Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவாஜியை வைத்து விளம்பரம் தேடும் சிவகார்த்திகேயன்! வந்தாச்சு கண்டன அறிக்கை! பராசக்திக்கு புதிய சிக்கல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள 'பராசக்தி' திரைப்படம், ரிலீஸுக்கு முன்பே சர்ச்சைகளின் மையமாக மாறி வருகிறது. ஜனவரி 10ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்தப் படம், அதற்கு முன்பாகவே "படம் வருவதற்கு முன் பஞ்சாயத்து வந்து விட்டதே" என்ற நிலைக்கு ரசிகர்களை கொண்டு வந்துள்ளது.

நாளை சனிக்கிழமை, ஜனவரி 3ஆம் தேதி பராசக்தி இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை சன் டிவியில் ஜனவரி 4ஆம் தேதி அதாவது வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்ப உள்ளனர். அதே நாளில், நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாக இருப்பதால், "டிவி ரிமோட் யார் கைக்கு?" என்ற கேள்வியே இப்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.

Parasakthi Sivakarthikeyan Jananayagan

விஜய்யின் துப்பாக்கி ஸ்டைலா? அல்லது சிவகார்த்திகேயனின் புரட்சிப் பாணியா? டி.ஆர்.பி யுத்தம் இப்போதே ஆரம்பமாகிவிட்டது. அது மட்டும் அல்லாமல், ஜனவரி 9ஆம் தேதி ஜனநாயகன் ரிலீஸாகும் நிலையில், அதன் மறுநாளே பராசக்தி திரைக்கு வருகிறது. இதனால் விஜய் - சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இடையே சமூக வலைதளங்களில் மோதல் உச்சத்தை தொட்டுள்ளது.

"விஜய்க்கு போட்டி போடுற அளவுக்கு சிவகார்த்திகேயன் வளர்ந்துட்டாரா?" என ஒரு தரப்பு கேள்வி எழுப்ப,"ஒரு காலத்தில் எஸ்.கே.யை கண்டுக்காத விஜய்யின் படத்துக்கு அடுத்த நாளே எஸ்.கே. படம் வர்றதுதான் வளர்ச்சியின் சிகரம்" என்று மற்றொரு தரப்பு கெத்தாக பேசுகிறது. இந்த எல்லாவற்றையும் விட பராசக்தி படத்திற்கு வந்த புதிய பஞ்சாயத்து என்னவென்றால் - டைட்டில் மற்றும் விளம்பரம் தான்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் காவியமான பராசக்தி என்ற பெயரை பயன்படுத்தியதற்கே ஏற்கனவே எதிர்ப்பு இருந்த நிலையில், தற்போது "சிவாஜி கணேசன் தீப்பந்தத்தை சிவகார்த்திகேயனிடம் கொடுப்பது போல" விளம்பரம் செய்தது, சர்ச்சைக்கு மேல் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இதைக் கண்ட சிவாஜி சமூகநலப்பேரவை, "சிவாஜியின் வாரிசுகள் பிரபு, விக்ரம் பிரபு இருக்கும்போது, சிவகார்த்திகேயனை வாரிசு போல காட்ட யார் அனுமதி கொடுத்தது?" என்று கடுமையாக கண்டித்துள்ளது. இதைக் கலாய்க்கும் ரசிகர்களோ, "விஜய்யிடம் இருந்து துப்பாக்கி வாங்கியது போதாதுன்னு, இப்போ சிவாஜியிடம் இருந்து தீப்பந்தமா?". அடுத்த ப்ரோமோவில் எம்.ஜி.ஆர் கையில் இருந்து வேல் வாங்கினாலும் ஆச்சரியப்பட மாட்டோம்" என மீம்களை பறக்கவிடுகின்றனர்.

இவ்வளவு பஞ்சாயத்து நடக்கும் நிலையில், பொதுவான ரசிகர்கள் மட்டும் "யார் படம் வந்தால் என்ன? கதை நல்லா இருந்தா ஓடும். பிகில் - கைதி மாதிரி இப்பவும் எதுவும் நடக்கலாம்" என்று அமைதியாக பேசுகின்றனர்.

மொத்தத்தில், பராசக்தி படம் திரைக்கு வருவதற்கு முன்பே, இசை வெளியீடு, டி.ஆர்.பி போட்டி, ரசிகர் மோதல், டைட்டில் சர்ச்சை, தீப்பந்த விளம்பரம் என அனைத்து வகை பஞ்சாயத்துகளையும் ஒரே நேரத்தில் சந்தித்து வருகிறது. படம் ஹிட்டா, ஃப்ளாப்பா என்பதெல்லாம் ஜனவரி 10க்குப் பிறகுதான் தெரிய வரும். ஆனால் ஒன்று மட்டும் உறுதி - 'பராசக்தி' ரிலீஸுக்கு முன்பே கலாய்ப்பில் செம ஹிட்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+