Sirai Review: சிறை படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! ப்ளூ சட்டை மாறன் பாராட்டி இருக்கிறாரே!
சென்னை: நடிகர் விக்ரம் பிரபு முதன்மை வேடத்தில் நடித்துள்ள சிறை திரைப்படம் நாளை, டிசம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் எல்.கே. அக்ஷய் குமார், அனீஷ்மா அனில்குமார், ஆனந்த தம்பிராஜய்யா உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற சிறப்பு திரையிடலுக்குப் பிறகு, படம் குறித்த கருத்துகள் வெளியாகி வரும் நிலையில், பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "தமிழ் சினிமாவில் காவல்துறையை மிக நிஜத்திற்கு நெருக்கமாக காட்டிய படங்களில் டாணாக்காரன் முக்கியமானது. அந்த படத்தை உருவாக்கிய தமிழ், இந்த 'சிறை' படத்தின் கதை மற்றும் திரைக்கதையிலும் பணியாற்றியுள்ளார். அவர் நேரடியாக காவல்துறையில் பணியாற்றியவர் என்பதால், போலீஸ் பணியின் உள்ளார்ந்த விஷயங்கள் படத்தில் தெளிவாக வெளிப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

சிறை படத்தின் கதை
படத்தின் கதை குறித்து பேசும் போது, "விக்ரம் பிரபு ஆயுதப்படையில் தலைமை கான்ஸ்டபிளாக நடித்துள்ளார். அவருடன் இரண்டு காவலர்கள் உள்ளனர். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒரு இளைஞரை சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறைக்கு கொண்டு வருவது இவர்களின் பொறுப்பு.
அந்த பயணத்தின் போது கைதி தப்பித்தால் அல்லது ஏதேனும் விபரீதம் நடந்தால், அவர்களின் வேலைக்கு ஆபத்து ஏற்படும். அந்த இளைஞன் தப்பிக்க முயற்சிக்கிறானா? அவனுடைய நோக்கம் என்ன? அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதையின் மையம்" என்று விளக்கியுள்ளார்.
மேலும், "பயிற்சியை முடித்து பணியில் சேர்ந்த பிறகு காவல்துறையினரின் வேலை வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதையே இந்த படம் பேசுகிறது. நீதிமன்ற காட்சிகள் நன்றாக உருவாக்கப்பட்டுள்ளன. காதல் காட்சிகள் மட்டும் சற்று பழைய மாதிரியாக தெரிகிறது. ஆனால் போலீசாருக்குள் நடக்கும் உரையாடல்கள், அவர்கள் பயன்படுத்தும் தொழில்முறை மொழி எல்லாம் இயல்பாக இருக்கிறது" என கூறியுள்ளார்.
சிறை பட நடிகர்கள்
நடிப்பைப் பற்றி கருத்து தெரிவித்த ப்ளூ சட்டை மாறன், "படத்தில் நடித்த அனைவரும் தங்களது கதாபாத்திரங்களை சரியாக செய்துள்ளனர். சிறிய வேடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. விக்ரம் பிரபுவின் பாத்திரம் அவருக்கு நன்றாக பொருந்துகிறது. இந்த படத்தில் தனியாக கவனம் ஈர்க்கும் ஒரு காட்சி உள்ளது. அதில் நடித்துள்ள மூணாறு ரமேஷ், நடிப்பில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அவரது கதாபாத்திரமும், வசனங்களும் ரசிகர்களிடம் கைதட்டல் வாங்கும்" என்று தெரிவித்துள்ளார்.
ப்ளூ சட்டை மாறன் பாராட்டு
தொழில்நுட்ப அம்சங்களை பற்றி, "படத்தின் பின்னணி இசை பெரிய பலமாக இருக்கிறது. பாடல்கள் பெரிதாக மனதில் நிற்கவில்லை. சண்டைக் காட்சிகள் நேர்த்தியாக உள்ளது. ஒளிப்பதிவு, எடிட்டிங் உள்ளிட்ட அம்சங்களும் திருப்திகரமாக இருக்கிறது. படத்தில் மெல்லிய அளவில் மத அரசியல் பேசப்படுகிறது.
இளம் காதல் ஜோடியின் காட்சிகளை இன்னும் வலுவாக அமைத்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். இருப்பினும், 'சிறை' ஒரு ஓகே ரகமான படம்" என்று அவர் ரிவ்யூ செய்துள்ளார். எந்தப் படத்தை பார்த்தாலும் அதை கழுவி ஊற்றும் ப்ளூசட்டை மாறன் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்து இருக்கிறார். ப்ளூ சட்டை மாறனின் இந்த விமர்சனம் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications