நூறு கோடி சம்பளம்? லாபத்தில் பங்கு மட்டுமே! விஷால் போட்ட பிள்ளையார் சுழி.. சினிமாவில் புது திருப்பம்
சென்னை: தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் இருந்தபோது, சங்கத்தின் ஃபிக்சட் டிபாசிட்டில் வைக்கப்பட்டிருந்த 8 கோடி ரூபாய் முறைகேடாக செலவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்ஏ சந்திரசேகர் குரல் எழுப்பியிருக்கிறார்.. மேலும் எஸ்ஏசி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு விஷாலை விசாரிக்க போவதாக கூறுகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் லாபத்தில் பங்கு என்ற கான்செப்ட்டிற்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார் விஷால் என்று பேட்டி ஒன்றில் பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.
Cheyyaru Balu என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, "அன்றைய காலகட்டத்தில் தயாரிப்பாளர்கள் செட்டுக்கு உள்ளே வந்தால், அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துவார்கள்.. மிகப்பெரிய ஆளுமையான எம்ஜிஆரே தயாரிப்பாளர்களுக்கு மரியாதை தருவார்.

காரணம் தயாரிப்பாளர்கள்தான் படியளக்கக்கூடியவர்கள். தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான், அனைவரும் நன்றாக இருக்க முடியும் என்று நம்பியவர்கள்.
தயாரிப்பாளர்களுக்கு மரியாதை
ஆனால் இப்போது அப்படியில்லை.. அதிலும் ஒரு இளம் நடிகர், அந்த படத்தயாரிப்பாளர் செட்டிற்குள் வந்தால் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லி கேரவனில் போய் உட்கார்ந்து கொண்டாராம். உடனே அந்த தயாரிப்பாளரும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரவேயில்லையாம். இத்தனைக்கும் அந்த இளம் நடிகர் 5 படம்தான் நடித்திருக்கிறார்.
இப்படிப்பட்ட சூழலில் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஒரு முக்கியமான தீர்மானத்தை போட்டுள்ளனர்.. அதன்படி, பெரிய நடிகர்களுக்கு, பெரிய டெக்னீஷியன்களுக்கு இனிமேல் படத்தின் லாபத்தில் இருந்து மட்டுமே பங்கு தரப்படும். படம் சரியாக ஓடவில்லை என்றால் நஷ்ட கணக்குதான். கன்னடம், தெலுங்கு திரையுலகில் இது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
மோசமான சினிமா சூழல்
இந்த வருடத்தில் தமிழ் சினிமாவில் 211 படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால் 16 சதவீதம்கூட அவைகளில் லாபம் இல்லை.. இதுதான் தற்போதைய சூழல் உள்ளது. விஜய்யும் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில், மோசமான சூழல் திரையுலகில் ஏற்பட்டுள்ளது. மேலும், இன்றுள்ள நடிகர்களுக்கு 2 படங்கள் ஓடி விட்டாலே அசால்ட்டாக 10 கோடி, 20 கோடி சம்பளம் கேட்கிறார்கள்.. இந்த கொடுமையின் வெளிப்பாடாகவே இப்படியொரு தீர்மானத்தை இயற்றும் நிலைமை வந்துள்ளது..
அன்று ரஜினிகாந்த்துக்கே முத்து படத்தில்தான் சம்பளம் கணிசமாக உயர்த்தப்பட்டது.. அப்போதுகூட அந்த படம் பாலசந்தர் படம் என்பதால், அவரிடம் சம்பளத்தை எப்படி உயர்த்தி கேட்பது என்று நினைத்தார். அதற்காக குறைவான சம்பளத்தை பெற்றுக்கொண்டு, முத்து படத்துக்கான ஏரியாக்களை வாங்கி கொண்டார் ரஜினி. அதற்கு பிறகு நடிகர்கள் ஏரியாக்களை வாங்குவதற்கு எதிர்ப்பு வரவும், அந்த நடைமுறை கைவிடப்பட்டு, சம்பளமாகவே பெறப்பட்டது.
ஓடிடி நிறுவனங்கள்
அப்போதுகூட நியாயமான சம்பளத்தை பெற்று வந்தனர். ஆனால் கொரோனா நேரத்தில் ஓடிடி என்ற விஷயம் வந்தபோதுதான் சம்பளம் எகிறியது.. தயாரிப்பாளர்களுக்கு ஓடிடியில் நல்ல லாபம் கிடைத்ததால், நடிகர்களும் தங்களது சம்பளத்தை உயர்த்தி விட்டார்கள்..
பல படங்களை ஓடிடி நிறுவனங்கள் வாங்கிய நிலையில், அதிலும் அடி வாங்கிவிட்டது. எனவே நல்ல படங்கள் வந்தால் மட்டுமே அதனை ஓடிடியில் விலைக்கு வாங்குவது என்று முடிவெடுக்கப்பட்டது , பிறகு தியேட்டர்களில் படம் நன்றாக ஓடி கலெக்ஷனை காட்டுங்கள், அதற்கு பிறகு வாங்கி கொள்கிறோம் என்று ஓடிடி நிறுவனங்கள் முடிவெடுத்தன.. பிறகு 4 வாரங்கள் கழித்து ஓடிடியில் படங்களை வெளியிடலாம் என்றதுமே, தியேட்டர்களுக்கு மக்கள் வருவது கணிசமாக குறைந்துவிட்டது.
மொத்தத்தில் 2024 டிசம்பருக்கு பிறகு ஓடிடியின் வியாபாரம் படுத்துவிட்டது.. எனவேதான் நடிகர்கள் கேட்கும் சம்பளத்தை தர முடியாத நிலைமை வந்துவிட்டது. இதை கருத்தில் கொண்டதான், லாபத்தில் பங்கு என்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
நடிகர் விஷால் பிள்ளையார் சுழி
ஆனால் இதற்கு முன்பு தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் இருந்தபோது, சங்கத்தின் ஃபிக்சட் டிபாசிட்டில் வைக்கப்பட்டிருந்த 8 கோடி ரூபாய் முறைகேடாக செலவு செய்யப்பட்டுள்ளது என்று எஸ்ஏ சந்திரசேகர் குரல் எழுப்பியிருக்கிறார்.. எனவே எஸ்ஏசி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு விஷாலை விசாரிக்க போவதாக கூறுகிறார்கள்.
இதுஒருபுறமிருந்தாலும் லாபத்தில் பங்கு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுமே அதற்கு பிள்ளையார் சுழி போட்டிருப்பது விஷால்தான்.
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் விஷால் நடித்து வருகிறார். 12 மணி நேரம் நடிக்கிறாராம். இதுதான் முன்னோடி படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. எனினும் தாங்கள் இயற்றியிருக்கும் தீர்மானத்தில் தயாரிப்பாளர்கள் உறுதியாக இருப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications