பலே கில்லாடிப்பா இந்த சவுதி.. ரஷ்யா கச்சா எண்ணெய் வாங்கிய கதை தெரியுமா உங்களுக்கு!

Subscribe to Oneindia Tamil

உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடாக விளங்கும் சவுதி அரேபியா, ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவிலான எரிபொருளை இறக்குமதி செய்து வருகிறது. இது பலருக்கு ஆச்சரியமாக இருந்தாலும், இதன் பின்னால் உள்ள வணிக ரீதியான காரணம் மிகவும் முக்கியமானதாகவும், விச்சித்திரமாகவும் பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணெய் வர்த்தக சந்தை நாளுக்கு நாள் பெரும் மாற்றத்தையும், அதிர்வுகளையும் சந்தித்து வருகிறது. அமெரிக்காவிடம் மிகவும் சிறிய அளவிலேயே எரிவாயு வாங்கி வந்த இந்தியா தற்போது அமெரிக்காவை தான் எரிவாயுவுக்கு முழுமையாக நம்பியுள்ளது. தற்போது கச்சா எண்ணெய்யில் கோட்டை கட்டியுள்ள சவுதி ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குகிறது.

Saudi Arabia Russia Crude oil Saudi Arabia Russian fuel oil import Saudi buys Russian oil Why Saudi imports Russian fuel Saudi Arabia oil export strategy Russia fuel oil exports to Saudi Saudi summer fuel demand Hormuz crisis Saudi pipeline Saudi East West pipeline Saudi Russia oil trade 2026 Discounted Russian fuel Saudi

ஏன் ரஷ்ய எரிபொருளை வாங்குகிறது சவுதி?

சவுதி அரேபியா, உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளர் என்றாலும், கோடை காலத்தில் உள்நாட்டு தேவை அதிகரித்ததுள்ளது. இந்த திடீர் தேவைக்கு தன்னிடம் இருக்கும் கச்சா எண்ணெய்யை பயன்படுத்தாமல் தள்ளுபடி விலையில் கிடைக்கும் ரஷ்யாவின் எரிபொருளை வாங்கி பயன்படுத்துகிறது. அதே நேரம், தனது சொந்த கச்சா எண்ணெயை உலக சந்தையில் அதிக விலைக்கு விற்று அதிக லாபம் ஈட்டுகிறது. இது சவுதி அரேபியாவின் மிகப்பெரிய வர்த்தக ராஜதந்திரமாக பார்க்கப்படுகிறது.

கடந்த மே மாதத்தில் மட்டும் சவுதி அரேபியா 1.23 மில்லியன் டன் ரஷ்ய எரிபொருளை இறக்குமதி செய்துள்ளது. இது ரஷ்யாவின் மொத்த கடல் வழி எரிபொருள் ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாகும். இந்த அளவு இறக்குமதி, சவுதியின் உள்நாட்டு மின் உற்பத்தி மற்றும் கோடைக்கால தேவையை பூர்த்தி செய்ய உதவது.

ரஷ்யா தனது கச்சா எண்ணெய் எப்படியாவது விற்க வேண்டும் என ஆட்களை தேடி வரும் வேளையில், சவுதி மிகப்பெரிய அளவில் வாங்க தயாராக இருக்கும் போது, ரஷ்யா தள்ளுபடியை அள்ளிக்கொடுத்துள்ளது. இதன் மூலம் நிதியியல் ரீதியாக ரஷ்யாவுக்கும் சரி, சவுதி அரேபியாவுக்கும் சரி பெரிய அளவில் பலன் அளிக்கிறது.

ஹார்முஸ் பிரச்சனை

ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக, சவுதி அரேபியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எரிபொருள் பெரிய அளவில் குறைக்கப்பட்டது. அதே நேரம், கோடைக்காலத்தில் மில்லியன் கணக்கான ஏர் கண்டிஷனர்கள் இயங்குவதால் மின்சார தேவை அதிகரித்தது. எரிபொருள் தேவையும் அதிகரித்தது.

இந்த சூழலில் சவுதி அரேபியா, தனது கிழக்கு - மேற்கு குழாய் வழியாக எண்ணெய் ஓட்டத்தை 2 மில்லியன் பீப்பாய் அளவிலிருந்து 7 மில்லியன் பீப்பாய் அளவுக்கு உயர்த்தியது. இதன் மூலம், அதிக அளவிலான கச்சா எண்ணெயை செங் கடலில் உள்ள யான்பு துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்ய முடிந்தது. இதன் மூலம் பெரிய அளவிலான வருமானத்தை பார்த்தது.

உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய ரஷ்யாவின் தள்ளுபடி கச்சா எண்ணெய்யை வாங்கி பயன்படுத்த துவங்கியது.

இரு நாடுகளுக்கும் லாபம்

சவுதி அரேபியாவுக்கு ரஷ்ய எரிபொருள் மலிவான விலையில் கிடைப்பதால், அதை உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்தி, தனது விலையுயர்ந்த கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்தது சவுதி. இதனால் சவுதிக்கு கூடுதல் லாபம் கிடைக்கிறது.

மறுபுறம், ஐரோப்பிய தடைகள் காரணமாக ரஷ்யாவின் பாரம்பரிய சந்தைகள் மூடப்பட்ட நிலையில், சவுதி அரேபியா ரஷ்யாவுக்கு முக்கியமான Buyer ஆக மாறியுள்ளது. இந்த ஏற்பாடு இரு நாடுகளுக்கும் வணிக ரீதியாக பயனுள்ளதாக இருப்பதால், ரஷ்ய எரிபொருள் ஏற்றப்பட்ட கப்பல்கள் தொடர்ந்து சவுதி அரேபியாவை நோக்கி சென்றது.

எனவே சவுதி அரேபியா எண்ணெய் பற்றாக்குறையால் அல்ல, மலிவான எண்ணெய் கிடைத்த காரணத்தால் ரஷ்ய எரிபொருளை இறக்குமதி செய்கிறது. இது வெறும் வர்த்தக உத்தி, சவுதியின் எண்ணெய் ஏற்றுமதியை அதிகரிக்கவும், உள்நாட்டு தேவையை சமாளிக்கவும் எடுக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+