அப்போ அது கன்ஃபார்ம் தான் போல.. படையப்பா படத்தை தியேட்டரில் பார்த்த சிவகார்த்திகேயன்.. பராசக்தி!
சென்னை: விஜய்யின் ஜன நாயகன் உடன் சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் நேரடியாக மோதப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் இருந்தே அதை தவிர்த்து வரும் நிலையில், தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பில் மறுபடியும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்தபடி ஜனவரி 14ம் தேதி தான் என்பது உறுதியாகி உள்ளது.
மேலும், வரும் டிசம்பர் 18ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் பராசக்தி சிறப்பு நிகழ்ச்சி நடைபெறப் போவதாக அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், திரையரங்குகளில் சுமார் 15.5 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டிய படையப்பா ரீ ரிலீஸ் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தியேட்டருக்குச் சென்று ரசிகர்களுடன் பார்த்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
தியேட்டரில் படையப்பா பார்த்த சிவகார்த்திகேயன்: ரஜினி முருகன், மாவீரன் என சூப்பர் ஸ்டாரை தனது படங்களில் ரெஃபரன்ஸாகவும் ரஜினிகாந்தின் டைட்டிலை தனது படங்களுக்கும் வைத்து தான் எப்போதுமே தலைவர் ஃபேன் என வெளிப்படுத்தும் வரும் சிவகார்த்திகேயன் தியேட்டரில் படையப்பா ரீ ரிலீஸ் படத்தை பார்த்துக் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. சிவகார்த்திகேயன் புரொடக்ஷன் இணை தயாரிப்பாளர் கலையரசன் இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஜன நாயகனை முந்தும் பராசக்தி: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா உள்ளிட்ட பலர் நடித்துள்ள பராசக்தி படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதுவரை வெளியான பாடல்கள் அனைத்தும் படத்துக்கு மிகப்பெரிய பலமாகவே அமைந்துள்ளது. ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா இந்த மாதம் இறுதியில் டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ள நிலையில், வரும் டிசம்பர் 18ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் பராசக்தி படத்தின் பிரத்யேக 10 நிமிட வீடியோ வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பராசக்தி ஆடியோ லாஞ்சில் ரஜினி?: வரும் ஜனவரி 4ம் தேதி பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் அந்த இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கப் போவதாகவும் தகவல்கள் பரவி வரும் நிலையில், சிவகார்த்திகேயன் படையப்பா படத்தை தியேட்டரில் பார்த்து கொண்டாடும் புகைப்படங்களும் வெளியாகி உள்ள நிலையில், கண்டிப்பாக பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடக்கப்போவது உறுதி என்றே தெரிகிறது. டிசம்பர் 18ம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியே பிரம்மாண்டமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications