Sirai Movie Secret: சிறை படத்தில் ஒவ்வொரு கேரக்டரின் பெயருக்கு பின்னாடி இருக்கும் ரகசியம்.. இது உங்களுக்கு புது தகவல்
சென்னை: சிறை படத்தில் நாம கவனிக்காம விட்ட நிறைய சீக்ரெட் டீடெயில்ஸ் எல்லாவற்றையும் கொஞ்சம் விரிவாக பார்ப்போம். இந்த படத்தில் சாதாரணமாக தெரிந்த பல விஷயங்களுக்கு பின்னணியில் இருக்கும் சம்பவங்களை தான் இந்த செய்தியில் பார்க்கப் போகிறோம்.
இது உண்மை
முதல்ல பெரிய விஷயம் என்னன்னா, இந்த படத்தோட ரைட்டர் - டைரக்டர் தமிழ், போலீஸ் ஆபீசரா இருந்தபோது நடந்த ஒரு உண்மை சம்பவம் தான் 'சிறை' படத்தோட மையம். அவர் ஒரு இன்டர்வியூலேயே சொல்லி இருப்பார் - "இது கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம்"ன்னு. அதனால தான் படத்துல 2002 - 2003 காலகட்டத்தை ரொம்ப கேர்ஃபுலா டீடெயிலிங் பண்ணி காட்டிருப்பாங்க.

கேரக்டர் நேம்லேயே இவ்வளவு அர்த்தம்
ஹீரோ - வி. கதிரவன் (விக்ரம் பிரபு)
இந்த 'வி. கதிரவன்'ன்னு பேர் சும்மா வைக்கல. முதல்ல கதை டிஸ்கஷன் பண்ணும்போது, ரைட்டர் தமிழ் பேரையே ஹீரோவுக்கு வைக்கலாம்னு யோசனை வந்திருக்கு. அப்புறம் "அது வேண்டாம்"னு மாற்றி, வெற்றிமாறன் பெயரை வைக்கலாம் என்று யோசித்து இருக்கிறார்கள் பிறகு வேண்டாம் என்று வெற்றிமாறன் பையன் பேரான கதிரவன்னு வைக்கலாம்னு முடிவு பண்ணி, அதிலிருந்து தான் வி. கதிரவன்னு வந்திருக்குது. ஒரு கேரக்டர் நேம்க்குள்ள இவ்வளவு பின்னணி இருக்கும்னு யாரு நினைப்போம்?
அப்துல் ரகூப் - உண்மையான ஹீரோ
படத்துல செகண்ட் ஹீரோ மாதிரி தோன்றினாலும், உண்மையில இந்த கதையோட மெயின் ஹீரோவே அப்துல் ரகூப் தான். ரியல் லைஃப்ல அந்த பையன் ஒரு ஹிந்து. ஆனா படத்துக்காக அவரை முஸ்லிம் கேரக்டரா மாற்றி இருக்காங்க. அது மட்டும் இல்ல, 'அப்துல் ரகூப்'ன்னு பெயர் கூட சும்மா தேர்வு பண்ணல.
1990கள்ல ஈழத்தமிழர்கள் போராட்ட காலத்துல, திருச்சியில ஒரு இளைஞர் ஈழத்தமிழர்களுக்காக தீக்குளிச்சு உயிர் விட்டார். அவர் பெயரும் அப்துல் ரகூப் தான். "ஈழ மக்களின் துயரம் தீரலனா ஆயிரம் அப்துல் ரகூப் எழுவாங்க"ன்னு முழக்கம் போட்டுட்டு உயிர் விட்ட அந்த சம்பவத்தை நினைவூட்ட தான் இந்த பெயரை பயன்படுத்தி இருக்காங்க. படத்துல ஜீப் சீன்ல போலீஸ் ஆபீசர் இதை சொல்லுவார் - அது சும்மா டயலாக் கிடையாது, வரலாறு.

காதர் பாஷா - போலீஸ் ஆபீசர்
இந்த கேரக்டர் கூட ரியல் லைஃப்ல தமிழ் சந்தித்த ஒரு முஸ்லிம் போலீஸ் ஆபீசரை அடிப்படையா கொண்டது தான். ஈழத்தமிழர்களுக்கான போராட்டத்தில் கலந்து கொண்ட போது, இயக்குனர் தமிழ் அரெஸ்ட் பண்ணி, பிறகு தனியா கூப்பிட்டு "நீங்களும் நானும் மனுஷன் தான், உங்களை ஜெயில்ல போடல"ன்னு சொல்லி லாரியில அனுப்பி விட்ட ஒரு போலீஸ் ஆபீசர் - அவரை மனசுல வைச்சுதான் காதர் பாஷா கேரக்டர்.
பாலாஜி - இன்ஸ்பெக்டர்
ஒரு சீன்ல லீவ் கேட்டு கிடைக்காம ஹீரோ போய் கேட்கும் இன்ஸ்பெக்டர் பாலாஜி. இது கூட ரியல் லைஃப்ல தமிழ் அனுபவிச்ச சம்பவமாம். ஒரு ஆபீசர் லீவ் கொடுக்க மாட்டேன்னு சொன்னது தான் இந்த கேரக்டருக்கு இன்ஸ்பிரேஷன். இது அவரே இண்டர்வியூல சொல்லிய விஷயம்.
மூணு மதமும் ஒரே படத்தில்
ஹீரோ - கதிரவன் (இந்து), அவர் மனைவி ஹீரோயின் - மரியம் (கிறிஸ்துவர் பெயர்), செகண்ட் ஹீரோ - அப்துல் ரகூப் (முஸ்லிம்) அவருடைய காதலி கலையரசி (இந்து) இது சும்மா தற்செயலா நடந்த விஷயம் இல்ல. மூணு மதத்தையும் ஒரே படத்துல வைத்து, "நாமெல்லாம் ஒன்னுதான்"ன்னு ஒரு சமத்துவ மெசேஜ் கொடுக்கணும்னு கேரக்டர் பெயர்களிலேயே சொல்லிட்டாங்க.
2003 பீரியட் டீடெயிலிங் - கவனிச்சீங்களா?
பஸ் ஸ்டாண்ட் சுவர்ல மூப்பனார் பிறந்தநாள் போஸ்டர், வீட்டுக்குள்ள காட்டுற கேலண்டர் - 2000, பின்னால சுவர்ல 'காக்க காக்க' மூவி போஸ்டர், கோர்ட்டு சீன்ல நியூஸ் பேப்பர்ல சச்சின் டெண்டுல்கர் டாக்ஸ் நோட்டீஸ் - இது 2003ல நடந்த உண்மை சம்பவம், இந்த எல்லாமே சேர்ந்து, "இந்த கதை 2002-2003 காலகட்டத்துல தான் நடக்குது"ன்னு சைலண்டா சொல்ற மாதிரி.
நீலோத்தி பாடல்
'நீலோத்தி'ன்னு ஒரு வார்த்தையே தமிழ்ல இல்ல. கவிஞர் சாரதி புதுசா உருவாக்கிய வார்த்தை. நீலம்ன்னா - அமைதி, மன நிம்மதி, ஆகாயம், கடல் மாதிரி முடிவில்லாத பெரும் வெளி. "எனக்கு மனசுக்கு நிம்மதி தருறவ நீ தான்"ன்னு சொல்ற சிம்பாலிக்கா தான் 'நீலோத்தி'.
பாட்டு வரிகள்
"மூசாவை தேடி ஈசன் கிட்ட துவாவும் செஞ்சு வணங்குனேன்" - இஸ்லாம் + ஹிந்து நம்பிக்கை ரெண்டையும் மிக்ஸ் பண்ணிய அருமையான வரி. அதுபோல, இருட்டறையில இருந்தவனா வெளிச்சம் காட்டின நம்பிக்கையும் நீ"- ஹீரோயின் வாழ்க்கையில வந்த வெளிச்சம்னு அர்த்தம்.
இந்த பாட்டு காதல் பாட்டு மாதிரி தோணினாலும், உள்ளுக்குள்ள மத ஒற்றுமை, நம்பிக்கை, மன நிம்மதி எல்லாத்தையும் பேசுது.
கோர்ட்டு ஃப்ரேம் - ஒரு சைலண்ட் மெசேஜ்
ஒரு பக்கம் ஹீரோயினி கோவிலில் சாமி கும்பிடுறார், இன்னொரு பக்கம் ஹீரோ தொழுது கொண்டிருக்கான் நடுவுல ஹீரோ நிக்குறார். இந்த ஒரு ஃப்ரேம் மூலமா தான் படம் சொல்ல வர்ற பெரிய விஷயம்.. அரசியல் எவ்வளவு பிரிச்சாலும், மனிதம் ஒன்னுதான்.
ரியல் லைஃப் காதல் ஜோடி
படத்துல "அவங்க இருவரும் சந்தோஷமா வாழ்றாங்க"ன்னு வாயால சொல்லிட்டு முடிச்சுடுவாங்க. ஆனா ரியல் லைஃப்ல என்ன ஆச்சுன்னு கேட்டா - ரைட்டர் தமிழ் சொன்னது, அவர் தான் டிரான்ஸ்ஃபர் ஆகி சென்னைக்கு போய்ட்டாரு. அதுக்கப்புறம் அந்த பையனுக்கு என்ன ஆச்சு, காதல் ஜோடி சேர்ந்தாங்களா இல்லையா - அவருக்கே தெரியல. அதனால தான் படத்துலயும் அந்த பகுதி ஓப்பனா விட்டுட்டாங்க.
'சிறை' படத்தை நம்ம ஒரு சாதாரண ஜெயில் ட்ராமா மாதிரி பார்த்துட்டு போயிருப்போம். ஆனா உள்ளுக்குள்ள பார்த்தா, ஒவ்வொரு கேரக்டர் நேம்க்கும் பின்னணி, ரியல் லைஃப் சம்பவங்கள், மத ஒற்றுமை மெசேஜ் என பல விஷயம் ஒளிந்து இருக்கிறது. இது தெரிஞ்ச பிறகு 'சிறை' படத்தை இன்னொரு தடவை பாருங்க. சாதாரண சீன்கள்ல கூட புதுசா புதுசா டீடெயில்ஸ் கண்ணுக்கு பட ஆரம்பிக்கும்.
-
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி -
ராதிகாவுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் செய்த நயன்தாரா.. ஷூட்டிங்கில் நடந்த சம்பவம், உருக்கமான போஸ்ட் -
யூத் படத்திற்கு வந்த பெரிய பிரச்சனை.. ஒரு பாடலால் வந்த வினை! கானா பாடகர் கொடுத்த புகார்! சிக்கலில் கென் கருணாஸ் -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
“இது சிம்பதிக்காக சொல்லல… இதுதான் ரியாலிட்டி!”.. காளிதாஸ் 2 விழாவில் நடிகர் பரத் எமோஷனல் -
நான் போலீஸ் படங்களை எடுக்காத காரணம் இதுதான்! ஸ்டேஷனுக்குள் இருக்கும் நிலை மாறனும்! பா ரஞ்சித் ஓபன் -
Durandar 2 : துரந்தர் 2 தமிழில் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்.. மாஸான வசூல்.. அடுத்தடுத்த சம்பவம்! -
துரந்தர் 2 வசூலில் அதிரடி… 2 நாளில் இத்தனை கோடி வசூல்! உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸ் புயல் சுற்றுதே -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு











Click it and Unblock the Notifications