பிரதீப் ரங்கநாதனின் முதல் தோல்வி.. எல்ஐகே கொடுத்த ஏமாற்றம்! ஆயிரம் கோடி மாயாஜாலம் மிஸ்
சென்னை: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளியான எல்லா படங்களுமே அவருக்கு சூப்பர், டூப்பர் ஹிட் கொடுத்தது. ஆனால் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான எல்ஐகே திரைப்படம் மட்டும் அவருக்கு ஏமாற்றத்தை கொடுத்து இருக்கிறது. இதுவரைக்கும் பிரதீப் ரங்கநாதன் நடித்த படங்கள் எல்லாமே ஆயிரம் கோடி வசூல் பெற்றிருந்தது ஆனால் எல்ஐகே படம் 500 கோடி வசூலில் தத்தளித்து கொண்டிருக்கிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான இந்த படம், ரோபோ, ஏஐ போன்ற புதிய கான்செப்ட்களுடன் வந்ததால் ஆரம்பத்திலேயே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஏப்ரல் 10-ம் தேதி வெளியான இந்த படம், ஸ்கிரீன் பிளேவில் புதுமை காட்டினாலும், கதையில் அந்த அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை என்றே பேசப்படுகிறது.
படம் வசூல் ரீதியாக 50 கோடி ரூபாய்க்கும் மேல் எட்டியதாக சொல்லப்பட்டாலும், தியேட்டரில் கூட்டம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லையாம். அதனால், "இது பிரதீப்பின் முதல் தடுமாற்றமா?" என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழ ஆரம்பித்திருக்கிறது.

கோமாளி முதல் லவ் டுடே வரை
பிரதீப் ரங்கநாதன் என்ற பெயர் முதலில் பெரிய அளவில் பேசப்பட்டது "கோமாளி" படத்தின் மூலம். ரவி மோகன் நடித்த அந்த படத்தில் அவர் இயக்குநராக வெற்றி கண்டார். அதன்பிறகு வந்த "லவ் டுடே" அவரை நேரடியாக இளைஞர்களின் மனதில் நிறுத்திய படம். கதையும், நடிப்பும், டயலாக்ஸும் அனைத்தும் நம்ம வாழ்க்கையோட சம்பந்தப்பட்ட மாதிரி இருந்ததால், அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது.
அந்த வெற்றிக்குப் பிறகு வந்ததால்தான் "எல்ஐகே" மீது எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக இருந்தது. ஆனால் இந்த முறை அந்த மாயாஜாலம் முழுவதும் வேலை செய்யவில்லை என்பதே உண்மை.

ரசிகர்கள் என்ன சொல்றாங்க?
சில ரசிகர்கள், "புதுசா யோசிச்சிருக்கார்... ஆனா அந்த சென்டிமென்ட் கனெக்ட் ஆகல"ன்னு சொல்றாங்க. மற்றொரு பக்கம், "ஒரே மாதிரி காதல் கதைகள் தான் வேண்டுமா? இதுவும் ஒரு முயற்சி தான்"ன்னு ஆதரவும் இருக்கிறது. லவ் டுடே படத்தில் தற்போதைய இளைஞர்களின் மத்தியில் இருக்கும் செல்போன் மோகம் காதல் பிரேக்கப் பிரச்சனைகளை எல்லாம் தத்ரூபமாக சொன்ன பிரதீப் ரங்கநாதன் இப்பொழுது எல்ஐகேவில் 40 வருஷத்துக்கு பிறகு என்ன நடக்கும் என்று காட்டி இருக்கிறார். ஆனால் இந்த படம் இப்போ வெற்றி பெறவில்லை என்றாலும் பிறகு பேசுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

அடுத்தது என்ன?
இந்த சிறிய தடுமாற்றம் பிரதீப்பை நிறுத்துமா என்றால், அது சாத்தியமே இல்லை. ஏற்கனவே அவர் மீண்டும் ஒரு புதிய படத்திற்காக பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் இணைகிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அவருடைய பலம் என்னன்னா, இளைஞர்களோட மனசு எப்படி வேலை செய்கிறது என்று புரிந்து கதையை சொல்லும் திறமை. அது திரும்பவும் வேலை செய்தால், இன்னொரு "லவ் டுடே" மாதிரி ஹிட் கொடுக்க அவரால் முடியும். மொத்தத்தில், "எல்ஐகே" படம் பெரிய தோல்வி என்று சொல்ல முடியாது... ஆனா "மிகப்பெரிய வெற்றி"ன்னு சொல்லவும் முடியல.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
விக்னேஷ் சிவன் போட்ட ஒரு போட்டோ... மீண்டும் டிரெண்டான திரிஷா! சர்ச்சைகளுக்கு பதிலடி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications