சிவகார்த்திகேயனுக்கு அரசியல் சப்போர்ட் இருக்கு! அவர்தான் 2031 முதலமைச்சர்.. ப்ளூசட்டை மாறனின் குதர்க்கமான போஸ்ட்
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படம், அவரது திரை வாழ்க்கையில் முக்கியமான மைல்கல்லாக அமையவிருக்கிறது. காரணம், இது அவரது 25ஆவது படம். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், இன்னும் ரிலீஸே ஆகாத நிலையில் எதிர்பார்ப்பின் உச்சத்தை தொட்டுள்ளது.
விஜய் நடித்த ஜனநாயகன் படத்துடன் ஒப்பிடும் விவாதங்கள் ஆரம்பித்ததுமே, பராசக்திக்கு கூடுதல் கவனம் கிடைத்தது. ஜனநாயகன் பகவந்த் கேசரியின் ரீமேக் என்பதால் அதற்கான ஹைப் சற்றே குறைவாக இருக்கிறது என்ற பேச்சு சினிமா வட்டாரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த இடைவெளியை பராசக்தி சரியாக பிடித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

நேற்று வெளியான பராசக்தி ட்ரெய்லர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் சில மடங்கு உயர்த்தியுள்ளது. ஒவ்வொரு ஷாட்டும் சமூக வலைதளங்களில் விவாதமாகி வரும் நிலையில், "இது மெகா ப்ளாக்பஸ்டர் மெட்டீரியல்" என எஸ்கே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை உலக அளவில் உயர்த்திய அமரன் படம், சுமார் 300 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. "அமரன் மாதிரி இன்னொரு படம் இனி சிவாவுக்கு அமையாது" என்று விமர்சகர்கள் சொன்ன நேரத்தில், அதையும் தாண்டும் படமாக பராசக்தி அமையும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் உருவாகியுள்ளது. அதற்கான முக்கிய காரணம், படத்தின் கதைக்களம்தான்.
ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை மையமாகக் கொண்டு, சகோதர பாசம், உணர்ச்சி, அரசியல் மற்றும் கமர்ஷியல் அம்சங்கள் கலந்த ஒரு ஆர்ட்-கமர்ஷியல் படமாக பராசக்தி உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. 25ஆவது படம் சூப்பர் ஹிட் ஆகும் நடிகர்கள் பட்டியலில் சிவகார்த்திகேயனும் இணைவார் என்ற நம்பிக்கை இதனால் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியைச் சுற்றியும் சர்ச்சை எழுந்துள்ளது. முதலில் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட பராசக்தி, தற்போது ஜனவரி 10ஆம் தேதிக்கு முன்னேறியுள்ளது. இதனால் பொங்கலுக்கு விஜய் - சிவகார்த்திகேயன் நேரடி மோதல் உருவாகியுள்ளது.
ஆனால் இந்தப் போட்டியை விஜய் ரசிகர்கள் விரும்பவில்லை என்ற கருத்தும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மேலும், பராசக்தி படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுவதால், திமுக ஆதரவு, அரசியல் பின்னணி போன்ற பேச்சுகளும் கிளம்பியுள்ளன. இதற்கெல்லாம் பதிலளித்த சிவகார்த்திகேயன், ஆடியோ லாஞ்சிலேயே "இதுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. சிலர் எனக்கு அந்தக் கட்சி சப்போர்ட் இருக்கு, இந்த கட்சி சப்போர்ட் இருக்கு என்று சொல்கிறார்கள். நான் எந்த கட்சிக்கும் சார்பானவன் கிடையாது. நான் நடிக்கிறேன், நடிக்க வந்த வேலையை மட்டும் தான் பார்க்கிறேன்" என்று தெளிவாக விளக்கம் அளித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில், மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார் பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில்,"அமரன் படத்துக்கு பாஜக ஆதரவு... பராசக்திக்கு திமுக ஆதரவு... நம்ம வண்டி நேக்கா ஓடுது. இனி நான்தான் தமிழ் சினிமாவின் விஜய். 2031 சி.எம் - திடீர் தளபதி" என்று கிண்டலடித்துள்ளார்.
இதைக் கண்ட சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். "எதற்காக ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து சிவாவை டார்கெட் செய்கிறார்?" என்றும், "சிவாவின் வளர்ச்சியை அவரால் ஜீரணிக்க முடியவில்லை" என்றும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஏற்கனவே சிவகார்த்திகேயனை கிண்டல் செய்யும் வகையில் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட பழைய பதிவுகளும் தற்போது மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு வைரலாகி வருகின்றன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications