Parasakthi Day 11 Box Office: பராசக்தி 11வது நாள் வசூல் இவ்வளவுதானா? நேற்று பாக்ஸ் ஆபீஸ் இத்தனை லட்சம் தான்!
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிச்ச பராசக்தி படம், பொங்கலுக்கு ரிலீஸ் ஆனப்போ ரொம்ப பெரிய எதிர்பார்ப்போட வந்தது. எஸ்கேவுக்கு இது 25-வது படம், அதுவும் 1965-ல நடந்த இந்தி திணிப்புக்கு எதிரான மொழிப்போரைக் கதையா எடுத்திருந்தாங்கன்னா ரசிகர்களுக்கு ஏன் எக்ஸைட்மென்ட் வராதா? ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா மாதிரி பலர் நடித்திருந்ததும் படத்துக்கு பிளஸ் தான்.
படம் ரிலீஸ் ஆன முதல் இரண்டு நாளே நல்ல ஓபனிங் கிடைச்சுது. உலகம் முழுக்க சேர்த்து ரூ.50 கோடிக்கு மேல வசூல் பண்ணிச்சுன்னு பேசப்பட்டது. அதுக்கப்புறம் பத்தாவது நாள்லேயே ரூ.100 கோடி கிளப்பிட்டோம்னு படக்குழுவே அதிகாரப்பூர்வமா அறிவிச்சாங்க. திமுகவினர் மத்தியிலும், சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையிலும் படம் நல்ல வரவேற்பு பெற்றது. பல இடங்கள்ல படம் கொண்டாடப்பட்டதையும் பார்த்தோம்.

ஆனா மறுபக்கம் சில நெகடிவ் விமர்சனங்களும் வந்தது. குறிப்பா சமூக வலைதளங்களில் தேவையில்லாத விமர்சனங்களும், தாக்குதல்களும் அதிகமா பரவிச்சு. அது படத்தின் ஓட்டத்துக்கு கொஞ்சம் பிரேக் போட்டுச்சுன்னு தான் சொல்லணும். ஏன்னா எல்லாரும் நினைச்ச மாதிரி படம் தொடர்ந்து வேகமா ஓடல.
நேற்று வரைக்கும் படம் வெளியாகி 11 நாட்கள் ஆகிடுச்சு. அந்த 11-வது நாள்ல இந்தியாவில மட்டும் சுமார் ரூ.26 லட்சம் அளவுக்கு தான் வசூல் வந்திருக்குன்னு சாக் நிக் வலைதளம் சொல்கிறது. அதனால அமரன் படத்தைவிட கூடுதலா வசூல் பண்ணும்னு எதிர்பார்த்த பராசக்தி, பாக்ஸ் ஆபீஸ்ல கொஞ்சம் ஸ்லோ ஆயிடுச்சு.
கதை ரீதியா பார்த்தா, மொழி, அடையாளம், அரசியல் உணர்வு ஆகியவற்றை மையமா கொண்டு படம் பேச முயற்சி பண்ணுது. சிவகார்த்திகேயனின் நடிப்பு பல இடங்களில் கவனிக்க வைக்கும், சுதா கொங்கராவின் மேக்கிங் சில காட்சிகளில் ஸ்ட்ராங்கா இருக்கு. ஆனா திரைக்கதை எல்லாரையும் ஒரே அளவுக்கு கட்டிப் போடலன்னு தான் விமர்சனம். அதுதான் வசூலிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்னு சொல்லலாம்.
மொத்தமா பார்த்தா, பராசக்தி ஒரு நல்ல ஆரம்பம் எடுத்த படம். 100 கோடி கிளப்பினாலும், எதிர்பார்த்த அளவுக்கு பாக்ஸ் ஆபீஸ்ல நீண்ட ஓட்டம் ஓடல. ஆனாலும் சிவகார்த்திகேயனுக்கு டான், அயலான், அமரன் மாதிரி 100 கோடி கிளப் படங்களின் வரிசையில் இன்னொரு முக்கியமான படமா பராசக்தி நிச்சயமா இடம் பிடிச்சிருக்கு.












Click it and Unblock the Notifications