Simbu: அஜித்தை நேரில் சந்தித்த காரணமே இதுதான்! வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த சிம்பு
சென்னை: சினிமாவைத் தாண்டி தனக்கென ஒரு தனி உலகத்தை உருவாக்கிய நடிகர் அஜித், கடந்த சில ஆண்டுகளாக கார் ரேஸிங் விளையாட்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல, முழுமையான அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளும் ஒரு விளையாட்டு பயணம் என்பதை அவர் ஒவ்வொரு போட்டியிலும் நிரூபித்து வருகிறார்.
தனக்கென ஒரு ரேசிங் டீமை உருவாக்கி, சர்வதேச அளவில் நடைபெறும் பல கார் ரேஸ் போட்டிகளில் அஜித் தொடர்ந்து பங்கேற்று வருவது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
துபாயில் நடைபெற்ற போட்டியில் அஜித்தின் டீம் மூன்றாவது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள், மலேசியா போன்ற பல்வேறு இடங்களில் நடைபெற்ற போட்டிகளிலும் அவரது அணி கலந்து கொண்டு வருகிறது. சமீபத்தில் மீண்டும் துபாயில் நடைபெற்ற போட்டியிலும் அஜித் களமிறங்கியதாக தகவல்கள் வெளியாகி, அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போட்டி மேடையிலும் கவனம்
கார் ரேஸ் என்பது மிகுந்த கவனமும் உடல் - மன உறுதியும் தேவைப்படும் விளையாட்டு. அந்த மேடையில் அஜித் காட்டும் அணுகுமுறை, பல இளம் ரசிகர்களுக்கும் ஒரு ஊக்கமாக பார்க்கப்படுகிறது. சினிமாவில் உச்சத்தில் இருக்கும் ஒருவர், விளையாட்டில் தன்னை புதிதாக நிரூபிக்க முயற்சிப்பது, "வயசோ, புகழோ தடையில்லை" என்ற செய்தியையே சொல்கிறது.
அதே நேரத்தில், போட்டி நடைபெறும் இடங்களில் அஜித்தை சந்திக்க பொதுமக்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் நேரில் சென்று வருகின்றனர். நடிகர் சிம்பு, சிபிராஜ், யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ், நயன்தாரா, விக்னேஷ் சிவன், மாதவன், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் அஜித்தை நேரில் சந்தித்து வாழ்த்திய தருணங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
சிம்புவின் பண்பு
மலேசியாவில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டியின் போது அஜித்தை சந்தித்த அனுபவம் குறித்து நடிகர் சிம்பு சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பகிர்ந்து கொண்டது கவனம் பெற்றுள்ளது. அந்த சந்திப்பு குறித்து அவர் பேசிய விதம், ரசிகர்களிடையே சிம்புவின் மீது கூடுதல் மரியாதையை உருவாக்கியுள்ளது.
ஒரு நகைக்கடை திறப்பு விழாவுக்காக வெளிநாடு சென்றிருந்தபோது, அஜித் கார் ரேஸ் நடைபெறும் இடம் அதே வழியில் இருந்ததாகவும், நீண்ட நாட்களாக அவரை சந்திக்க விரும்பியிருந்தாலும், போட்டி நடக்கும் நேரத்தில் அவரை தொந்தரவு செய்ய மனம் வரவில்லை என்றும் சிம்பு கூறியுள்ளார். அதனால் முன்பே அனுமதி கேட்ட பிறகே சந்திக்கச் சென்றதாகவும், அந்த சந்திப்பு இருவருக்கும் மகிழ்ச்சியானதாக இருந்ததாகவும் அவர் பகிர்ந்துள்ளார்.
அஜித், தன்னுடைய கார் ரேஸ் பயணம் குறித்த சில அனுபவங்களையும் சிம்புவிடம் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஒரு சூப்பர் ஸ்டாரை சந்திக்க வேண்டும் என்ற ஆவலோடு இருந்தாலும், அவருடைய தொழில்முறையை மதித்து நடந்துகொண்ட சிம்புவின் அணுகுமுறை பலராலும் பாராட்டப்படுகிறது.
இதேபோல நடிகர் சிவகார்த்திகேயனும் நேற்று நடிகர் அஜித்குமாரின் கார் ரேஸ் டீமை நேரில் சந்தித்து இருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் நேற்று முதல் வைரலாகி வருகிறது.
சினிமாவைத் தாண்டி விளையாட்டிலும் தன்னை நிரூபிக்க நினைக்கும் அஜித்தின் பயணம், இளைஞர்களுக்கு ஒரு ஊக்கமாக இருக்கிறது. அதே நேரத்தில், அந்த முயற்சியை மரியாதையோடு அணுகும் சிம்புவின் பண்பு, ரசிகர்களிடையே அவருக்கு புதிய பாராட்டுகளை சேர்த்துள்ளது.
-
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
Ajith: அஜித்தின் வெற்றிக்கு பின்னால் இருந்த தாயின் கதை! மேற்கு வங்காளத்தில் பிறந்த மோகினி மணி யார்? வெளியான தகவல் -
முகம் முழுக்க சோகம்.. தாயார் மறைவால் துபாயில் இருந்து சென்னை வந்த அஜித்குமார் -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
Ajith Mother Passes Away: மூன்று வருடத்திற்குள் பெற்றோரை இழந்த அஜித்.. அம்மா இறந்ததும் வைரலாகும் குடும்ப ரகசியம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications