Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவகார்த்திகேயனின் "கம்மியான மூளை" வியப்பூட்டிய பேச்சு.. நிமிடத்தில் மொத்த அரங்கை நெகிழ வைத்த ஹீரோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயன் நேற்றைய தினம் கலந்து கொண்ட ஒரு விழாவில், தன்னுடைய ரசிகர்கள் எப்படி இருக்க வேண்டும் என தான் ஆசைப்படுவதாக பேசியிருக்கிறார்.. அதேபோல சோஷியல் மீடியாவில் தன்னுடைய பங்களிப்பு எப்படிப்பட்டது என்பது குறித்தும் தன்னுடைய பேச்சில் தெளிவாகவே சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இந்த பேச்சுதான் இணையத்தின் கவனத்தை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் மதராஸி படத்தின் வெற்றிக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார்.

Cinema Sivakarthikeyan Brain

இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது... எனவே பராசக்தி பட ப்ரோமோஷன்ஸ் விறுவிறுப்பாக ஆரம்பமாக போகிறது..

பராசக்தி - பிரம்மாண்டம்

இதற்கு பிறகு, சிபி சக்கரவர்த்தி டைரக்‌ஷனில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தெரிகிறது. SK24 படத்தின் ஷூட்டிங்கும் விரைவில் ஆரம்பமாகலாம் என்கிறார்கள்.. அதேபோல வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்டமான படத்தின் ஷூட்டிங்கும் துவங்கப்பட உள்ளதாக தெரிகிறது.

இதற்கு நடுவில் சிவகார்த்தியேன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும், அந்நிகழ்வுகளில் பேசிவருவதும் இணையத்தில் வைரலாகி வருகிறது..

பேன்லி ஆப் அறிமுகம்

சென்னை வடபழனியில் 'பேன்லி' (Fanly) எனும் செயலியின் அறிமுக விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் புல்லேலா கோபிச்சந்த், லட்சுமி நாராயணன், குகேஷ் தம்மராஜு, மணிகண்டன் தங்கரத்தினம் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு, புதிய ஆப்பை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் சிவகார்த்தியேன் பேசும்போது, "எனக்கு டெக்னாலஜி பற்றி எனக்கு அதிகம் தெரியாது. எனக்கு லேப்டாப் தந்தால் அதில் கீபோர்டில் ஒவ்வொரு எழுத்தையும் தேடுவேன். நான் மொபைலில் பாஸ்வேர்ட் எல்லாம் மறந்திருக்கிறேன். ஏனென்றால் அடிப்படையில் நான் ஒரு இன்ஜினியர். கோபிசந்த் சார், மணிகண்டன் சார், உலக சாம்பியன் குகேஷ் உங்களுடன் இணைந்து இந்த மேடையை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.

கம்மியான மூளை நல்லது

இந்த மேடையில் இருப்பவர்களை ஒப்பிடும்போது எனக்குத்தான் கொஞ்சம் மூளை கம்மி என நினைக்கிறேன். அதனால்தான் நடிக்க முடிகிறது. மூளை ரொம்ப ஜாஸ்தியா இருந்தா நான் இயக்குநர்களையெல்லாம் டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிருவேன்னு நினைக்கிறேன். அதனால அவங்க சொல்றத கேட்டு நடிக்கிற ஆளா இருக்கறதுக்கு மூளை கொஞ்சம் கம்மியா இருக்கிறதே நல்லதுதான்!" என்றெல்லாம் பேசினார்..

மிகவும் இயல்பாகவும், நேர்மையாகவும், தன்னுடைய பயணத்தையும் ரசிகர்களிடம் உள்ள பாசத்தையும் சிவகார்த்திகேயன் இவ்வாறு ஷேர் செய்திருப்பது, இணையத்தின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

ரசிகர்கள் - நண்பர்கள்

எப்போதுமே நான் எனது ரசிகர்களை சகோதர, சகோதரிகளே என்றுதான் சொல்வேன். அவர்கள் என் குடும்பம். இந்த ஃபேன்லி பெயரை கேட்டால் ஃபேமிலி என்பதுபோல கேட்கிறது. அப்படி அழகான பெயரை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

என்னை ஆராதிக்கும் ரசிகர்கள் எனக்கு வேண்டாம். அவர்கள் கடவுளையும் தாய் தந்தையை மட்டும் வழிபட்டால் போதும். என்னுடன் ஒரு சகோதரனைப்போல பழகக்கூடிய ரசிகர்கள்தான் எனக்கு இருக்க வேண்டும் என நினைப்பேன். அதற்கு ஏற்றாற்போல் ஒரு தளம் இருக்கிறது என்பதில் மகிழ்ச்சி.

சோஷியல் மீடியா தகவல்கள்

சோஷியல் மீடியா என்றாலே தேவையில்லாத விஷயங்களை தருகிறது என்ற பயம் இங்கு உருவாகி உள்ளது.. நான் சோஷியல்மீடியாவில் எல்லாவற்றிலும் இருக்கிறேனே தவிர, எதையும் பயன்படுத்துவதில்லை...

இதற்கென்று தனி ஆட்கள் இருக்கிறார்கள். இன்ஸ்ட்டா மட்டும் பயன்படுத்தி வந்தேன், ஆனால் கை தவறி ரீபோஸ்ட் செய்துவிடுவேன் என்ற பயத்தில் இப்போது அதையும் யூஸ் பண்ணுவதில்லை.

அதுமட்டுமல்ல, சோஷியல் மீடியாவில் ஷேர் செய்யப்படும் தகவல்கள் சரியானதா? என்ற சந்தேகமும் உள்ளது.. ஆனாலும், நெகட்டிவ் விஷயங்களுக்கு மட்டும் எப்போதுமே வரவேற்பு இருக்கிறது.. கன்டென்ட்க்கு முக்கியத்துவம் தரப்படுகின்றன..

ஆனால், இது எதுவுமே இல்லாமல் ஒரு ஆப் கொண்டுவர முடியும் என்கிறது இந்த குழு.. நிறைய எதிர்மறை எண்ணங்கள் பரவிவரும் இன்றைய சூழலில் அவைகளை தவிர்த்து, நேர்மறையான மனநிலை ரசிகர்கள் மத்தியில் இருக்க வேண்டும் என்ற யோசனையில் இந்த ஆப் வருவது எனக்கு மகிழ்ச்சியான விஷயம்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+