Kantara: 800 கோடிக்கு மேல் வசூலித்த காந்தாரா 1! ஒரு மாநிலத்தில் மட்டும் தோல்வி! எங்க தெரியுமா?
சென்னை: கடந்த 2025-ஆம் வருஷம் அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆன படம் தான் ரிஷப் ஷெட்டியோட 'காந்தாரா - சாப்டர் 1. 2022-ல வந்த 'காந்தாரா' படத்தோட ப்ரீக்வல்ங்கிறதால, முதல் நாள்ல இருந்தே படத்துக்குக் கெட்டக் கிரவுட்! உலக அளவுல வசூலை வாரிக் குவிச்ச இந்த படம், ஒரு மாநிலத்துல மட்டும் விநியோகஸ்தர்களுக்கு கண்ணீரை வரவழைச்சிருச்சாம். என்ன நடந்ததுன்னு பார்க்கலாம்!

காந்தாரான்னா கதை
'காந்தாரா' படத்தோட கதை, 1847-களில் ஒரு மன்னனுக்கும், பழங்குடி மக்களுக்கும் இடையே உள்ள உறவையும், பூத கோலா என்ற தெய்வ வழிபாட்டையும் மையமா வெச்சு எடுக்கப்பட்டிருக்கும். இந்தப் படத்துல வர 'வராக ரூபம்' பாட்டுக்காகப் பெரிய சர்ச்சை எல்லாம் வந்தது. ஆனா, கர்நாடக பண்பாடு, தெய்வ நம்பிக்கை, ரிஷப் ஷெட்டியோட நடிப்புன்னு எல்லாமே படத்துக்கு பெரிய பாராட்டுகளை குவிச்சது. முதல் நாள்ல இருந்தே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று, வசூலை அள்ள ஆரம்பிச்சது.
பட்ஜெட்
'காந்தாரா சாப்டர்1' படம் 125 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமா தயாராகி இருந்துச்சு. ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் ருக்மிணி வசந்த், ஜெயராம், குல்ஷன் தேவய்யான்னு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிச்சிருந்தது.
உலக அளவில் இந்தப் படம் 840 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைச்சது! மாநிலம் வாரியா வசூல் நிலவரத்தை பார்த்தா, படம் பட்டையைக் கிளப்பிருக்கு:
* கர்நாடகா: ரூ245 கோடி
* இந்தி மற்றும் பிற மாநிலங்கள்: ரூ. 251 கோடி
* தமிழ்நாடு: 71.75 கோடி
* கேரளா: ரூ. 55.68 கோடி
* வெளிநாடுகளில்: ரூ.110 கோடி
பிரபலங்கள் எல்லாம் பாராட்டினாலும், சில பகுதிகள்ல பாக்ஸ் ஆபிஸ் வசூல் ஏமாற்றம் அளிச்சது.
தோல்வியான ஒரே மாநிலம்
உலக அளவில் ஹிட் கொடுத்த படம், தென்னிந்தியாவின் ஒரு மாநிலத்துல மட்டும் விநியோகஸ்தர்களுக்குப் பெரிய நஷ்டத்தைக் கொடுத்துடுச்சு. தெலுங்கு மாநிலங்களில் இந்த படம் விநியோகஸ்தர்களுக்குக் கடும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தோட ப்ரீ-ரிலீஸ் வியாபாரம் ரூ. 91 கோடி! ஆனா, மொத்த ஷேர் வசூல் வெறும் ரூ.66.84 கோடி தான் பதிவாகியிருக்கு. அதனால, தெலுங்கு விநியோகஸ்தர்களுக்கு மட்டும் சுமார் 25 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டதாக வர்த்தக ஆய்வாளர்கள் சொல்றாங்க!
கன்னடம், தமிழ், இந்தினு எல்லா மொழியிலையும் கலக்கிட்டு, தெலுங்கில் மட்டும் இப்படி ஒரு தோல்வியை சந்திச்சது ரிஷப் ஷெட்டிக்கும் சரி, விநியோகஸ்தர்களுக்கும் சரி... பெரிய ஷாக் தான்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications