Parasakthi Review: பராசக்தியில் சிவகார்த்திகேயனை விடுங்க! ரவி மோகன், அதர்வா மாஸ்.. இந்த இடம் சூப்பர்!
சென்னை: பராசக்தி ரிலீஸ் ஆகும் முன்னாடியே இது சாதாரண படம் இல்லைன்னு எல்லாரும் பேச ஆரம்பிச்சாங்க. சுதா கொங்கரா படம், சிவகார்த்திகேயன் 25வது படம், ரவி மோகன் முதல் முறையா வில்லன்... இதுக்கெல்லாம் மேலா அரசியல் பின்னணி. சரி, இந்த பண்டிகைக்கு ஒரு கனமான படம் தான் போலன்னு தியேட்டருக்குள்ள நுழைஞ்சா, படம் ஆரம்பத்திலேயே "விஷயத்துக்கு நேரா போறேன்"ன்னு சொல்லி உள்ளே இழுத்துக்குது.
ஆனா அடுத்த சில நிமிஷத்திலேயே புரிஞ்சுடுது... இந்த பராசக்தி, ஓட ஓட அடிக்கிற படம் இல்ல. நடந்து நடந்து பேசிக்கிட்டு, நம்மையும் உட்கார வைத்து கேட்க சொல்லுற படம்.

சிவகார்த்திகேயன் - இதுல மாஸ் ஹீரோ இல்லை. வசனம் பேசினா விசில் அடிக்க வைக்கற டைப் இல்லை. ஆனா கண்ணால, உடம்பால, நடையால ஒரு "சாதாரண ஆள்" கதைக்குள்ள மாட்டிக்கிட்டு தவிக்கற மாதிரி பண்ணிருக்கார். அதுல தான் படம் ஜெயிக்குது. "அமரன்"க்குப் பிறகு இவர் மேல இருந்த நம்பிக்கை, இங்கியும் ஓரளவுக்கு ஜஸ்டிஃபை ஆகுது.
ரவிமோகன்... சொல்லணும்னா, ஆளு ரவுண்டு கட்டி விளையாடுறார். வில்லனா வந்து கத்தல, ஓவர் பில்டப் எதுவும் இல்ல. சும்மா நின்னுக்கிட்டே நம்ம நெஞ்சில லேசா ஒரு நெருடல் உண்டாக்குற மாதிரி நடிச்சிருக்கார். "இந்த ஆளு வர்ற சீன்ல ஏதாவது ஆகப்போகுது"ன்னு தோணுது. அதுவே போதும்.
படத்தின் பெரிய பிரச்சனைன்னா... முதல் பாதி கொஞ்சம் அதிகமா பொறுமை கேக்குது. கதை நல்லாதான் இருக்கு, காலகட்டமும் செட் ஆகுது. ஆனா அதையே ரெண்டு ரெண்டு சீன்ல சொல்லி, மூணு மூணு டயலாக்ல விளக்கி, நாலு நாலு தடவ நம்மளையே நினைக்க வைக்கிறாங்க. அதுக்குள்ள ஒரு காதல் ட்ராக் வருது. அது முழுக்க "தேவையா?"ன்னு தியேட்டர் முழுக்க ஒரே கேள்வி.

ஆனா இடைவேளை வந்ததும்... "சரி, இப்ப தான் படம் ஆரம்பிக்குது"ன்னு தோணும். அந்த இடைவேளை ப்ளாக், வெளிநாடுகளில் கைதட்டல் வாங்குற அளவுக்கு வேலை செய்திருக்காம். ஜிவி பிரகாஷ் பின்னணி இசை அங்க சரியான இடத்துல சரியான சத்தத்தோட அடிக்குது.
இரண்டாம் பாதி... முதல் பாதி இழுவையைக் கொஞ்சம் ரிகவர் பண்ணுது. எடிட்டிங் சில இடங்களில் திடீர்னு கட் ஆகி எமோஷனை துண்டிக்குது. ஆனா கிளைமாக்ஸ் வரைக்கும் "விட்டுடாதே"ன்னு சொல்லி படம் பிடிச்சு வைக்குது. கிளைமாக்ஸ் சுதா கொங்கரா படம் தான்... கனமா இல்லாம, சும்மா இல்லாம...
மொத்தமா சொன்னா, பராசக்தி ஒரு "ஃபுல் மாஸ் பொங்கல் பட்டாசு" படம் கிடையாது. அதே நேரம் "சுத்தமா வேலைக்கு ஆகாத படம்"னும் இல்ல. இது பேசுற படம். பொறுமையா கேட்குறவங்களுக்கு வேலை செய்யும். "விசில், டான்ஸ், குத்து" மட்டும் தேடி போறவங்களுக்கு கொஞ்சம் சோதனை.
வசூல்
ஓப்பனிங் நல்லாதான் போகுது. வெளிநாடுகளில் ஹைப் இருக்கு. வாய் வழி விமர்சனம் கொஞ்சம் பாசிட்டிவா மாறினா, பராசக்தி மெதுவா ஓடி நல்ல இடத்துக்கு போகும். ஒரே வரியில சொன்னா, பராசக்தி: மழை மெதுவாதான் பெய்யுது... ஆனா நனைக்காம விட்டுடாது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications