Simbu : சூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு செய்த அட்ராஸிட்டி.. இப்போ வீடியோ லீக் ஆகிடுச்சு! கொண்டாடும் ரசிகர்கள்
சென்னை: சோசியல் மீடியாவில் இப்போ ஒரு க்யூட்டான வீடியோ செம்ம வைரலா சுத்திட்டு இருக்கு. நடிகர் சிலம்பரசன் (சிம்பு) - நடிகர் பால சரவணன் இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜாலியா விளையாடிக்கிற அந்த வீடியோ தான் இப்போ ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து இருக்கு.

சிம்புவின் க்யூட் வீடியோ
இந்த வீடியோ, அரசன் பட ஷூட்டிங் பாட்டில் எடுக்கப்பட்டதுன்னு சொல்லுறாங்க. அந்த காட்சியில், பால சரவணனுக்கு சிம்பு கண்ணாடி பிடிச்சு காட்டுற மாதிரி ஜாலியா கிண்டல் பண்ணுறார். அப்போ பால சரவணன், "இதெல்லாம் வரலாறு பா... இதை வீடியோ எடுங்க எல்லாரும் பார்க்கட்டும், இவர் எப்படிப்பட்டவர் எல்லோருக்கும் தெரியட்டும்"ன்னு கிண்டலாக பேச, சிம்புவும் சிரிச்சுக்கிட்டே அதை ரசிக்கிறார். இரண்டு பேருக்கும் உள்ள அந்த ஈஸியான கெமிஸ்ட்ரி தான் வீடியோவை இன்னும் க்யூட்டாக்குது.
உதவியாளரிடம் அட்ராசிட்டி
அடுத்ததாக அங்கிருந்த உதவியாளர் ஒருவர் தண்ணீர் கொடுக்க, அதை குடிச்சு பார்த்த சிம்பு "இது என்னடா?"ன்னு சற்றே ஷாக்கான மாதிரி ரியாக்ட் பண்ணுறார். உடனே அந்த தண்ணீர் பாட்டிலை உதவியாளர் வாங்கிக்கிறார். அந்த நேரத்துல பால சரவணன் ஏதோ சொல்லி கிண்டல் பண்ண, சிம்பு அந்த தண்ணீரை எடுத்து "இதை நீ கீழ துப்ப கூடாது... குடி"ன்னு கிண்டலாக மிரட்டுறார். கடைசியில் இருவரும் ஓடிப்போச்சு, குழந்தை மாதிரி விளையாடுற காட்சிகள் தான் வீடியோவோட ஹைலைட்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், "ஷூட்டிங் ஸ்பாட்டில் இப்படி ஜாலியா இருக்கறது தான் சிம்புவோட ரியல் சைடு"ன்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க. ஏற்கனவே விஜய் வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் யோகி பாபு கூட கிரிக்கெட் விளையாடிய வீடியோ எப்படி ஒரு காலத்துல வைரலானதோ, அதே மாதிரி இப்போ சிம்பு - பால சரவணன் ஜாலி வீடியோவும் சோசியல் மீடியாவில் வேகமா பரவிட்டு இருக்கு.
சிம்புவின் ரசிகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து, அவர் கேமரா முன்னாடி மட்டுமில்ல, கேமரா பின்னாடியும் அப்படியே இயல்பா இருப்பவர் என்பதால் தான் பலருக்கும் பிடிக்கும் விஷயம் என்று கூறி வருகின்றனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் சீனியரா இருந்தாலும் ஜூனியர் ஆர்டிஸ்ட்களோட கூட உட்கார்ந்து பேசுறது, கிண்டல் பண்ணுறது, இடை இடையில் இப்படி லைட்டான ஜாலி பண்ணுறது - இதெல்லாம் அவரை மனிதநேயமா காட்டுது. அதனால தான் இந்த மாதிரி வீடியோக்கள் வெளியே வந்தா, ரசிகர்கள் உடனே அதை கொண்டாட ஆரம்பிச்சுடுறாங்க.
சிம்பு சினிமாவில் அவர் கடந்து வந்த பாதையும் சுலபமானது கிடையாது. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானாலும் அவருடைய சினிமா பயணத்தில் நல்ல ஹிட்ஸும் பார்த்திருக்கார், அதே நேரம் சில தோல்விகளும் வந்திருக்குது. ஆனாலும் இடையில பெரிய இடைவெளிகள் இருந்தாலும், திரும்ப திரும்ப தன்னோட இடத்தை பிடிக்க முயற்சி பண்ணிக்கிட்டே இருக்குற மனசுத்தான் பலருக்கு அவரை பிடிக்க வைக்குது. அந்த முயற்சிக்கும், இப்படி செட்டில் ஜாலியா எல்லாரோட கலந்துசேரும் குணத்துக்கும் தான் ரசிகர்கள் மதிப்பு கொடுக்குறாங்க.
மொத்தத்தில், "ஸ்டார் ஆனாலும் மனசுல குழந்தை தனம் விடாத சிம்பு"ன்னு சொல்லுற மாதிரி இந்த வீடியோ ரசிகர்களுக்கு ஒரு சின்ன சந்தோஷம் கொடுத்திருக்குது. ஏற்கனவே அரசன் படம் சூட்டின் பாதையில் நின்று விட்டதாக செய்திகள் பரவி வந்த நிலையில் அந்த படம் வருமா வராதா என்று கேள்விகளுக்கு மத்தியில் இப்போது இந்த வீடியோ மட்டும் இணையத்தில் வைரல் ஆகிறது.












Click it and Unblock the Notifications