எல்லோரையும் ஏங்க வைத்த “சர்வம் மாயா” பேய் ரியா ஷிபு யார் தெரியுமா? நடிகை மட்டுமல்ல இவ்வளவு பெரிய பின்னணி இருக்கு!
சென்னை: மலையாள சினிமாவில் நிவின் பாலி நடிப்பில் வெளியாகியுள்ள 'சர்வம் மாயா' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகையும் தயாரிப்பாளருமான ரியா ஷிபு மீது ரசிகர்களின் கவனம் அதிகரித்து வருகிறது. அகில் சத்யன் எழுதி இயக்கிய இந்த நகைச்சுவை-உணர்ச்சி கலந்த திரைப்படம், வெளியானதிலிருந்து ரசிகர்களிடம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

எல்லோருக்கும் பிடித்த 'டெலுலு' பேய்
'சர்வம் மாயா' படத்தில், மாயா மேத்யூ மஞ்சூரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரியா ஷிபு, 'டெலுலு' என்ற பெயரால் ரசிகர்களிடையே பிரபலமாகி வருகிறார். இயல்பான நடிப்பு, முகபாவனை மற்றும் வசீகரமான திரை வருகை மூலம் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளதாக பலர் பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக இளம் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவரது நடிப்பை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். அந்தப் படத்தில் அவர் ஒரு பேயாக நடித்திருந்தாலும் இது பல ஒரு பேய் எங்க வாழ்க்கையிலும் வராதா என்று பல இளைஞர்கள்
ஏங்கி தவிக்கிறார்கள்.
நடிகை மட்டுமல்ல, தயாரிப்பாளரும்
ரியா ஷிபு நடிகை மட்டுமல்ல, மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்துள்ள தயாரிப்பாளர் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்தான். 2023 ஆம் ஆண்டு வெளியான 'தக்ஸ்' திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கினார். அந்தப் படத்தில் அவரது சகோதரர் ஹிருது ஹாரூன் மற்றும் முனிஷ்காந்த் நடித்திருந்தனர்.
அதே ஆண்டில், ஜோதி தேஷ்பாண்டே மற்றும் ஷிபு தமீன்ஸுடன் இணைந்து 'மும்பைகர்' என்ற ஆக்ஷன் த்ரில்லர் படத்தையும் இணைந்து தயாரித்தார். இந்தப் படத்தில் விக்ராந்த் மாஸ்ஸி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய வேடங்களில் நடித்தனர்.
2024 ஆம் ஆண்டு, சுராஜ் வெஞ்சாரமூடு நடித்த 'முரா' என்ற ஆக்ஷன்-டிராமா படத்தை தயாரித்தார். 2025 ஆம் ஆண்டில், விக்ரம் நடிப்பில் வெளியான 'வீர தீர சூரன்: பகுதி 2' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்தார். இந்த படம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நல்ல வசூலை ஈட்டியது.
தயாரிப்பாளராக இருந்து நடிகையாக மாறிய பயணம்
சினிமா துறையில் முதலில் தயாரிப்பாளராக அடையாளம் பெற்ற ரியா ஷிபு, அதற்கு பிறகு நடிகையாகவும் கவனம் ஈர்த்து வருகிறார். திரைக்குப் பின்னால் மட்டுமே இருந்த ஒருவர், நேரடியாக கேமரா முன் நின்று, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
'சர்வம் மாயா' படத்தின் வெற்றியை தொடர்ந்து, ரியா ஷிபுவுக்கு மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு படங்களிலிருந்தும் வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ரியா ஷிபு
'சர்வம் மாயா' வெளியானதிலிருந்து, ரியா ஷிபுவின் புகைப்படங்கள், காட்சிகள் மற்றும் ரசிகர்கள் செய்த பாராட்டுப் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. அவரது இயல்பான தோற்றம், பாரம்பரிய உடைகள் மற்றும் மாடர்ன் லுக் ஆகிய இரண்டிலும் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இளம் நடிகைகளுக்கு மத்தியில் தனித்த அடையாளத்தை உருவாக்கி வரும் ரியா ஷிபு, வரும் காலங்களில் மலையாள சினிமாவின் முக்கியமான முகங்களில் ஒருவராக மாறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

'சர்வம் மாயா' வெற்றி
'சர்வம் மாயா' படத்தின் நல்ல வசூலும் விமர்சகர்களின் பாராட்டும், ரியா ஷிபுவின் சினிமா பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. நடிகையாக தனது திறனை நிரூபித்துள்ள நிலையில், தயாரிப்பாளராகவும் தொடர்ந்து தரமான படங்களை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் அவர் பயணித்து வருவதாக பேட்டிகளில் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications