பணம் வாங்கி சோறு போட்ட இடத்தில் இப்படியா? கோவை 60 வயது யோகா ஆசிரியரின் லீலை! அலறி ஓடிய இளம்பெண்

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடுமையான புகார்களைச் சொல்லி வருகின்றன. .. அப்படியிருந்தும்கூட கோவையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள் என்றாலும், இப்படியும் சில காமுகர்கள் இருப்பார்களா? என்ற அதிர்ச்சி தொண்டாமுத்தூரில் இப்போது ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கண்டனங்களை விடாமல் பதிவு செய்து வருகின்றனஹ.. நேற்றுகூட பாஜக தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தது.

Coimbatore Yoga Teacher

தமிழகத்தில் பாலியல் குற்றங்கள்

அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இது தொடர்பாக ஒரு காரசாரமான அறிக்கையையே வெளியிட்டிருந்தார். அதில், "தமிழகத்தில் திண்டுக்கல் பேருந்து நிலையம் முதல் சென்னை மெரினா வரை ஒரே நாளில் மட்டும் 10 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அரங்கேறியிருப்பது ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மேடைகளில் மட்டும் பெரிய அளவில் வாய்ச்சவடால் பேசும் முதல்வர் ஜோசப் விஜய், தன் கண்முன்னே சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதைக் கண்டும் எதற்காக மவுனம் காக்கிறார்?" என்று மிக காரமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

குற்றவாளிகள் காவல்துறையின் மீது எந்தவிதமான பயமும் இல்லாமல் சுதந்திரமாகத் திரிவது இந்த தவெக அரசின் நிர்வாகத் தோல்வியையே அப்பட்டமாகக் காட்டுகிறது என சாடிய நயினார் நாகேந்திரன், இனியாவது முதல்வர் விஜய் தனது மவுனத்தை கலைத்து காவல்துறையைத் தட்டி எழுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்துர்.

கோவை தொண்டாமுத்தூர்

நயினார் நாகேந்திரனின் இந்த அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களிலேயே மீண்டும் ஒரு பாலியல் அட்டகாசம் கோவை மாவட்டத்தில் நடந்து, தமிழக மக்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள விராலியூர் பகுதியில், திருவண்ணாமலையைச் சேர்ந்த அருணன் (60) என்பவர் தனது மனைவி பிரியாவுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இன்சூரன்ஸ் ஏஜெண்டான அருணன், அந்தப் பகுதியில் யோகா ஆசிரியராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

இவர்களது பக்கத்து வீட்டில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், தனது தோழிகள் 5 பேருடன் தங்கி தனியார் நிறுவனத்தில் ஷிப்ட் முறையில் வேலை பார்த்து வருகிறார்.

இன்சூரன்ஸ் ஏஜெண்ட்

இந்த 6 இளம்பெண்களும் சமையல் செய்ய நேரமில்லாததால், பக்கத்து வீட்டில் இருக்கும் யோகா ஆசிரியர் அருணன் வீட்டில் மாதாமாதம் பணம் செலுத்தி தினமும் சாப்பிட்டு வந்துள்ளனர். வழக்கம்போல நேற்று மற்ற 5 இளம்பெண்களும் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், இந்த 22 வயது இளம்பெண் மட்டும் காலை உணவு சாப்பிடுவதற்காக அருணன் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அந்த நேரத்தில் அருணனின் மனைவி பிரியாவுக்கு உடல்நலம் சரியில்லாததால், வீட்டிலேயே தனி ரூமில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

யோகா ஆசிரியர் காம லீலை

இளம்பெண் சாப்பிட்டு முடித்த பிறகு, தனது பிளேட்டை சுத்தம் செய்ய முயன்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாததை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட 60 வயது யோகா ஆசிரியர் அருணன், திடீரென அந்த இளம்பெண்ணைக் கட்டியணைத்து, முத்தம் கொடுத்து பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

முதியவரின் இந்த அநாகரிகச் செயலால் நிலைகுலைந்து போன அந்த இளம்பெண், பயத்தில் அலறி சத்தம் போட்டுள்ளார். பெண்ணின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.. அப்போதுதான் அருணனின் லீலையைப் பார்த்து அதிர்ந்தனர்.

சாப்பிட வந்த இடத்தில்?

ஆத்திரமடைந்த பொதுமக்கள் காமுக யோகா ஆசிரியருக்கு அங்கேயே தர்ம அடி கொடுத்து, அந்த இளம்பெண்ணைப் போராடி மீட்டனர். இதனால் அந்தப் பகுதியே போர்க்களமாக மாறியது.

இதைத் தொடர்ந்து, ஆலாந்துறை காவல் நிலையத்தில் இது குறித்துப் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து யோகா ஆசிரியர் அருணனை அதிரடியாகக் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். "சாப்பாடு போட வேண்டிய இடத்தில் இப்படி ஒரு புத்தியா?" என கோவையில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+