Aanpaavam Polladathu OTT: ரியோவின் ஆண்பாவம் ஓடிடிக்கு வந்தாச்சு! எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்? வெளியான தகவல்
சென்னை: சின்னத்திரையில் இருந்து சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் நடிகர் ரியோ ராஜ் பலரையும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு அவர் நடித்த ஜோ படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து இப்போது ஆண்பாவம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இப்போது அந்த படம் ஓடிடி வரப்போகிறது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகளும் நடிகர்களும் சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் கொடிகட்டி பறந்து வருகிறார்கள். அந்த வரிசையில் ரியோ ராஜ் ஒருவர். இவர் ஆரம்பத்தில் விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த நிலையில் சரவணன் மீனாட்சி சீரியல் தான் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் நடித்த ஜோ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இவரை சினிமா கதாநாயகனா ரசிகர்கள் மனதில் பதிய வைத்தது.

ரியோ நடித்த படங்கள்
ரியோ நடித்த ஜோ படம் ஹிட்டானாலும் நான் சின்னத்திறையை மறப்பதில்லை என்று விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அதிலும் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் இவர் தொகுத்து வழங்கும் விதத்தை பார்ப்பதற்காகவே பலரும் அந்த நிகழ்ச்சியை பார்த்து வந்தனர். இதற்கு இடையில் ரியோவின் புதிய படமான ஆண்பாவம் பொல்லாதது சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது.
இந்த படம் விமர்சனங்கள் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று ரியோவுக்கு இன்னொரு வெற்றியை சேர்த்து கொடுத்து இருக்கிறது. இப்ப வரைக்கும் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 20 கோடி வரைக்கும் வசூல் செய்து இந்த ஆண்டுடின் வெற்றி படங்களில் இந்த படமும் இணைந்து இருக்கிறது. இப்போது ரீயோ நான்கு புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.
ஆண்பாவம் பட ஓடிடி அப்டேட்
அதில் ஒரு டாபிக் சுப்புராஜ் தயாரிக்கும் படம் என்று சொல்லுறாங்க. மேலும் ஒரு படம் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன் தயாரிக்கும் படம், மூன்றாவதுவதாக ஒரு புதுமுக இயக்குநர் மொத்தத்துல ரியாவின் சினிமா பயணம் இப்போ பிரகாசமாக போயிட்டு இருக்கு. இது ஒரு பக்கம் இருக்கும்போது ஆண்பாவம் பொல்லாதது படத்தோட ஓடிடி வெளியீடு பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படம் வரும் நவம்பர் 28ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications