Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Box Office : நேற்றைய ரிலீஸில் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி யாருக்கு? பரிதாப நிலையில் ‘இந்த’ படம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் பிப்ரவரி மாதத்தின் முதல் வாரமே பெரிதாக எந்த உற்சாகத்தையும் உருவாக்காமல் டல்லாக தொடங்கியுள்ளது. பொங்கல் ரிலீஸ் படங்கள் வரிசையாக ஓடிடி தளங்களில் வெளியாகி வரும் நிலையில், தியேட்டர்களுக்கு ரசிகர்களை இழுத்து வர புதிய படங்கள் தவறி வருகின்றன. முகம் தெரியாத நடிகர்களின் படங்களாக இருந்தாலும், சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களாக இருந்தாலும், இந்த வாரம் ரசிகர்கள் தியேட்டருக்கு சென்று பார்க்க அதிக ஆர்வம் காட்டவில்லை.

வெள்ளிக்கிழமை வெளியான படங்களாக சிலம்பரசனின் 'சிலம்பாட்டம்' ரீ ரிலீஸ், அபிஷன் ஜீவிந்த் நடித்த 'வித் லவ்', சாய் தன்ஷிகாவின் 'யோகி டா' மற்றும் 'ரெட் லேபிள்' ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகின. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு எந்த படமும் ஓப்பனிங் டே-லேயே பெரிய வசூல் வேட்டை நடத்தவில்லை என்பதே நிலவரம்.

Tamil movie Box Office Tamil Cinema

வித் லவ் படம் வசூல்

செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில், நல்ல புரமோஷனுடன் வெளியான 'வித் லவ்' படம் தான் இந்த வார ரிலீஸ்களில் ஓரளவுக்கு மல்டிபிளக்ஸ் தியேட்டர்களையும் பெரிய தியேட்டர்களையும் காப்பாற்றிய படமாக அமைந்துள்ளது. செலிபிரிட்டி ஷோ, முன்கூட்டியே நடத்தப்பட்ட புரமோஷன் போன்றவை ரசிகர்களை ஓரளவு தியேட்டருக்கு வரவழைத்துள்ளது.

ஹவுஸ்ஃபுல் ஷோக்களாக படம் ஓடவில்லை என்றாலும், மற்ற படங்களை விட 'வித் லவ்' படத்துக்கு இந்த வாரம் ரசிகர்களின் கவனம் அதிகமாக உள்ளது. முதல் நாள் வசூலாக இந்தியாவில் 1.5 கோடி ரூபாய், உலகளவில் 1.75 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சனி, ஞாயிறு வசூலில் பிக்கப் எதிர்பார்ப்பு

'டூரிஸ்ட் ஃபேமிலி' மூலம் இயக்குநராக கவனம் பெற்ற அபிஷன் ஜீவிந்த் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். சனிக்கிழமை பல மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங் ஓரளவு பிக்கப் ஆகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் சனி, ஞாயிறு தினங்களில் தலா 2 கோடிக்கு மேல் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால், 'டூரிஸ்ட் ஃபேமிலி' அளவுக்கு வசூல் வேட்டை நடத்துமா என்பது இன்னும் சந்தேகமே என வர்த்தக வட்டாரங்கள் கூறுகின்றன.

யோகி டா வசூல்

விஷாலின் வருங்கால மனைவியும் நடிகையுமான சாய் தன்ஷிகா நடித்த 'யோகி டா' படம் முதல் நாளில் வெறும் 17 லட்சம் ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தொடர்ச்சியாக சில படங்கள் வெற்றியளிக்காத நிலையில், இந்த படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டாலும், முதல் நாள் வசூல் அந்த நம்பிக்கையை உடைத்துவிட்டது. படத்துக்கான வாய் வழி விளம்பரம் அடுத்த நாட்களில் வசூலை உயர்த்துமா என்பதே கேள்வியாக உள்ளது.

ரெட் லேபிள் வசூல்

சாய் தன்ஷிகாவின் 'யோகி டா' படத்தை விடவும் மிக மோசமான ஓப்பனிங்கை பெற்ற படம் 'ரெட் லேபிள்'. லெனின் தயாரித்து நடித்த இந்த படம் முதல் நாளில் வெறும் 3 லட்சம் ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. குறைந்த புரமோஷன், குறைந்த திரையரங்கு எண்ணிக்கை ஆகியவை படத்தின் வசூலை பெரிதும் பாதித்துள்ளதாக திரையரங்கு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிலம்பாட்டம் ரீ ரிலீஸ் வசூல்

சிலம்பரசன் நடித்த 'சிலம்பாட்டம்' படம் ரீ ரிலீஸாக வந்தாலும், பெரிய வசூல் வேட்டை நடத்தவில்லை என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன. ரீ ரிலீஸ் படங்களுக்கு சமீப காலமாக நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும், இந்த வாரம் அந்த மாஜிக் வேலை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில், பிப்ரவரி முதல் வாரம் தமிழ் சினிமாவுக்கு பாக்ஸ் ஆபீஸில் ஏமாற்றமே. பொங்கல் ரிலீஸ் படங்கள் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை அங்கே திருப்பியுள்ளன. புதிய படங்களில் பெரிய நட்சத்திரங்கள் இல்லாததும், புரமோஷன் பலமாக இல்லாததும் தியேட்டர் வருகையை குறைத்துள்ளது. வரும் வாரங்களில் பெரிய படங்கள் அல்லது வலுவான வாய் வழி பாராட்டு கிடைக்கும் படங்கள் வந்தால்தான் தியேட்டர்களில் மீண்டும் ஓரளவு உயிர் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+