ரஜினிக்கு வந்த சோதனை.. தலைவர் 173ல் சுந்தர் சி- யை போல வெளியேறிய சிபி.. இனி புது இயக்குனர் இவரா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 173' படம் ஆரம்பத்திலிருந்தே பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், படம் குறித்து வெளியாகும் அப்டேட்கள் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும், அதே நேரத்தில் குழப்பத்தையும் தரும் வகையில் மாறிக்கொண்டே இருக்கின்றன.

சுந்தர் சி வெளியேற்றம்
முதலில் இந்த படத்தை இயக்கப் போவது சுந்தர் சி என்று அறிவிக்கப்பட்டது. அந்த தகவல் வெளியானதும், பல வருடங்களுக்குப் பிறகு உருவான ரஜினிகாந்த் - சுந்தர் சி கூட்டணி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவானது. ஆனால், சில காரணங்களால் சுந்தர் சி இந்தப் படத்திலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகின.
தலைவர் 173 புது இயக்குனர்
அதற்குப் பிறகு, இயக்குநராக சிபி சக்ரவர்த்தி இணைந்தார் என்று கூறப்பட்டது. 'டான்' படத்தின் மூலம் கவனம் பெற்ற சிபி, இந்த பெரிய படத்தை எப்படி ஹேண்டில் பண்ணுவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. ஆனால் இப்போது மீண்டும் ஒரு திருப்பம். சிபி சக்ரவர்த்தியும் இந்தப் படத்திலிருந்து விலகி விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
இயக்குனர் சிபி விலகல்
இதற்குப் பதிலாக, புதிய இயக்குநராக அஸ்வத் மாரிமுத்து கமிட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில், திரைப்பட விமர்சகர் அண்ணா சிபி பிஸ்மி ஸ்பெஷல் மீடியாவில் போஸ்ட் போட்டு இருக்கிறார். அந்தபதிவில் "Cibi - OUT, Ashwath - IN" என்று குறிப்பிடப்பட்டிருப்பதும் கவனிக்கப்படுகிறது.
இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து
'ஓ மை கடவுளே' படத்தின் மூலம் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கிய அஸ்வத் மாரிமுத்து, இந்த பெரிய படத்தை இயக்க வந்தால் அது எந்த மாதிரி இருக்கும் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. இந்த படம் கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (Raaj Kamal Films International) மூலம் உருவாகிறது. மேலும் இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் இணைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படி தொடர்ந்து இயக்குநர் மாற்றம் நடப்பது, இந்த படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் வேலைகள் இன்னும் முழுமையாக ஸ்டேபிளாக இல்லை என்பதைக் காட்டுகிறது என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மொத்தத்தில், ரஜினிகாந்தின் 'தலைவர் 173' படம் ஆரம்பிக்கும் முன்னரே இயக்குநர் மாற்றங்களால் பேசுபொருளாகி விட்டது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகுதான் இந்த தகவல்கள் எவ்வளவு உண்மை என்பது தெளிவாகும் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications