ஜனநாயகன், பராசக்தி போட்டியை விடுங்க! வருஷ பிறப்பு அதுவுமா, சிவகார்த்திகேயன் மனைவி நெகிழ்ச்சி போஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் - ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகியுள்ள பீரியட் டிராமா போராட்ட படம் 'பராசக்தி' ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்ப்பை ஏற்றிக் கொண்டே வருகிறது. வழக்கமான எண்டர்டெய்னர் பாதையை விட்டு, சமூக அரசியல் பின்னணியுடன் கூடிய தீவிரமான கதையை தேர்வு செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன் என்பதே இந்த படத்தின் முதல் ஹைலைட். இந்த நேரத்தில் சிவகார்த்திகேயன் மனைவி என்று வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

பராசக்தி படத்தில் இன்னொரு பெரிய ஆச்சரியம் என்னவென்றால், பல வருடங்களாக ஹீரோவாகவே பார்த்த ரவி மோகன் (ஜெயம் ரவி), இந்த முறையில் வில்லன் வேடத்தில் மிரட்ட காத்திருக்கிறார். "ஹீரோ vs ஹீரோ" மாதிரியான மோதல் தான் பராசக்தியில் பெரிய பிளஸ் ஆகும் என்கிற பேச்சு இப்போதே தொடங்கியிருக்கிறது. அதோடு நடிகர் முரளியின் மகன் அதர்வா முரளி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதும் படத்தின் வலுவை கூட்டுகிறது.

Sivakarthikeyan Parasakthi new year

ஜி.வி. பிரகாஷ் இசை என்பதால், பின்னணி இசையும் பாடல்களும் படத்தின் போராட்ட தன்மையை இன்னும் தீவிரமாக காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 10-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் பராசக்தி, பொங்கல் பாக்ஸ் ஆபிஸில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.

இந்த பரபரப்புக்கு நடுவே, புத்தாண்டை சிவகார்த்திகேயன் மிகவும் சாந்தமாக, குடும்பத்துடன் தொடங்கியிருக்கிறார். பராசக்தி வெற்றி பெற வேண்டும், அதற்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கும் பிரம்மாண்ட சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமும் சூப்பர் ஹிட் ஆக வேண்டும், 2026-ம் ஆண்டை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன், மனைவி ஆர்த்தியுடன் கோயிலுக்கு சென்று புத்தாண்டை வரவேற்றுள்ளார்.

வடபழனி முருகன் கோயிலில் அதிகாலையில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, "லேசான மழையுடன் இந்த ஆண்டு இனிமையாக தொடங்கட்டும்" என்று ரசிகர்களுக்கும் வாழ்த்துச் சொல்லியுள்ளார்.

இன்னொரு பக்கம், பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த வாரம் ஜனவரி 3, சனிக்கிழமை தாம்பரம் அருகே உள்ள சாய்ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் வழங்க, டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த விழாவில், பல முன்னணி பிரபலங்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயனின் 25வது பட விழா என்பதால், இந்த நிகழ்ச்சிக்கு தனி கவனம் கிடைக்கிறது.

இதற்கிடையில், டிவி திரையிலும் ஒரு சுவாரசியமான டிஆர்பி போட்டி உருவாகியுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை ஜீ தமிழில் விஜய்யின் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பாகும் நிலையில், அதற்குப் போட்டியாக பராசக்தி ஆடியோ லான்ச் அதே நாளில் மாலை 3 மணிக்கே ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Happy New Year 2026: புத்தாண்டை வாணவேடிக்கை கொண்டாட்டத்துடன் உற்சாகமாக வரவேற்ற மக்கள்!
அதே நாளில் சன் டிவியில் ரஜினிகாந்தின் சந்திரமுகி திரைப்படமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதால், எந்த நிகழ்ச்சி டிஆர்பியில் முன்னிலை பெறும் என்ற விவாதம் இப்போதே தொடங்கியுள்ளது.

மொத்தத்தில், பராசக்தி படம் மட்டும் இல்லாமல், அதன் ஆடியோ லான்ச், டிவி ஒளிபரப்பு, போட்டி விவாதங்கள் என அனைத்தையும் சேர்த்து சிவகார்த்திகேயனுக்கு இந்த பொங்கல் சீசன் முழுக்கவே ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது. படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா என்பதே இப்போது அனைவரும் காத்திருக்கும் முக்கிய கேள்வி. இது ஒரு பக்கம் இருந்தாலும் சிவகார்த்திகேயன் மற்றும் அவருடைய மனைவி வெளியிட்ட பதிவுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+