பொய் செய்தியால் உடைந்து விட்டேன்.. அந்த சம்பவம் ரொம்ப பாதித்துவிட்டது! நடிகை சாய் பல்லவி உருக்கம்
சென்னை: தென்னிந்திய சினிமாவின் 'நேச்சுரல் பியூட்டி' என ரசிகர்களால் அழைக்கப்படும் சாய் பல்லவி, கடந்த கால சர்ச்சை குறித்து உருக்கமாக பேசியுள்ளார். "நான் சொல்லாத விஷயத்தை சொன்னதாக மாற்றி பரப்பியது என்னை அழவைத்தது" என்று அவர் பீல் பண்ணி பேசி இருக்கிறார்.

ஒரு சாதாரண பதில்
சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், சாய் பல்லவியிடம் "நீங்கள் மலையாளி என்றாலும், தெலுங்கு எப்படி இவ்வளவு சரளமாக பேசுகிறீர்கள்?" என்று கேட்கப்பட்டதாம்.இதற்கு அவர் அமைதியாக, "நான் மலையாளி இல்லை, நான் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்" என்று பதில் சொன்னாராம்.
ஆனால், இந்த வீடியோ பின்னர் தவறாக சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது, "மலையாளி என்று கூறியதற்கு சாய் பல்லவி கோபமடைந்தார்" என்ற போலியான தகவலாக பரவியதாம். இதனால் தேவையற்ற விவாதங்கள் உருவானதாம். இவங்க மலையாளத்தில் நடித்துவிட்டு எப்படி மலையாள மொழியை அசிங்கப்படுத்துவது போல ரியாக்ட் பண்ணலாம் என்று கேள்வி வந்ததாம்.

அதை பார்த்து நான் அழுதேன்
இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் பேசும்போது சாய் பல்லவி மிகவும் எமோஷனலாக பேசியிருக்கிறார் அதாவது, "நான் சொல்லாத விஷயங்களை சொன்னதாக காட்டியதைப் பார்த்ததும் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அது எனக்கு பெரிய மன அழுத்தமாக இருந்தது. நான் கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பெண் என்பதை மட்டுமே கூறினேன். எந்த மொழியையோ மக்களையோ குறைத்து பேசும் எண்ணமே எனக்கு இல்லை" என்று அவர் உருக்கமாக பேசியிருக்கிறார்.

டான்ஸ் நிகழ்ச்சியில் இருந்து சினிமா வரை
சாய் பல்லவி தனது பயணத்தை முதலில் சின்னத்திரையில் டான்ஸ் நிகழ்ச்சிகளின் மூலம் தான் தொடங்கினார். பின்னர் பிரேமம் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் 'மலர்' டீச்சராக நடித்தது அவரை ஒரே படத்தில் பிரபலமாக மாற்றியது.
அதன் பிறகு தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்த அவர், எப்போதும் இயல்பான நடிப்பையும் எளிமையையும் தக்க வைத்துள்ளார்.

ரசிகர்களின் மனதில் தனி இடம்
சாய் பல்லவி மேக்கப் இல்லாமல் நடித்தாலும், அவரது கண்கள் மற்றும் முகபாவனைகளால் கதாபாத்திரத்தை உயிரோட்டமாக்கும் திறன் கொண்டவர். அதனால் தான் அவருக்கு 'Natural Beauty' என்ற பெயர் வந்தது.
சின்ன தவறான புரிதல் கூட எவ்வளவு பெரிய சர்ச்சையாக மாற முடியும் என்பதை சாய் பல்லவியின் இந்த அனுபவம் நிரூபிக்கிறது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு சாய் பல்லவியும் அவருடைய தங்கச்சியும் சுற்றுலா போன இடத்தில் எடுத்த சில புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்திருந்தனர். அதையும் சில வன்மம் பிடித்தவர்கள் ஏஐ யில் ஆபாசமான போட்டோவாக மாற்றி வெளியிட்டு இருந்தனர். இது பெரிதாக பேசப்பட்டது. கடைசியில் அது ஏஐ போட்டோ என்று அவரே விளக்கம் கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications