்வையாளர்களோட நம்ம ஆள் கெத்து காட்டியிருக்கார்!
பாகிஸ்தான் 4
ஐந்தாவது இடத்துல, டைகர் ஷெராஃப் நடிச்ச 'பாகி 4' படம் 20 லட்சம் பார்வையாளர்களோட நின்னிருக்கு. படங்கள் ஒருபக்கம்னா, வெப் சீரிஸ்ல இந்த வாரம் யார் மாஸ் காட்டியிருக்காங்கன்னுப் பார்த்தா... அமேசான் ப்ரைம்ல இருக்குற 'ஃபர்ஸ்ட் காப்பி' வெப் சீரிஸோட 2-வது சீசன் 28 லட்சம் வியூஸோட முதலிடத்தைப் பிடிச்சிருக்கு!
மகாராணி
சோனி லிவ்ல 4-வது சீசனா வந்த 'மகாராணி' 26 லட்சம் வியூஸோட ரெண்டாவது இடத்துல இருக்கு. 3-வது இடத்துல 'Mahabharat: Ek Dharmayudh' 17 லட்சம் வியூஸோட இருக்கு. 4-வது இடத்துல 'தி விட்சர்' சீரிஸோட 4-வது சீசன் 14 லட்சம் வியூஸும், 5-வது இடத்துல 'Thode Door Thode Paas' 13 லட்சம்) சீரிஸும் இருக்கு.
மொத்தத்துல, இந்த வாரம் ஓடிடி தளத்துல இந்திய படங்களோட ஆதிக்கம் தான் ஜாஸ்தி! அதுல 'காந்தாரா' கொடுத்த 'ரிஷப் ஷெட்டி மேஜிக்' தான் எல்லாரையும் தூக்கிச் சாப்பிட்டிருக்கு!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications