பொங்கல் ரேஸில் மட்டும் இல்லை.. இப்போது இசை வெளியீட்டு விழாவிலும் ஜனநாயகம் Vs பராசக்தி மோதல்
சென்னை: இந்த பொங்கலுக்கு தமிழ் சினிமாவில் போட்டி இருக்கும் என்று எல்லாரும் எதிர்பார்த்ததுதான். ஆனால் அந்த போட்டி பட ரிலீஸோட மட்டும் நிற்காது, இப்படி இசை வெளியீட்டு விழா வரைக்கும் வரும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். இப்போது நிலைமை அப்படித்தான் இருக்கிறது.
விஜய் நடித்த 'ஜனநாயகன்' மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த 'பராசக்தி' - இந்த இரண்டு படங்களுக்கும் இடையே, படங்களிலேயே அல்ல... இசை வெளியீட்டு விழாவிலும் கூட நேரடி மோதல் உருவாகி இருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. வழக்கமாக விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் என்றாலே லைவ் டெலிகாஸ்ட், யூடியூப் லிங்க், சோசியல் மீடியா கிளிப்புகள் என்று பெரிய பரபரப்பு இருக்கும். ஆனால் இந்த முறை அந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்படவில்லை. அதுவே கொஞ்சம் ஆச்சரியமாக பேசப்பட்டது.
இப்போது அந்த இடைவெளியை நிரப்பும் விதமாக, 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 4ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் கடைசி படம், அரசியல் பேசும் பேச்சு இவையெல்லாம் சேர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்திருக்கிறது.
அதே நேரத்தில், இதற்குச் சரியாக ஒரு நாள் முன்பு, அதாவது ஜனவரி 3ஆம் தேதி சனிக்கிழமை, சிவகார்த்திகேயன் நடித்த 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா வெளியாக இருக்கிறது என்று படக்குழு அறிவித்துள்ளது. இதுதான் இப்போது சினிமா வட்டாரத்தில் பேசப்படும் முக்கிய விஷயம். "பட ரிலீஸ்ல மட்டும் இல்ல, இசை வெளியீட்டு விழாவிலேயே போட்டியா?" என்ற கேள்வி தான் பலருக்கும்.
ஒரு பக்கம் விஜயின் 'ஜனநாயகன்' - கடைசி படம், அரசியல் பின்னணி, அனிருத் இசை, பிரம்மாண்ட விழா. இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' - சர்ச்சையான தலைப்பு, வலுவான கதைக்களம், சமூக அரசியல் பேசும் படம் என்ற எதிர்பார்ப்பு. இந்த இரண்டு படங்களின் இசை வெளியீட்டு விழாக்களும் தொடர்ச்சியாக வருவதால், ரசிகர்கள் கவனம் முழுக்க இந்த இரண்டின் மேல் தான் இருக்கிறது.
இதனால் சமூக வலைதளங்களில் "பொங்கல் போட்டி இப்போதே ஆரம்பிச்சுடுச்சு", "இது டிரெய்லர் மோதல் மாதிரி இருக்கு", "TRP ரேஸும் சூடாகும்" என்றெல்லாம் கலகலப்பான கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக, 'ஜனநாயகன்' நிகழ்ச்சியை ஜீ தமிழ் ஒளிபரப்புவதால், இதுவரை இல்லாத அளவுக்கு அந்த சேனலின் டிஆர்பி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
மொத்தத்தில் பார்த்தால், இந்த பொங்கல் சீசனில் படம் வெளியாவதற்கு முன்பே, மேடை, மைக், இசை, பேச்சு, டெலிகாஸ்ட் - எல்லாவற்றிலும் போட்டி ஆரம்பமாகிவிட்டது. 'ஜனநாயகன்' மற்றும் 'பராசக்தி'... இந்த இரண்டு படங்களும் எந்த அளவுக்கு ரசிகர்களை கவரும் என்பதைக் காட்டிலும், இந்த மோதல் தான் இப்போது அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications