பாதிரியார் அங்கியுடன் மார்க்கெட்டுக்கு போன உயரமான நடிகர்! ரகுவரன் நடிக்க கமல் தயங்கினாரா? உண்மை என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: எப்போதுமே ரகுவரனின் பாடிலேங்குவேஜ், டயலாக் டெலிவரி எல்லாமே தனித்துவமானது. எம்.ஆர். ராதாவுக்குப் பிறகு, மற்ற நடிகர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு யூனிக் ஸ்டைலை வைத்திருந்தார் ரகுவரன்.. அவருடைய குரல் அவருக்கு மிகப்பெரிய பலமாகும்.. அந்த குரலில் அவர் வெளிப்படுத்தும் ஏற்ற இறக்கங்கள் கேரக்டர்களின் ஆளுமையை மெருகேற்றும் என்கிறார் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி.

FT Cinemas Xclusive என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "நடிகர் ரகுவரனின் நடிப்பு மற்றும் டெடிகேஷன் அற்புதமானவை.. ரகுவரன் ஒரு படத்திற்காக ஒரு கேரக்டரை ஏற்றுக்கொண்டால், அந்த படத்தின் ஷூட்டிங் முடியும் வரை நிஜ வாழ்க்கையிலும் அதே கேரக்டராகவே தன்னை மாற்றிக்கொள்வார்... அந்த குணாதிசயங்களை விட்டு அவர் வெளியே வரமாட்டார்.

Actor Raghuvaran Kamal haasan

டைரக்டர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் , புரியாத புதிர் படத்தில், ஐ நோ, ஐ நோ என்று 34 முறை சொல்வார்... அதில் ஒரு சீனில் சிகரெட்டை தூக்கி போட்டு, ரகுவரன் எமாஷனல் ஆகி கட் சொல்லிவிட்டார்.. சிகரெட்டை தூக்கி போட்ட அந்த நிஜ காட்சியிலும் ஐ-நோ என்பதை புகுத்திவிட்டார் கேஎஸ் ரவிக்குமார்..

கத்தியால் கையை கீறி

அந்தபடத்தில் அரிவாள்மனையை ரகுவரன் அறுத்துவிடுவார்கள்.. அந்த ஒரு க்ளோஸ்-அப் காட்சிக்காக, ரகுவரன் முகத்தில் ரத்தம் இருப்பது போன்ற மேக்கப் போடப்பட்டது. பலமுறை மேக்கப் மேன் முயன்றும், ரகுவரனுக்கு அது திருப்தியாக இல்லை.

உடனே ஒரு கத்தியை கொண்டு வர சொன்னார்.. ஏன் ரகுவரன் கத்தி கேட்கிறார்? என்று யாருக்குமே புரியவில்லை.. கத்தியை தந்ததுமே, அதை வாங்கி, தன்னுடைய கையை தானே கீறிக்கொண்டு, அந்த நிஜமான ரத்தத்தை முகத்தில் தடவிக்கொண்டு நடித்தவர் ரகுவரன்.. இதை பார்த்து கேஎஸ் ரவிக்குமார் பதறிப்போய்விட்டார். இப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்கக்கூடாது என்று கண்டித்துள்ளார்..

காரிலேயே அரிவாளுடன் தூங்கினார்

நாகார்ஜூனா நடித்த தெலுங்கு படம் சிவா, தமிழில் உதயம் என்று வெளியாகியது.. அதில் பவானி என்ற ரவுடி கேரக்டரில் அற்புதமாக நடித்திருந்தார்.. இதற்காக ரகுவரனுக்கு ஹைதராபாத்தில் ஓட்டல் ஒன்றில் ரூம் புக் செய்து தந்து கொண்டிருந்தனர். ஆனால், ரூமில் படுக்காமல், உடையும் மாற்றாமல், தன்னுடைய காரிலேயே கையில் ஒரு அரிவாளுடன் படுத்து கொண்டு தூங்குவாராம்..

இதுகுறித்து படப்பிடிப்பில் கேட்டதற்கு, 5 ஸ்டார் ஓட்டலின் காஸ்ட்லி ரூமில் தூங்கி எழுந்து ஷூட்டிங் சென்றால் ஷூட்டிங்கில் பவானி கேரக்டரில் ரியாலிட்டியாக நடிக்க முடியாது, என்று சொல்லி படம் முழுக்க ஷூட்டிங் முடித்து காரிலேயே படுத்து தூங்கினாராம். குளித்து துணி மாற்ற மட்டுமே ரூமுக்கு செல்வாராம்..

பாதிரியார் அங்கியுடன்

ஒரு மலையாள படத்தில் சர்ச் பாதிரியார் கேரக்டரில் நடித்திருந்தார்.. வெள்ளையாக நீளமான அங்கி, கண்ணாடி அணிந்து நடித்திருந்தார்.. முற்றிலும் கருணை வடிவமாக, அமைதியான தோற்றத்தில் அதில் நடித்திருந்தார்.. அந்த படத்தின்போதுகூட, ஷூட்டிங் முடிந்தும் ரூமுக்கு செல்லாமல் சர்ச்சிலேயே இருந்துள்ளார்..

ஒருநாள் ஷூட்டிங் முடிந்து அங்குள்ள பஜாருக்கு சென்றுள்ளார்.. ஆனால், அதே பாதிரியார் உடையிலேயே சென்றுவிட்டாராம். இதை பார்த்த வெளிநாட்டு நபர் ஒருவர், நிஜமான பாதிரியார் என்று நினைத்து கை கொடுத்து பேசி, God Bless என்று சொல்லி விட்டு சென்றுள்ளார்கள்.

வெறும் பணத்திற்காகவும் புகழுக்காகவும் நடிக்கும் கமர்சியல் நடிகர்களுக்கு மத்தியில், நடிப்பு என்பதை ஒரு கலையாக நேசித்தவர் ரகுவரன்

கமல்ஹாசனுக்கு வந்த பயம்

ரகுவரனுடன் நடிக்கவே கமல் சாருக்கு சற்று பயம்தான் என்று சினிமா வட்டாரத்தில் சொல்வார்கள்.. கமல்ஹாசன், ரகுவரன் ஆகிய இருவருமே ஒரு மாதிரிதான்.. இருவருமே கேரக்டருக்காக தங்களையே முழுமையாக அர்ப்பணித்து, அந்த கேரக்டர்களுக்காகவே வாழக்கூடியவர்கள்... ஆனால் ஒன்றாக நடிக்கவில்லை..

இந்த இரு துருவங்களாக ஒரே படத்தில் இணைவது என்பது சவாலாக அப்போது இருந்திருக்கலாம்.. ரகுவரன் ஒரு சீனில் நடித்தால் அந்த இடத்தை அப்படியே ஆக்கிரமித்துவிடுவார் .. அப்படி நடிக்கும்போது தன் நடிப்பையே ரகுவரன் தூக்கி சாப்பிட்டால் என்னாவது? என்ற தயக்கம் கமலுக்கு இருந்தது..

கமல்ஹாசன் நுணுக்கமான நடிப்பை வெளிப்படுத்துபவர் என்பதால், இருவருக்கும் இடையேயான அந்த கிரீன் ஸ்பேஸை சமநிலைப்படுத்துவது இயக்குநர்களுக்குப் பெரிய சவாலாக இருந்திருக்கும்..

இவர்கள் இருவரும் இணையக்கூடிய அளவிற்கான வலுவான கதையம்சம் கொண்ட வாய்ப்புகளும் அந்த காலகட்டத்தில் அமையவில்லை" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+