Revolver Rita Review: ரிவால்வர் ரீட்டா விமர்சனம்.. துப்பாக்கியை பிடித்த கீர்த்தி சுரேஷ் நிலைமை என்ன? வாங்க பார்க்கலாம்!
சென்னை: இந்த வாரம் தியேட்டரில் வெளியான படங்களில் அதிகமான எதிர்பார்ப்பு ஏற்படுத்திய ரிவால்வர் ரீட்டா படம் பற்றிய ட்விட்டர் ரிவ்யூ பார்க்கலாம் வாங்க. இந்த படத்தை சந்துரு இயக்கி இருக்கிறார். இவர் வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28, மாநாடு உட்பட பல படங்களில் துணை இயக்குனராக பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுபோல ரிவால்வர் ரீட்டா படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க அவருக்கு அம்மாவாக ராதிகா சரத்குமார் நடித்திருக்கிறார். இவர்களோடு ரெடின் கிங்ஸ்லி, சென்ராயன், அஜய் கோஸ், ஜான் விஜய், சுரேஷ் சக்கரவர்த்தி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ஒரு டார்க் காமெடி என்று இந்த படத்தின் ப்ரமோஷனிலேயே கீர்த்தி சுரேஷ் பல இடங்களில் சொல்லி இருந்தார். அவர் சொன்னது போல தான் இந்த படம் முழுக்க டார்க் காமெடியாக இருக்கிறது.

ரிவால்வர் ரீட்டா படத்தின் ப்ரோமோ வெளியானதில் இருந்து நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தோடு கம்பர் பண்ணியே பேசப்பட்டது. ஆனால் படத்தை பார்க்கும்போது அந்த பீல் இல்லை என்று படத்தை பார்த்தவர்கள் போஸ்ட் போட்டிருக்கிறார்கள்.
ரிவால்வர் ரீட்டா ட்விட்டர் விமர்சனம்
இந்த படத்தின் கதை ஒரே நாளில் நடக்கும் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இருக்கிறது. பாண்டிச்சேரியில் குடும்பத்தோடு வசித்து வரும் கீர்த்தி சுரேஷின் (ரீட்டா) ஏரியா ரவுடியான டிராகுலா பாண்டியன் (சூப்பர் சுப்புராயன்) ரீட்டாவின் வீட்டில் எதிர்பாராத விதமாக இறந்து கிடக்கிறார். இறந்த ராகுலாவின் மகன் தன் அப்பாவை தேடி அலைந்து கொண்டிருப்பதும், அப்பாவின் இறப்புக்கு காரணமானவர்களை சும்மா விட கூடாது என்று அவருக்கு எதிரியாக இருந்தவர்களை எல்லாம் தேடிப் பிடித்து கொலை செய்கிறார்.
டிராகுலா ரீட்டா வீட்டில் இறந்து போனதால் அவர் குடும்பத்தையும் கொலை செய்வதற்கு வருபவர்களிடம் இருந்து ரீட்டா தன்னுடைய குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. இந்த படத்தின் ஒட்டுமொத்த கதையையும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய தோளில் தாங்கி இருக்கிறார். அவருடைய டைமிங் காமெடி அருமையாக இருக்கிறது அது போல் ராதிகாவின் காமெடியும் வேற லெவலில் இருக்கிறது என்று ரமேஷ் என்பவர் பதிவிட்டு இருக்கிறார்.

இன்னொரு ட்விட்டர் பயனாளர், ரிவால்வர் ரீட்டா படத்தில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய காமெடியாலும் ஸ்கிரீன் பிரசன்ஸாலும் மிரட்டி இருக்கிறார். கதை அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போது ஸ்மூத்தாகவும் கவனம் ஈர்க்கும் வகையிலும் இருக்கிறது, மொத்தத்தில் ரிவால்வர் ரீட்டா கீர்த்தியின் ஒன் மேன் ஷோ என பதிவிட்டு இருக்கிறார்.
எது எப்படியோ கீர்த்தி சுரேஷ் தன்னுடைய கல்யாணத்திற்கு பிறகு ரிவால்வர் ரீட்டா படத்தில் நடித்து இப்போது இந்த படமும் வெளியே வந்திருக்கிறது. கல்யாணம் முடிந்தால் ஹீரோயினிக்கு மார்க்கெட் அவுட் என்ற ஒரு நிலை முன்பு இருந்தது, ஆனால் இப்போது நயன்தாராவுக்கு அடுத்து இவரும் அதை மாற்றி இருக்கிறார். ரிவால்வர் ரீட்டா படம் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு பெறுகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications