விஜய் சேதுபதியின் தம்பி, சிறை படத்தில் எல்லோரையும் வெறுப்படைய வைத்த ரகு இசக்கி யார் தெரியுமா?
சென்னை: விக்ரம் பிரபு நடிப்பில், சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள படம் 'சிறை'. இந்தப் படத்தில் நாயகியின் அக்கா கணவராக, கோவிந்தராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ரகு இசக்கி, படம் ரிலீஸான பிறகு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்படும் நடிகர்களில் ஒருவராக மாறியிருக்கிறார்.
படத்தை பார்த்த பலருக்கும் "இந்த ஆளு ரொம்பவே எரிச்சலா இருக்கு", "இந்த கேரக்டர் செத்துப் போனாலும் பரவாயில்லை" என்கிற அளவுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது அந்த கதாபாத்திரம். ஆனால் இதை பற்றி இசக்கி சொல்வது வேற லெவல்.
"ரசிகர்கள் என்னை வெறுக்கிறாங்கன்னா, அது தான் எனக்கு கிடைத்த பெரிய பாராட்டு. அந்த கேரக்டரை சரியா செஞ்சிருக்கேன்னு அர்த்தம்," என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார்.

யார் இந்த இசக்கி
ரகு இசக்கி ஒரு நாள் திடீர்னு வந்து சினிமாவில் தோன்றியவர் கிடையாது. பாலு மகேந்திரா சினிமா பட்டறை, பாண்டிச்சேரியில் உள்ள ஆதிசக்தி தியேட்டர்ஸ் - இந்த இரண்டு இடங்களிலும் முறையான நடிப்பு பயிற்சி பெற்றவர்.
நடிகர் விவேக் முதன்முறையாக சீரியஸ் கேரக்டரில் நடித்த 'நான்தான் பாலா' படத்தில் தான் ரகு இசக்கி முதன்முதலாக அறிமுகமானார். ஆனால் ரசிகர்கள் அவரை உண்மையிலேயே கவனிக்க ஆரம்பித்தது விஜய் சேதுபதியின் 'தர்மதுரை' படத்தில் தம்பி கதாபாத்திரத்தில் நடித்த பிறகுதான்.
அதற்கு பிறகு பூஜை, கடைக்குட்டி சிங்கம், பரியேறும் பெருமாள், யாதும் ஊரே யாவரும் கேளிர், டிஎஸ்பி, சூது கவ்வும் 2 மாதிரி பல படங்களில் தொடர்ந்து நடித்துள்ளார்.
சவாலான கேரக்டர்
'சிறை' படத்தில் நடித்த அனுபவம் குறித்து ரகு இசக்கி சொல்வது ரொம்பவே இன்ட்ரஸ்டிங். "இந்த படத்துக்கு முதலில் போலீஸ் கேரக்டருக்குத்தான் ஆடிஷன் வச்சாங்க. அதுல என் நடிப்பு பிடிச்சு போய், பிறகு இந்த கிராமத்து குடிகாரன் கேரக்டரை கொடுத்தாங்க. உண்மையிலேயே சொன்னா, நான் நிஜ வாழ்க்கையில் மது குடிக்கவே மாட்டேன். ஆனா இந்த படத்தில் எப்போதும் குடிச்சுக்கிட்டு இருக்கிற மாதிரி நடிக்க வேண்டி இருந்தது. அதுதான் எனக்கு பெரிய சவால்."
Sirai movie box office: பாக்ஸ் ஆபிஸில் சாதனை செய்த 'சிறை’ ! பல மடங்கு லாபம்.. அதிகாரபூர்வமான அறிவிப்பு
ஒவ்வொரு நாளும் ஷூட்டிங்கில் அந்த கேரக்டரின் முக்கியத்துவம் புரிந்தபோது தான், "அடேங்கப்பா... இந்த ரோல் தான் படத்தோட ஒரு முக்கிய திருப்பமே" என்கிற அளவுக்கு அதில் மூழ்கி நடித்ததாகவும் அவர் சொல்கிறார்.

விக்ரம் பிரபு சொன்ன வார்த்தை
'சிறை' படத்தில் விக்ரம் பிரபுவுடன் இசக்கிக்கு நேரடி காம்பினேஷன் காட்சிகள் இல்லை. ஆனால் படம் பார்த்த பிறகு, விக்ரம் பிரபு அவரை போன் செய்து பாராட்டியிருக்கிறார். "படம் பார்த்துட்டு விக்ரம் பிரபு சார் என்னை பாராட்டினார். அதோடு 'வெளியே எங்கும் போயிடாதீங்க... மக்கள் உங்களை அடிச்சுடுவாங்க'ன்னு ஜாலியா சொன்னார்.
அந்த அளவுக்கு அந்த கேரக்டர் மக்கள் மனசுல கோபத்தை ஏற்படுத்தி இருக்குன்னு நினைக்கிறேன். அதுதான் என் வெற்றி என்று சொல்லி இருக்கிறார்.
சினிமா பிரபலங்களின் பாராட்டு
'சிறை' படத்தில் இசக்கியின் நடிப்பைப் பார்த்து நடிகர் சூரி, அருள்தாஸ், இயக்குநர்கள் பா. ரஞ்சித், வெங்கட் பிரபு, தமிழ், ஜி.என்.ஆர். குமரவேலன், ஒளிப்பதிவாளர் சுகுமார் உள்ளிட்ட பலரும் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்களாம்.
பெரிய பெரிய கலைஞர்கள் இப்படி பாராட்டும்போது, இனிமேல் இன்னும் நல்ல கேரக்டர்களை தேர்வு பண்ணணும்னு ஒரு பொறுப்பு வருது, என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் ரகு இசக்கி.

அடுத்தடுத்து வரும் படங்கள் & வெப் சீரிஸ்கள்
'சிறை' படத்திற்கு முன்னதாகவே லிங்கம்,மெட்ராஸ் மிஸ்ட்ரி மற்றும் நெட்பிளிக்ஸில் ஒரு வெப் சீரிஸ் என மூன்று வெப் சீரிஸ்களில் நடித்துள்ள இசக்கி, தற்போது அமேசான் பிரைமிலும் ஒரு முக்கிய வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.
அதேபோல், நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், 'குட் நைட்' மணிகண்டன் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். "சினிமாவாக இருந்தாலும் சரி, வெப் சீரிஸாக இருந்தாலும் சரி... கேரக்டர் வலுவா இருந்தா போதும். இரண்டுமே எங்களை மாதிரி நடிகர்களுக்கு ரொம்ப முக்கியம்," என்று சொல்கிறார்.
'சிறை' படத்தில் அவரது கேரக்டரை பார்த்து சிலர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். அதற்கும் ரகு இசக்கியின் பதில் கூல் தான்: "என் பெயர் தெரியாமலேயே 'இந்த கேரக்டர் ரொம்ப மோசம்'ன்னு விமர்சனங்களில் எழுதுறாங்க. அது கூட எனக்கு சந்தோஷம்தான்.
ஒரு கேரக்டர் மீது மக்களுக்கு கோபம் வருது என்றால், அந்த நடிப்பு அவர்களுக்குள்ள போய் உட்கார்ந்திருக்கிறது என்பதுதானே? என்று சந்தோஷமாக பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications