மன்மதன் படத்தில் சிம்புவை ஏமாற்றுவாரே சிந்து துலானி.. இப்போ ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே!
சென்னை: ஒரு காலத்துல 'மன்மதன்' படத்துல சிம்புவுக்கு ஜோடியா வந்து, "காதல் வளர்த்தேன்..." பாடல் வர்றப்போ இளசுகளோட மனசை கொள்ளை அடிச்சவர் தான் நடிகை சிந்து துலானி. அந்த கூச்சமான முகபாவனை, சிம்பிளான அழகு - அந்த காலத்து ரசிகர்களுக்கு இன்னும் ஞாபகத்திலே இருக்கு. ஆனால் இப்போது அவருடைய லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிந்து துலானி தமிழில் மட்டும் இல்ல, தெலுங்கு, இந்தி சினிமாவிலும் நடித்து வந்தார். தெலுங்கில் 'ஐதே' படத்தில் அறிமுகமானவர். அதுக்குப் பிறகு மகேஷ் பாபுவுடன் நடித்த 'அதடு' படத்துல அவருக்கு நல்ல பெயர் கிடைச்சது. தமிழ்ல தனுஷுக்கு ஜோடியாக 'சுள்ளான்' படத்தில் நடித்தார். அதே போல விக்ரம் நடித்த 'மஜா' படத்திலும் அவர் நடித்திருந்தார்.

ஆனால் இந்த படங்களுக்குப் பிறகு தமிழ்சினிமாவில் அவர் பெருசா தொடர்ச்சியாக நடிக்கல. அதனாலேயே, "மன்மதன்" படத்துக்குப் பிறகு அவர் எங்கே போயிட்டார்?"ன்னு நிறைய ரசிகர்கள் கேள்வி கேட்ட காலமும் இருக்கு. இப்போ சமீபமா சோசியல் மீடியாவில் வைரலாகுற ஒரு வீடியோ/போட்டோவை பார்த்ததும், பலருக்கும் சின்ன ஷாக் தான். புடவை கட்டி, நெற்றியில் குங்குமம் வைத்து, முடியை சிம்பிளா பின்னிக்கிட்டு, ஒரு குடும்பப் பெண் மாதிரி - அப்படியே ஒரு அம்மா கேரக்டர் லுக்குல அவர் தோன்றியிருந்தார்.
"இது உண்மையிலே அந்த 'மன்மதன்' படத்தில் நடித்த சிந்து துலானியா?"ன்னு சிலர் நம்பவே முடியாம கமெண்ட் போட்டுட்டாங்க. ஒரு காலத்துல ஸ்டைலிஷான ஹீரோயினா பார்த்த ரசிகர்களுக்கு, இப்ப அவர் வயசான தோற்றத்தோட, மேக்கப் இல்லாத இயல்பான முகத்தோட வருவது கொஞ்சம் ஆச்சரியமா இருக்கலாம். ஆனா வாழ்க்கைன்னா அப்படித்தான். ரீல் வாழ்க்கையில நம்ம பார்த்த முகம் நிரந்தரம் கிடையாது. காலம் போகப் போக எல்லாருமே மாறித்தான் ஆகணும்.
சிந்து துலானி மும்பையில் பிறந்தவர். முதலில் மாடலிங் பக்கம் ஆர்வம் காட்டி தான் சினிமாவுக்குள் வந்தார். சினிமாவில் ஒரு கட்டத்துக்கு மேல பெருசா வாய்ப்புகள் வராததும், அவர் கொஞ்சம் பின்னால போய், தனிப்பட்ட வாழ்க்கையை கவனிக்க ஆரம்பிச்சார். இப்போ அவ்வப்போது தான் அவர் பற்றிய அப்டேட்கள் சோசியல் மீடியாவில் வெளியில் வருது.

இந்த புடவை போட்டோவை பார்த்த ரசிகர்களில் சிலர், "அப்போ இருந்த க்ளாமரும் அழகும் வேற லெவல்... இப்போ அம்மா மாதிரி மாறிட்டாரே"ன்னு சொல்றாங்க. இன்னொரு பக்கம், "இப்போ இருக்குற அந்த சிம்பிள், இயல்பான லுக்கும் ரொம்ப அழகா தான் இருக்கு" "இது தான் ரியல் லைஃப்"னு சிந்து துலானிக்கு ஆதரவா பேசுறவங்களும் இருக்காங்க.
மொத்தத்தில் பார்த்தா, 'மன்மதன்' படத்துல இளம் வயசுல பார்த்த சிந்து துலானியும், இப்ப புடவையில் ஒரு மேச்சூர்டான தோற்றத்தோட இருக்கும் சிந்து துலானியும் - ஒரே மனிதரின் வாழ்க்கையில் வந்த இரண்டு கட்டங்கள் தான். அந்த மாற்றம் தான் வாழ்க்கை. அதை பார்க்குற ரசிகர்களுக்கும் அது கொஞ்சம் நெகிழ்ச்சியும், கொஞ்சம் ஆச்சரியமும் கலந்து தான் தோணுது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications