Pradeep: பிரதீப் ரங்கநாதனின் பெருந்தன்மை! வெற்றிக்கு துணையாக இருந்த நண்பருக்கு பெரிய பரிசு! குவியும் வாழ்த்து
சென்னை: தமிழ் சினிமாவில் மிகக் குறுகிய காலத்திலேயே யாரும் எட்ட முடியாத உச்சத்தைத் தொட்டு, இளம் ரசிகர்களின் 'நேஷனல் க்ரஷ்' ஆக மாறியிருக்கிறார் இயக்குநர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தொடர்ச்சியாக மாபெரும் வெற்றிகளைப் பெறுவதுடன், வசூலிலும் சாதனைகளைப் படைத்து, ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

இந்திய சினிமாவில் முதல் முறை
பிரதீப் ரங்கநாதனின் சினிமா பயணம் ஒரு இயக்குநராகத் தொடங்கியது. 2019-ஆம் ஆண்டு 'கோமாளி' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், அந்தப் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். ஆனால், அவர் கதாநாயகனாக முழுநேரம் களமிறங்கிய பிறகுதான் அவரது சினிமா கிராஃப் விண்ணைத் தொட்டது.
பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த 'லவ் டுடே', அதைத் தொடர்ந்து வெளியான 'டிராகன்' மற்றும் இறுதியாக வெளியான 'டியூட்' ஆகிய மூன்று படங்களுமே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன. ஒரு இளம் நடிகர் தொடர்ச்சியாக நடித்த மூன்று படங்களும் 100 கோடி வசூலைக் குவித்தது என்பது, தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்லாமல், இந்திய சினிமாவிலேயே முதல் முறை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தப் பிரம்மாண்ட சாதனையைப் புரிந்ததன் மூலம், பிரதீப் ரங்கநாதன் இப்போது 2K கிட்ஸின் மிகவும் பிடித்த கதாநாயகனாக மாறியுள்ளார்.
2K கிட்ஸின் ஃபேவரைட்
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படங்கள் வெற்றி பெறுவதற்குக் காரணம், அவர் தற்போதைய ட்ரெண்டிங்கிற்கு ஏற்றவாறு கதைகளைத் தேர்ந்தெடுத்து, அதைச் சரியாகப் படமாக்குவதுதான். இன்றைய தலைமுறை இளைஞர்களின் காதல் உணர்வுகளையும், சிக்கல்களையும் மிக யதார்த்தமாகப் படம்பிடிப்பது. தன்னுடைய தனித்துவமான காமெடி பாணி மற்றும் உடல்மொழி மூலம் இளைஞர்களை எளிதில் கவர்வது.
எமோஷனல் டச்
முழுக்க முழுக்க நகைச்சுவை இல்லாமல், படத்தின் இறுதியில் ஒரு தேவையான எமோஷனல் காட்சிகளையும் வைத்து, குடும்ப ரசிகர்களையும் கவர்வது இவரது பலம். இன்றைய இளைஞர்களின் ரசனைக்குரிய CONTENT மற்றும் தனது இயல்பான நடிப்பின் கலவைதான், பிரதீப் ரங்கநாதனை இந்தத் தலைமுறையின் வெற்றிகரமான நாயகனாக உயர்த்தியுள்ளது.
வெற்றிக்கு பரிசு
வெற்றிக்குப் பின், பிரதீப் ரங்கநாதன் தனது நண்பர் ஒருவருக்குக் கார் பரிசளித்திருக்கும் செயல் தற்போது இணையத்தில் வைரலாகி, அனைவரின் வாழ்த்தையும் பெற்று வருகிறது. பிரதீப் ரங்கநாதனின் வெற்றிப் படங்களான 'கோமாளி', 'லவ் டுடே', 'டிராகன்' உள்ளிட்ட பல படங்களுக்கு இணை இயக்குநராகப் பணியாற்றியவர் அவரது நண்பர் ரமேஷ் நாராயணன். இந்தத் தொடர் வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்த நண்பரின் உழைப்பைப் பாராட்டும் விதமாக, அவருக்கு ஒரு விலையுயர்ந்த கார் ஒன்றை பிரதீப் ரங்கநாதன் பரிசளித்துள்ளார்.
இந்தப் பரிசளிப்பு தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, தனது நண்பனின் வெற்றிக்குக் காரணமாக இருந்த இணை இயக்குநருக்குப் பிரம்மாண்ட கார் பரிசளித்த பிரதீப் ரங்கநாதனின் பெருந்தன்மைக்கும், நட்புக்கும் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications