இதோ வந்துட்டே இருக்கேன்! கெஞ்சிய பெங்களூரு நடிகை கிருஷி.. சில நிமிடத்தில் வைஷாக் கிடந்த கோலம்! ஏன்?

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பெங்களூருவில் பிரபல கன்னட நடிகையான கிருஷி தபண்டாவின் வீட்டில் நடந்த தற்கொலையின் அதிர்ச்சி இன்னமும் அங்கே அடங்கவில்லை.. இந்த மர்ம மரணத்துக்கான காரணமும் உடனடியாக தெரியவில்லை.. வைஷாக் என்ற நபர் திடீரென தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார். உண்மையிலேயே என்னதான் நடந்தது? போலீசார் விசாரணையில் கிளம்பி உள்ள சந்தேகங்கள் என்னென்ன? இந்த மரணத்தின் பின்னணியில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது

வைஷாக்கிற்கும் மேகனா என்பவருக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. 14 வயதில் ஒரு மகனும் உள்ளார்.. இதனிடையே, தொழிலதிபர் அரவிந்த் வெங்கடேஷ் ரெட்டி சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில் சமீபத்தில் வைஷாக் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.. பிறகு ஜாமீனிலும் வெளிவந்துவிட்டார்.

Krishi Tapanda

பெங்களூரு நடிகை கிருஷி

ஆனால் அதற்கு பிறகுதான் அவரது வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியிருக்கிறது. மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.. தினம் தினம் சண்டை வந்ததால், கடந்த ஒரு மாதமாகவே குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுவிட்டாராம் வைஷாக்.

இந்த ஒரு மாத காலத்தில், தன்னுடைய மனைவியையோ, மகனையோ அவர் ஒருமுறை கூட தொடர்பு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. குடும்பத்தினர் எத்தனையோ முறை சமரசம் செய்ய முயன்றும், அவர் வீட்டிற்குத் திரும்பவே இல்லையாம்.. ஆனால், நிறைய மன அழுத்தத்தில் இருந்தாராம்.

வைஷாக் கிடந்த கோலம்

இந்த நேரத்தில்தான் வைஷாக், தனது வீட்டை விட்டு வெளியேறி, நடிகை கிருஷி தபண்டாவின் வீட்டில் கடந்த சில நாட்களாக தங்கியிருந்துள்ளார்.. ஒரு மாதமாக தன் குடும்பத்தினரிடம் ஒரு வார்த்தை கூட பேசாதவர், திடீரென நேற்று முன்தினம் அதாவது ஜூன் 24ம் தேதி, தன் மனைவிக்கு ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார்.

அந்த மெசேஜில் "அப்பா எப்படி இருக்கிறார்? மகன் எப்படி இருக்கிறான்? அவன் ஒழுங்காக ஸ்கூலுக்கு போகிறானா?" என்று மட்டும் உருக்கமாகக் கேட்டுள்ளார். பல நாட்களாக அமைதியாக இருந்தவர், வலிய சென்று பலமுறை பேச முயன்றும், அதனை தவிர்த்தவர், இப்படி திடீரென மெசேஜ் அனுப்பி உள்ளாரே? என்று மனைவி மேகனா குழம்பி போனார்..

மனைவிக்கு மெசேஜ்

மனைவிக்கு மெசேஜ் அனுப்பியபோது நடிகை கிருஷி தபண்டா அவரது வீட்டில் இல்லையாம்.. மனைவிக்கு மெசேஜ் அனுப்பிய சிறிது நேரத்தில் நடிகைக்கு போன் செய்துள்ளார் வைஷாக்.. "நான் என் வாழ்க்கையை முடித்துக் கொள்ளப் போகிறேன். வாழ்க்கையை வெறுத்துவிட்டேன், இனி வாழ விரும்பவில்லை" என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.

இதைக் கேட்டு பதறிப்போன நடிகை கிருஷி, உடனே அவரைத் தொடர்புகொண்டு, "தயவுசெய்து எந்த தவறான முடிவும் எடுக்க வேண்டாம். நான் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறேன். நாம் 2 பேரும் குக்கே சுப்பிரமணியா கோயிலுக்கு போகலாம்.. அங்கே போனால் உங்கள் மனம் மாறும், அமைதி கிடைக்கும்" என்று சமாதானம் செய்துள்ளார்.

பெங்களூரு கேஸில் என்ன நடந்தது

ஆனால் நடிகை சொன்ன எதையுமே வைஷாக் காதில் போட்டுக் கொள்ளவில்லையாம்.. நடிகை கிருஷி தபண்டா பதற்றத்துடன் வீட்டிற்கு வந்து கதவைத் திறந்தபோது, வைஷாக் சடலமாகத் தொங்கியுள்ளார். இந்த மரணம் இப்போது பல சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.

அவர் ஏன் மனைவியைப் பிரிந்து நடிகையின் வீட்டில் தங்க வேண்டும்? அவரை மரணத்தை நோக்கித் தள்ளியது அந்த வழக்கின் பயமா, அல்லது வேறு ஏதேனும் அழுத்தமா? என்று பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. வைஷாக்கின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், பெங்களூரு போலீசார் அந்த வீட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் சோதனையிட்டு, இந்த மர்ம மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மைகளைத் தோண்டி எடுத்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+