கா* தொல்லை செய்யும், மனைவியின் அக்கா, அம்மா! இப்படி ஒரு படம் தமிழில் ரிலீஸ்! கொடுமை
சென்னை: கடந்த வாரம் தியேட்டர்களில் வெளியான "ஸ்வீட்டி நாட்டி கிரேசி" படம், ரிலீஸுக்கு முன்பே சர்ச்சை பேச்சு கிளப்பியிருந்தாலும், இப்ப படம் பார்த்த பிறகு அடக்கொடுமையே என்று சொல்வது போல தான் இருக்கிறது. ஹீரோயினி கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் அவருடைய அக்காவும், அம்மாவும் ஹீரோவால் கர்ப்பம் ஆகுறாங்க.. ஹீரோ பொண்டாட்டிக்கு உண்மையாக இருக்கணும்னு நினைச்சாலும் ஹீரோயினியோட அம்மாவும், அக்காவும் விடாமல்.. லவ் டார்ச்சர் வேற கொடுக்கிறாங்க.. கேட்கும் போது தலையே சுத்துதா...? இப்படியாக குடும்ப உறவுகள் காட்டப்பட்ட விதம் தான் பலரின் கோபத்துக்கும் கவலைக்கும் காரணமாகியுள்ளது.
அருண் விஷுவல்ஸ் தயாரிப்பில் கோவை ரமேஷ் தயாரித்துள்ள இந்த "ஸ்வீட்டி நாட்டி கிரேசி" படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. த்ரிகுண் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தில் இனியா, ஜீத்தா கோஷ், (சுந்தரா ட்ராவல்ஸ்) ராதா, ரவி மரியா, தம்பி ராமையா, சத்யன், சாம்ஸ், ஆலி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

வாகை சூடவா நடிகை இனியா
ஒருகாலத்தில் 'வாகை சூடவா' படத்தில் இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்த இனியா, இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட அவதாரத்தில் தோன்றியிருப்பது பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. குறிப்பாக படுக்கையறை காட்சிகளில் அவர் காட்டிய தாராளம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. "அந்த சிம்பிள் இனியாவா இது?" என்று பலரும் கேட்கின்றனர்.
ஸ்வீட்டி நாட்டி கிரேசி கதை
படம் 'அடல்ட் காமெடி' என்ற லேபிளோடு வந்தாலும், கதை போகும் திசையை பார்த்த ரசிகர்கள் பலரும் தலையை பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் அனாதை ஹீரோ - பணக்கார வீட்டுப் பெண் காதல் என சாதாரணமாக செல்லும் கதை, பிறகு அந்த ஹீரோவுக்கு டியூஷன் டீச்சர், ஆன்ட்டியுடன் இருந்த கனெக்சன் காதலிக்கு தெரிகிறது. அதையும் ஹீரோ தான் அவரிடம் சொல்கிறார், ஹீரோ தனக்கு இருந்த முன்னாள் ரிலேஷன்ஷிப் பற்றி எல்லாம் தன்னிடம் சொல்லிவிட்டாரே என்று அவரை ஹீரோயினி கல்யாணம் செய்து கொள்கிறார்.
அதற்குப் பிறகு வரும் குடும்ப ட்விஸ்ட்கள் என போகும்போது தியேட்டரிலேயே சிரிப்பா, ஷாக்கா என்று தெரியாத நிலை ஏற்பட்டதாக சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ட்விட்டர் ரிவ்யூ
கல்யாணத்துக்குப் பிறகு அந்த டீச்சர் ஹீரோயினின் அக்காவாகவும், அந்த ஆன்ட்டி ஹீரோயினியின் அம்மாவாகவும் மாறும் திருப்பம் வந்தவுடன், "இது கதை எழுதும்போது யாராவது 'கட்' சொல்லலையா?" என்று பலர் மனக்குமுறலை கொட்டி வருகின்றனர். அதுவும் கிளைமாக்ஸில் மூவரும் கர்ப்பமாகும் காட்சி - இதுவே தற்போது அதிகமாக பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.
படத்தை பார்த்த ஒரு ரசிகர் போட்ட பதிவு வைரலாகி வருகிறது. "படம் பார்த்ததும் கண்களை கழுவணும்னு தோணுச்சு... இது சினிமாவா இல்ல சமூகச் சீரழிவா?" என்று கடுமையாக விமர்சித்துள்ளார். "2K கிட்ஸை இப்படித்தான் காட்ட வேண்டுமா?" என்ற கேள்வியும் அந்த பதிவில் இடம் பெற்றுள்ளது. Part-2 வருமாம் என்ற தகவலுக்கே பலர் கலாய்த்து, "இன்னும் என்ன ட்விஸ்ட் வைக்கப் போறாங்க?" என்று கேட்டு வருகின்றனர்.

அடல்ட் காமெடி படம்
மறுபுறம், சிலர் "A சான்றிதழ் படம்... அதற்கேற்ற ஆடியன்ஸ்க்கு தான் இது" என்று கூறி படத்தை ஜஸ்டிஃபை செய்து வருகின்றனர். ஆனால் குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் இந்தப் படம் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது என்பது உண்மை.
ஒருகாலத்தில் நல்ல கதைகளில் நடித்த இனியா இப்படி ஒரு சர்ச்சை படத்தில் நடிக்க வேண்டிய நிலை ஏன்?அடல்ட் காமெடி என்ற பெயரில் இவ்வளவு மோசமான கதையா? பப்ளிசிட்டிக்காகவே இவ்வளவு அதிரடி ட்விஸ்ட்களா? என்ற கேள்விகளை கிளப்பியபடியே தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது ஸ்வீட்டி நாட்டி கிரேசி.
தமிழ்நாட்டு கலாச்சாரத்தில் மனைவியின் அம்மா என்றால் "அம்மா" என்றே அழைப்பார்கள். அது ஒரு மரியாதை, ஒரு பாசம், ஒரு குடும்ப இணைப்பு. அதேபோல் மனைவியின் அக்கா அண்ணி என்றால் பலருக்கும் இன்னொரு அக்கா... அவரும் அம்மா மாதிரி. அந்த அளவுக்கு உயர்ந்த இடம் அந்த உறவுக்கு கொடுக்கப்படுகிறது. அந்த மாதிரியான உறவுகளை காமெடி பெயரில் வேறு கோணத்தில் காட்டுவது ரசிகர்களை கடுமையாக பாதித்திருக்கிறது.
"சினிமாவுக்கு சுதந்திரம் இருக்கலாம்... ஆனால் அதற்கு எல்லை இல்லையா?""எதை வேண்டுமானாலும் 'அடல்ட் காமெடி'ன்னு சொல்லி காட்டலாமா?" என்ற கேள்விகள் தொடர்ந்து எழுகிறது.
-
விஜய் எனக்காக செய்ததை மறக்க முடியாது! அதுவும் அந்த நேரத்தில்.. உருக்கமாக பேசிய சத்யராஜ் -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
இந்தியன் பாகிஸ்தானில் உளவாளியானால் ஹீரோ.. அவங்க இங்க வந்தா தீவிரவாதியா? துரந்தர் பற்றி அமீர் சர்ச்சை பேச்சு -
பட விழாவில் ஜனநாயகன் மற்றும் துரந்தர் படத்தை விமர்சித்த வெற்றிமாறன்.. இவ்வளவு ஓபனா பேசிட்டாரே! -
Happy Raj Review: ஹேப்பி ராஜ் கதை இதுதான்.. ஆனால் இப்படி பண்ணலாமா? ப்ளூ சட்டை மாறன் ஓபன் ரிவ்யூ -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்












Click it and Unblock the Notifications